AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

போலீஸுக்கு தண்ணி காட்டிய போக்சோ கைதி.. 3 ஆயுதப்படை காவலர்கள் மீது பாய்ந்த நடவடிக்கை.. கன்னியாகுமரியில் பரபரப்பு!

Kanyakumari Armed Reserve Police Suspend : கன்னியாகுமரி மாவட்டத்தில் போக்சோ கைதி தப்பி ஓடிய நிலையில், 3 ஆயுதப்படை காவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இது காவல் துறை வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பி உள்ளது.

போலீஸுக்கு தண்ணி காட்டிய போக்சோ கைதி.. 3 ஆயுதப்படை காவலர்கள் மீது பாய்ந்த நடவடிக்கை.. கன்னியாகுமரியில் பரபரப்பு!
கோப்புப்படம்.
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 10 Oct 2026 16:32 PM IST

புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர் தீபன் ராஜ் ( 36 வயது). இவர், தற்போது கன்னியாகுமரி மாவட்டம், திக்குறிச்சி அருகே வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இவர் மீது மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமிக்கு வன்கொடுமை அளித்த சம்பவத்தில் போக்சோ வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது. இந்த வழக்கில் தீபன்ராஜை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது, கைதி தீபன் ராஜ் திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக தெரிகிறது. இதன் காரணமாக அவரை போலீசார் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு, சுமார் ஒரு வாரமாக தீபன் ராஜ் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், சம்பவத்தன்று காலை கழிப்பறைக்கு செல்ல வேண்டும் என்று போலீசாரிடம் விதித்தார்.

போலீசுக்கு டிமிக்கு கொடுத்த தப்பித்த போக்சோ கைதி

அதன் அடிப்படையில், போலீசார் அவரை கழிப்பறைக்கு அழைத்து சென்ற போது எதிர்பாராத விதமாக போலீசாரிடம் இருந்து கைதி தீபன் ராஜ் தப்பி ஓடிவிட்டார். இந்த சம்பவம் காவல்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இது தொடர்பாக, தகவல் அறிந்த உயர் அதிகாரிகள் தப்பி ஓடிய கைதி தீபன் ராஜை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர். அத்துடன், இந்த விவகாரத்தில் கவனக் குறைவாக இருந்ததாக ஆயுதப்படை காவலர்கள் ராமஜெயம், சசிகுமார், வினோத்குமார் ஆகிய மூன்று பேர் மீதும் ஒரே ரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது.

மேலும் படிக்க: காதல் மனைவி அளித்த பரபரப்பு புகார்.. பரமக்குடி டிஎஸ்பி ஜாபர் சித்திக் திடீர் கைது.. காவல்துறையில் பரபரப்பு!

3 ஆயுதப்பட காவலர்கள் சஸ்பெண்ட்

அதன் அடிப்படையில், ஆயுதப்படை காவலர்கள் 3 பேரும் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இது காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முன்னதாக மருத்துவமனையில் இருந்து தப்பிச் சென்ற கைதியை ஆயுதப்படை காவலர்கள் விரட்டி சென்று பிடிக்கும் முயன்றனர். ஆனால், போலீசாருக்கு டிமிக்கி கொடுத்து விட்டு கைதி தப்பி ஓடி தலைமறைவானார். இது தொடர்பாக, ஆயுதப்படை காவலர்கள் உடனடியாக போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர்.

தப்பி ஓடிய போக்சோ கைதி மீண்டும் கைது

அதன் அடிப்படையில், தனிப்படை போலீசார் தப்பி ஓடிய தீபன் ராஜை தேடி வந்தனர். அவரை, இரணியல் பகுதியில் வைத்து போலீசார் கைது செய்தனர். மருத்துவமனையில் இருந்து தப்பித்த தீபன் ராஜ் வீட்டுக்கு செல்ல முயற்சித்ததாக கூறப்படுகிறது. அத்துடன், அந்தப் பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் கைதி தீபன் ராஜ் கைது செய்யப்பட்டதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும் படிக்க: திண்டுக்கல் பள்ளி குடிநீர் தொட்டியில் மனித கழிவு.. இந்த கொடூஞ் செயலை செய்தது இவர்களா? போலீஸ் விசாரணையில் ஷாக் தகவல்!

Follow Us