AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

நள்ளிரவில் Boy Friend உடன் பேசிய மாணவி.. திடீரென நகை பறித்து சென்ற கும்பல்.. நெல்லையில் பகீர் சம்பவம்!

Nellai Roperry 3 Arrest : நெல்லை மாவட்டத்தில் நள்ளிரவில் ஆண் நண்பருடன் பேசிக் கொண்டிருந்த மாணவியிடம் நகை மற்றும் செல்போனை பறித்து சென்ற புகாரில் 2 சிறுவர்கள் உள்பட 3 பேரை டவுன் போலீசார் அதிரடியாக கைது செய்து சிறையிலடைத்தனர்.

நள்ளிரவில் Boy Friend உடன் பேசிய மாணவி.. திடீரென நகை பறித்து சென்ற கும்பல்.. நெல்லையில் பகீர் சம்பவம்!
மாதிரி புகைப்படம்
Gowtham Kannan s
Gowtham Kannan S | Updated On: 09 Oct 2026 17:39 PM IST

நெல்லை மாவட்டத்தை சேர்ந்தவர் 15 வயது பள்ளி மாணவி. இவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது ஆண் நண்பருடன் நள்ளிரவில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது, அங்கு பைக்கில் வந்த மர்ம நபர்கள் மூன்று பேர் அந்த மாணவியை மிரட்டி அவரிடம் இருந்த 4 பவுன் தங்க சங்கிலி மற்றும் 2 கிராம தங்க கம்மல் ஆகியவற்றை பறித்துக் கொண்டு, ஆண் நண்பரிடம் செல்போனையும் பிடுங்கிக் கொண்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதனால், அச்சமடைந்த அந்த மாணவி மற்றும் அவரது ஆண் நண்பர் ஆகியோர் இது தொடர்பாக பெற்றோரிடமும், போலீசார் இடமும் புகார் தெரிவிக்காமல் இருந்து வந்தனர். ஆனால், இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் நெல்லை மாநகர காவல் ஆணையர் தேஷ்முக்சேகர் சஞ்சய் குற்றவாளிகளை பிடிக்க உத்தரவு பிறப்பித்தார்.

குற்றவாளிகளை பிடிக்க நெல்லை ஆணையர் உத்தரவு

அதன் அடிப்படையில், நெல்லை டவுன் போலீசார் பாதிக்கப்பட்ட மாணவி குறித்து விசாரணை மேற்கொண்டனர். அதன் அடிப்படையில், சம்பந்தப்பட்ட மாணவியரிடம் புகாரை பெற்ற போலீசார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். மேலும், சம்பவம் நடந்த பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர். அதில், மர்ம நபர்களின் உருவம் பதிவாகி இருந்தது. அத்துடன், அந்த நபர்களின் அடையாளங்கள் குறித்து மாணவியிடம் விவரங்களை கேட்டு பெற்றனர்.

மேலும் படிக்க: திண்டுக்கல் பள்ளி குடிநீர் தொட்டியில் மனித கழிவு.. இந்த கொடூஞ் செயலை செய்தது இவர்களா? போலீஸ் விசாரணையில் ஷாக் தகவல்!

2 சிறுவர்கள் உள்பட 3 பேர் கைது

அதன் அடிப்படையில், போலீசார் நகை பறிப்பில் ஈடுபட்ட மர்ம நபர்களை தீவிரமாக தேடி வந்த நிலையில் அவர்கள் குறித்த விவரம் போலீசாருக்கு தெரிய வந்தது. அதன் அடிப்படையில், மாணவியிடம் நகை பறித்த நபர்கள் மானூர் அருகே உள்ள தென்பத்து கிராமத்தை சேர்ந்தவர்கள் என்பது உறுதி செய்யப்பட்டது. அதன்படி, அந்த கிராமத்தை சேர்ந்த சுரேஷ் ( 26 வயது) மற்றும் 2 சிறுவர்களை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். தொடர்ந்து, அவர்களை டவுன் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

கூர் நோக்க இல்லம்- பாளை சிறையில் அடைப்பு

இதில், அவர்கள் மூன்று பேரும் ஒரே பைக்கில் சம்பவத்தன்று இரவு அந்த வழியாக சென்றபோது தனியாக பேசிக் கொண்டிருந்த மாணவியை பார்த்த அவர்கள், அந்த மாணவியிடம் திடீரென நகைப் பறிப்பில் ஈடுபட்டதை ஒத்துக் கொண்டனர். இதைத் தொடர்ந்து, அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு, சுரேஷ் பாளையங்கோட்டை மத்திய சிறையிலும், 2 சிறுவர்கள் கூர்நோக்கு இல்லத்திலும் அடைக்கப்பட்டனர்.

மேலும் படிக்க: காதல் மனைவி அளித்த பரபரப்பு புகார்.. பரமக்குடி டிஎஸ்பி ஜாபர் சித்திக் திடீர் கைது.. காவல்துறையில் பரபரப்பு!

Follow Us