மதுராந்தகம்- தாராபுரம் இடைத்தேர்தல்.. நாதக- கம்யூனிஸ்ட் கட்சிகள் டெபாசிட் இழப்பு.. வாக்கு சதவீதம் என்ன!
NTK And Communist Parties Lost Deposit : மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளில் நாம் தமிழர் கட்சி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளின் வேட்பாளர்கள் 6- இல் ஒரு பங்கு வாக்குகள் வாங்காத காரணத்தால் டெபாசிட் இழந்தனர்.
தமிழகத்தில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்ற தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், இரு தொகுதிகளிலும் தமிழக வெற்றி கழகத்தின் வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். இவர்களை எதிர்த்து போட்டியிட்ட நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளின் வேட்பாளர்கள் பெரும் தோல்வி அடைந்ததுடன், டெபாசிட் தொகையையும் இழந்துள்ளனர். மதுராந்தகம் சட்டமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் ஜானகிராமன், தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் கார்த்திகா ஆகியோர் போட்டியிட்டனர்.
டெபாசிட் இழந்த நாதக- கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்கள்
இதே போல, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தாராபுரத்தில் லட்சுமணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மதுராந்தகத்தில் சுகந்தி ஆகியோர் போட்டியிட்டனர். இவர்களில், நாதக வேட்பாளர் ஜானகிராமன் 2,119 வாக்குகளும் ( 1.15 சதவீதம்), கார்த்திகா 5,268 வாக்குகளும் பெற்றிருந்தனர். இதே போல, இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் லட்சுமணன் 1,157 வாக்குகளும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் சுகந்தி 1152 வாக்குகளும் பெற்றுள்ளனர். இவர்கள் தேர்தலில் பதிவான மொத்த வாக்குகளில் 6- இல் ஒரு பங்கு வாக்குகள் பெறாத நிலையில் அவர்கள் செலுத்திய டெபாசிட் தொகையை இழந்துள்ளனர்.
மேலும் படிக்க: காதல் மனைவி அளித்த பரபரப்பு புகார்.. பரமக்குடி டிஎஸ்பி ஜாபர் சித்திக் திடீர் கைது.. காவல்துறையில் பரபரப்பு!




புதுச்சேரியிலும் டெபாசிட் இழந்த நாதக- திமுக
இதேபோல, புதுச்சேரி மாநிலம், தட்டாஞ்சாவடி தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் கார்த்திக் குமாரி ( 171 வாக்குகள்) மற்றும் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர் சேர்ந்து செல்வம் (2,664 வாக்குகள்) ஆகியோரும் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர். இவர்களுடன் சேர்ந்து போட்டியிட்ட மதுராந்தகத்தில் திமுக வேட்பாளர் பரந்தாமன் 48 ஆயிரத்து 516 வாக்குகளும், கணிதா சம்பத் 42 ஆயிரத்து 280 வாக்குகளும் பெற்றனர். தாராபுரத்தில் திமுக வேட்பாளர் சுகன்யா 57 ஆயிரத்து 370 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் பானுமதி 45 ஆயிரத்து 750 வாக்குகளும் பெற்றனர்.
டெபாசிட்டை தக்க வைத்த திமுக- அதிமுக
இவர்கள் பெற்ற வாக்குகள் மொத்த வாக்குகளில் 6- இல் ஒரு பங்குக்கு மேல் உள்ள காரணத்தால் டெபாசிட்டை தக்க வைத்தனர். தாராபுரத்தில் மொத்தம் 1,406 தபால் வாக்குகள் பதிவான நிலையில் அதிகபட்சமாக திமுகவுக்கு 613 வாக்குகள் கிடைத்து இருந்தன. அதிமுகவுக்கு 406 தவெகவுக்கு 255, நாம் தமிழர் கட்சிக்கு 19, கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு 7 தபால் வாக்குகள் பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: Puducherry Bypoll Result: தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல்.. என். ஆர். காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி!