ஆயுத பூஜை ஸ்பெஷல்.. பொரி, பூ, பழம் எல்லாம் ஒரே இடத்தில்.. கோயம்பேட்டில் சிறப்புச் சந்தை!
Koyambedu Ayudha Puja Special Market : ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜையை முன்னிட்டு கோயம்பேட்டில் சிறப்பு சந்தை அமைக்கப்பட உள்ளது. இதில், பூஜைக்கு தேவையான அவல், பொரி, வாழைக்கன்று, பூசணிக்காய் உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளன.
தமிழகத்தில் வருகிற அக்டோபர் 19- ஆம் தேதி ( திங்கள்கிழமை) ஆயுத பூஜை, 20 ஆம் தேதி ( செவ்வாய்க்கிழமை) சரஸ்வதி பூஜை ஆகியவை கொண்டாடப்பட உள்ளது. இதன் காரணமாக, கோவில்கள், வீடுகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் கொலு வைத்து பொதுமக்கள் வழிபட தொடங்கி உள்ளனர். தமிழகத்தில் பொதுவாக சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை ஆகியவை வெகு விமர்சையாக கொண்டாடப்படும். இதற்காக, சரஸ்வதி சுவாமிக்கு அவல், பொரிகடலை உள்ளிட்டவை படைத்து வழிபடுவது வழக்கம். இதற்காக ஒவ்வொரு ஊர்களிலும் பல்வேறு இடங்களில் சிறப்பு சந்தைகள் மற்றும் கடைகள் அமைப்பது வழக்கத்தில் இருந்து வருகிறது. அந்த வகையில், சென்னையில் சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜைக்காக கோயம்பேடு மார்க்கெட்டில் சிறப்பு சந்தை அமைக்கப்பட உள்ளது.
கோயம்பேட்டில் ஆயுத பூஜை சிறப்பு சந்தை
இந்த சந்தையில் அவல், பொரிகடலை, தோரணம், வாழைக்கன்று, பூசணிக்காய் உள்ளிட்ட பூஜை பொருட்கள் விற்பனைக்காக கொண்டு வரப்பட உள்ளன. இதன் காரணமாக. ஆயுத பூஜை பொருட்களை வாங்குவதற்கு பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் அதிக அளவில் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கோயம்பேடு மார்க்கெட்டில் வருகிற அக்டோபர் 14- ஆம் தேதி ( புதன்கிழமை) முதல் சிறப்பு சந்தை செயல்பட உள்ளது. இந்த சந்தையானது அக்டோபர் 23- ஆம் தேதி ( வெள்ளிக்கிழமை) வரை செயல்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேலும் படிக்க: சென்னையில் “சோழ தேசம் 2026” கண்காட்சி.. ஆயிரம் ஆண்டு கால சோழர் வரலாறு.. பிரம்மிக்க வைக்கும் பல்வேறு அம்சங்கள்.. முழு விவரம்!




ஒரே இடத்தில் பூஜை பொருள்கள் வாங்கலாம் . . .
ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை ஆகியவற்றிற்கு தேவையான பொருட்களை ஒரே இடத்தில் வாங்கி செல்லும் வகையில் ஆண்டுதோறும் கோயம்பேடு மார்க்கெட்டில் சிறப்பு சந்தை அமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டும் சிறப்பு சந்தை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில், பூஜைக்கு தேவையான பூசணிக்காய், அவல், பொரி, பூ, பழம் உள்ளிட்ட பொருட்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளன.
வீடுகள், அலுவலகங்கள், தொழிற்சாலைகளில் . . .
ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜையின்போது, வீடுகள், அலுவலகங்கள், கடைகள், தொழிற்சாலைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் பயன்படுத்தப்படும் கன ரக கருவிகள், இயந்திரங்கள் மற்றும் சைக்கிள், இருசக்கர வாகனம், கார் உள்ளிட்டவற்றை சுத்தம் செய்து அதற்கு பூமாலை, வாழைக்கன்று ஆகியவை கட்டி சிறப்பு பூஜை நடத்தப்படும். இதே போல, கல்வி உபகரணங்கள், தொழில் கருவிகள் ஆகியவற்றுக்கும் இந்த பூஜை மேற்கொள்ளப்படும்.
மேலும் படிக்க: வண்டலூர் பூங்காவுக்கு இது தெரியாம போகாதீங்க.. நிர்வாகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.. என்ன அது!