சென்னை மக்களே நோட் பண்ணுங்க… பல்வேறு இடங்களில் நாளை போக்குவரத்து மாற்றம்.. முழு விவரம்!
Chennai Traffic Diversions Announced : பிரதமர் நரேந்திர மோடி சென்னை வருகை தர உள்ள நிலையில், நாளை பல்வேறு இடங்களில் போக்குவரத்து மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து போலீசார் அறிவிப்பு வெளியிட்டு உள்ளனர். எங்கெங்கு போக்குவரத்து மாற்றம் என்பதை பார்க்கலாம் .
பிரதமர் நரேந்திர மோடி நாளை ஞாயிற்றுக்கிழமை ( அக்டோபர் 11- ஆம் தேதி) சென்னை வர உள்ள நிலையில் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. இதில் நாளை காலை 8 மணி முதல் மாலை 4:30 மணி வரை இந்த போக்குவரத்து மாற்றம் அமலில் இருக்கும். அதன்படி, தாம்பரத்தில் இருந்து ஜிஎஸ்டி சாலையில் வரும் வாகனங்கள் திருநீர்மலை சந்திப்பு பகுதியில் திரும்பி குன்றத்தூர் சாலை வழியாக செல்ல வேண்டும். இதே போல, பல்லாவரத்தில் இருந்து வரும் வாகனங்கள் இன்டர்நேஷனல் விமான நிலைய சந்திப்பு ( ஹோட்டல் ஏர்வே அருகில்) பகுதியில் திரும்பி தாம்பரம் நோக்கி செல்ல வேண்டும்.
கோயம்பேடு, அசோக் பில்லர் பகுதிகளில் . . .
கோயம்பேடு பகுதியில் இருந்து வரும் வாகனங்கள் அசோக் நகர் 2- ஆவது அவென்யூ பகுதியில் கோயம்பேடு அல்லது கே. கே. நகர் நோக்கி திரும்பி செல்ல வேண்டும். அத்துடன், அசோக் பில்லர் பகுதியில் இருந்து வரும் வாகனங்கள் சிபெட் சந்திப்பில் கிண்டி இண்டஸ்ட்ரியல் எஸ்டேட் வழியாக செல்ல வேண்டும். மவுண்ட்- பூந்தமல்லி சாலையில் இருந்து வரும் வாகனங்கள் போரூர் சுங்க சாவடியில் இருந்து மதுரவாயல் நோக்கி செல்ல வேண்டும். அதே மார்க்கத்தில் வரும் வாகனங்கள் ராமாபுரம் சந்திப்பில் திரும்பி அரசமரம் நோக்கி செல்ல வேண்டும்.
மேலும் படிக்க: சட்டம்- ஒழுங்கின் முக்கிய கண்காணிப்பாளர்.. தமிழக உள்துறை செயலாளர் அதிரடி மாற்றம்..!




ஓம்ஆர் சாலை, காந்தி மண்டபம் பகுதியில் . . .
இதேபோல பழைய மகாபலிபுரம் சாலை ( ஓஎம்ஆர்) மற்றும் சர்தார் வல்லபாய் படேல் சாலையில் வரும் வாகனங்கள் காந்தி மண்டபம் சந்திப்பு பகுதியில் திரும்பி சிபெட் நோக்கி செல்ல வேண்டும். அத்துடன் காந்தி மண்டபம் சாலை வழியாக வரும் வாகனங்கள் காந்தி மண்டபம் சந்திப்பு பகுதியில் சிபெட் நோக்கி திருப்பி விடப்படும். வேளச்சேரி மெயின் ரோட்டில் இருந்து சர்தார் வல்லபாய் படேல் சாலை வழியாக செல்லும் வாகனங்கள் குரு நானக் சந்திப்பு பகுதியில் திரும்பி வேலை செய்து நோக்கி செல்ல வேண்டும்.
வணிக மற்றும் கனரக வாகன ஓட்டிகள் கவனத்துக்கு
அண்ணா சாலை பகுதியில் இருந்து வரும் வாகனங்கள் எம். சி. ராஜா யூ-டர்ன் பகுதியில் திரும்பி மீண்டும் அண்ணா சாலை திசையில் திரும்பி செல்ல வேண்டும். பின்னர், வாகன போட்டிகள் தாங்கள் செல்லும் இடங்களுக்கு செல்ல அனுமதிக்கப்படுவர். இதனை பின்பற்றி வாகன ஓட்டிகள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இந்த போக்குவரத்து மாற்றங்கள் மற்றும் கனரக வாகனங்களுக்கு மட்டுமே என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
மேலும் படிக்க: காதல் மனைவி அளித்த பரபரப்பு புகார்.. பரமக்குடி டிஎஸ்பி ஜாபர் சித்திக் திடீர் கைது.. காவல்துறையில் பரபரப்பு!