AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

வண்டலூர் பூங்காவுக்கு இது தெரியாம போகாதீங்க.. நிர்வாகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.. என்ன அது!

Vandalur Park Lion Safari : வண்டலூர் உயிரியல் பூங்காவில் வருகிற அக்டோபர் 14- ஆம் தேதி முதல் வயன் சபாரி ரத்து செய்யப்படுவதாக பூங்கா நிர்வாகம் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. எதற்காக இந்த அறிவிப்பு, மீண்டும் எப்போது தொடங்கப்படும் என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

வண்டலூர் பூங்காவுக்கு இது தெரியாம போகாதீங்க.. நிர்வாகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.. என்ன அது!
வண்டலூர் உயிரியல் பூங்கா.
Gowtham Kannan s
Gowtham Kannan S | Updated On: 12 Oct 2026 14:31 PM IST

செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூரில் பிரபலம் வாய்ந்த உயிரியல் பூங்கா செயல்பட்டு வருகிறது. இங்கு, சிங்கம், சிறுத்தை, புலி, காட்டெருமை, யானை, மான், முதலை உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகளும், ஏராளமான பறவை வகைகளும் அடைக்கப்பட்டு காட்சிப்படுத்துவதற்காக வளர்க்கப்பட்டு வருகின்றன. பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் மத்தியில் மிகவும் பிரபலம் வாய்ந்த இந்த உயிரியல் பூங்காவுக்கு தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இதில், மிகவும் பிரபலமான லயன் சஃபாரி சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது. திறந்தவெளி பகுதியில் சுற்றும் சிங்கங்களை வாகனங்களில் சென்று பார்ப்பது சுற்றுலா பயணிகளுக்கு புதிய அனுபவமாக இருந்து வருகிறது. இந்த நிலையில், லயன் சஃபாரி தொடர்பாக வண்டலூர் உயிரியல் பூங்கா நிர்வாகம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

வரும் 14 முதல் 20 நாள்கள் லயன் சஃபாரி ரத்து

அதில், சிங்கங்கள் மற்றும் மான்கள் உலாவும் பகுதிகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதன் காரணமாக, சிங்கங்கள் மற்றும் மான்களை பார்வையிடும் சஃபாரி சேவை வருகிற அக்டோபர் 14- ஆம் தேதி முதல் சுமார் 20 நாட்களுக்கு தற்காலிகமாக நிறுத்தம் செய்யப்பட்டுள்ளன. இந்த பராமரிப்பு பணிகள் நிறைவடைந்த உடன் மீண்டும் சஃபாரி சேவை தொடங்கப்பட உள்ளது. லயன் சஃபாரி சேவை தொடங்கும் தேதி குறித்த அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: பெண் தர மறுத்ததால் ஆத்திரம்.. சிறுமி வீட்டில் நள்ளிரவில் குண்டு வீச்சு.. நெல்லையில் பரபரப்பு சம்பவம்!

ஒரு ஜோடி சிங்கங்கள் லயன் சஃபாரி-க்கு வருகிறது

கடந்த 3 மாதங்களுக்கு முன்பு மத்திய பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ள இந்தூர் மிருகக்காட்சி சாலையில் இருந்து ஜிம்பா மற்றும் நாலா என்ற ஒரு ஜோடி ஆசிய சிங்கங்கள் வண்டலூர் பூங்காவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த சிங்கங்கள் தற்போது புதிய சூழலுக்கு பழகி தங்கள் இருப்பிடத்திற்கு பின்பகுதியில் உள்ள திறந்த வெளி பகுதியில் சுற்றி திரிந்து வருகின்றன. லயன் சஃபாரி தயாரானதும் இந்த ஜிம்பா- நாலா ஜோடி சிங்கங்கள் ஏற்கனவே உள்ள சிங்கங்களுடன் லயன் சஃபாரி இடத்தில் விடப்பட உள்ளது.

லயன் சஃபாரி எண்ணிக்கை 6- ஆக உயரும்

இதன் மூலம் லயன் சஃபாரி மேற்கொள்ளப்படும் இடங்களில் உள்ள சிங்கங்களுடன் சேர்த்து மொத்த சிங்கங்களின் எண்ணிக்கை 6- ஆக உயரும். மேலும், 4 சிங்கங்கள் பூங்காவில் உள்ளன. தற்போது, உள்ள சிக்கல்கள் காரணமாக இந்த சிங்கங்களை லயன் சஃபாரி இடத்தில் விட முடியவில்லை. லயன் சஃபாரி செல்லும் பாதைகளில் உள்ள புதர் மண்டிய தாவரங்கள் அகற்றம், தடுப்பு கம்பிகள், சுற்றுச்சுவர்கள் சீரமைக்கும் பணிகள் முடிந்த பின்னர் மீண்டும் லயன் சஃபாரி தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: போலீஸுக்கு தண்ணி காட்டிய போக்சோ கைதி.. 3 ஆயுதப்படை காவலர்கள் மீது பாய்ந்த நடவடிக்கை.. கன்னியாகுமரியில் பரபரப்பு!

Follow Us