AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

முதல்வர் தொகுதியில் பெரும் சோகம்.. விஷ வாயு தாக்கி மாநகராட்சி ஊழியர் இருவர் பரிதாப பலி.!

Chennai 2 Corporation Workers Died : சென்னையில் விஷ வாயு தாக்கி மாநகராட்சி ஒப்பந்த ஊழியர்கள் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். இது தொடர்பாக பெரம்பூர் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

முதல்வர் தொகுதியில் பெரும் சோகம்.. விஷ வாயு தாக்கி மாநகராட்சி ஊழியர் இருவர் பரிதாப பலி.!
மீட்பு பணியில் போலீசார். ( உள்படம் மழைநீர் தொட்டி)
Gowtham Kannan s
Gowtham Kannan S | Updated On: 12 Oct 2026 17:52 PM IST

சென்னை மாவட்டம், பெரம்பூர் பகுதியில் உள்ள கொடுங்கையூரில் மாநகராட்சிக்கு சொந்தமான 15 அடி ஆழம் உள்ள மழை நீர் வடிகால் அமைந்துள்ளது. இதில், மின் மோட்டார் பொருத்தப்பட்டு தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இன்று திங்கள் கிழமை ( அக்டோபர் 12- ஆம் தேதி) திடீரென அந்த மின் மோட்டார் பழுதடைந்ததாக கூறப்படுகிறது. அதனை சரி செய்வதற்காக, மாநகராட்சியில் ஒப்பந்த ஊழியர்களாக பணிபுரிந்து வரும் இருவர் மழை நீர் சேகரிப்பு தொட்டியில் அமைக்கப்பட்டு இருக்கும் மின் மோட்டாரை கழற்றி சரி செய்வதற்காக சென்றனர். அதன்படி, ஒரு ஒப்பந்த உயர் குடிநீர் தொட்டியின் உள்ளே இறங்கியுள்ளார். மற்றொருவர் தொட்டியின் மேல் புறம் நின்று கொண்டு இருந்தார். அப்போது, தொட்டியின் உள்ளே இறங்கிய தொழிலாளி திடீரென மயங்கி விழுந்தார்.

விஷ வாயு தாக்கி மயக்கமடைந்த இரு ஊழியர்கள்

இதனை பார்த்த மேலே நின்று கொண்டிருந்த ஊழியர் அவரை மீட்பதற்காக அவசர அவசரமாக தொட்டியில் உள்ளே இறங்கிய நிலையில் அவரும் திடீரென மயங்கி விழுந்தார். இதை பார்த்த அக்கம், பக்கத்தினர் அவர்களை மீட்க முயற்சித்த போது, தொட்டியின் உள்ளே விஷ வாயு தாக்கி இருவரும் மயங்கியது தெரிய வந்தது. உடனே, இது தொடர்பாக கொடுங்கையூர் காவல் நிலையம் மற்றும் மாதவரம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையத்திற்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் பேரில், போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

மேலும் படிக்க: திருவள்ளூரில் சோக சம்பவம்.. கோபத்தில் விஷம் குடித்த மனைவி.. அதே விஷத்தை குடித்த கணவன்.. அடுத்தடுத்து பிரிந்த உயிர்!

விஷ வாயு தாக்கி உயிரிழந்த மாநகராட்சி ஊழியர்கள்

தொடர்ந்து, சுவாச கருவிகள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் அணிந்த தீயணைப்பு படை வீரர்கள் தொட்டியில் உள்ளே இறங்கி மயங்கி கிடந்த இரு ஒப்பந்த தொழிலாளர்களையும் மீட்டு அவசர ஆம்புலன்ஸ் மூலமாக அருகில் உள்ள ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் இருவரும் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து, இருவரது சடலங்களும் பிரேத பரிசோதனை மேற்கொள்வதற்காக சவக்கிடங்குக்கு கொண்டு செல்லப்பட்டது.

பெரம்பூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை

இந்த சம்பவம் தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் தரப்பில் கொடுங்கையூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாநகராட்சியில் ஒப்பந்த ஊழியர்களாக பணிபுரிந்து வரும் இருவர் மழை நீர் சேகரிப்பு தொட்டியில் இறங்கிய போது விஷவாயு தாக்கி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க: மதுபோதையில் வருவதால் தொல்லை.. தூங்கிய கணவர் மீது டீசல் ஊற்றி தீ வைப்பு.. காரைக்காலில் கொதித்தெழுந்த மனைவி!

Follow Us