முதல்வர் விஜய்யுடன் ராகுல் காந்தி திடீர் சந்திப்பு.. கூட்டணி தலைவர்கள் பங்கேற்கவில்லை.. பின்னணி என்ன!
CM Joseph Vijay Rahul Gandhi Meet : சென்னையில் தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யுடன், மக்களவை எதிர்க் கட்சித் தலைவர் ராகுல் காந்தி இன்று சந்திப்பு மேற்கொண்டார். இந்த சந்திப்பில் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது.
காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி இன்று சனிக்கிழமை ( அக்டோபர் 10- ஆம் தேதி) தமிழகம் வந்துள்ளார். அவர், சென்னை அருகே உள்ள பனையூரில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும், முதல் அமைச்சருமான ஜோசப் விஜயின் வீட்டுக்கு சென்றார். அங்கு, அவரை முதல்வர் விஜய் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். அப்போது, மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளில் தமிழக வெற்றி கழகம் வெற்றி பெற்றதற்கு முதல்வர் ஜோசப் விஜய்க்கு, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து, ராகுல் காந்திக்கு, முதல்வர் விஜய் மதிய விருந்து அளித்தார். இதை தொடர்ந்து, இருவரும் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.
முதல்வர் ஜோசப் விஜய்- ராகுல் காந்தி ரகசிய ஆலோசனை
இதில், தமிழக வெற்றிக் கழகம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் கூட்டணி தலைவர்கள் யாரும் பங்கேற்கவில்லை. இந்த கூட்டத்தில் என்ன பேசப்படுகிறது என்ற தகவல்கள் வெளியாகவில்லை. இருப்பினும், தமிழக வெற்றி கழகம் தலைமையில் மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றி கூட்டணி அமைந்துள்ள நிலையில், இந்த கூட்டணி நிலவரம் குறித்து இருவரும் பேசி வருவதாக கூறப்படுகிறது. டெல்லியில் எஸ். ஐ. ஆர்- க்கு ( சிறப்பு தீவிர திருத்த பணி) எதிராக காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் மேற்கொண்டு வருகிறது.
மேலும் படிக்க: “முதலமைச்சர் அறையில் இப்படி செய்தது தவறான முன்னுதாரணம்”.. திமுக பரந்தாமன் கடும் கண்டனம்!




மசநீவெ கூட்டணியின் அடுத்தக்கட்ட நகர்வு
இந்த நிலையிலும், தமிழகத்தில் நடைபெற்ற மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் தமிழக வெற்றி கழகம் வெற்றி பெற்ற நிலையிலும் இந்த சந்திப்பானது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. அத்துடன், மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றி கூட்டணியின் அடுத்த கட்ட நகர்வு குறித்தும் பேசப்பட்டு வருவதாக தெரிகிறது. தமிழக சட்டமன்ற பொது தேர்தலின் போது திமுக கூட்டணியில் அங்கம் வகித்து தேர்தலை சந்தித்த காங்கிரஸ், விசிக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் தேர்தல் முடிவுகளுக்கு பின்னர் தமிழக வெற்றி கழக கூட்டணியில் இணைந்தது.
தவெக தலைமையிலான கூட்டணி
இதில் கம்யூனிஸ்ட் கட்சிகள் மட்டும் வெளியில் இருந்து ஆதரவு அளிக்கிறது. அத்துடன், தவெக தலைமையில் அண்மையில் நடைபெற்ற கூட்டணி கட்சி தலைவர்கள் கூட்டத்தில் தவெக தலைமைலான கூட்டணிக்கு மதச்சார்பற்ற சமூக நீதியை வெற்றி கூட்டணி என பெயரிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்வை தொடர்ந்து, முதல்வர் விஜயும், ராகுல் காந்தியும் சந்தித்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க: “CM விஜய் பிரசாரம் செய்ததை சொல்றாங்களே.. அப்போ இவங்க பண்ணதெல்லாம் என்ன?”.. வைகோ காட்டமான கேள்வி!