AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

திருவள்ளூரில் சோக சம்பவம்.. கோபத்தில் விஷம் குடித்த மனைவி.. அதே விஷத்தை குடித்த கணவன்.. அடுத்தடுத்து பிரிந்த உயிர்!

Tiruvallur Crime : திருவள்ளூர் மாவட்டத்தில் குடும்ப தகராறு காரணமாக விஷம் குடித்த கணவன், மனைவி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக உயிரிழந்தனர். இது தொடர்பாக கிராமிய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .

திருவள்ளூரில் சோக சம்பவம்.. கோபத்தில் விஷம் குடித்த மனைவி.. அதே விஷத்தை குடித்த கணவன்.. அடுத்தடுத்து பிரிந்த உயிர்!
தற்கொலை செய்த கணவன்-மனைவி.
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 12 Oct 2026 16:04 PM IST

திருவள்ளூர் மாவட்டம், காக்களூர் ஏரிக்கரை பகுதியை சேர்ந்தவர் பாஸ்கர். இவரது மகன் யுவராஜ் ( 29 வயது). கூலி தொழில் செய்து வந்த இவர் அதே பகுதியில் வசித்து வந்த மஞ்சுளா ( 22 வயது) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் கடந்த 2025- ஆம் ஆண்டு நடைபெற்றது. இந்த நிலையில், தொழிலாளி யுவராஜுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக தினமும் மாலையில் மது அருந்திவிட்டு வீடு திரும்பதை யுவராஜ் வழக்கமாக கொண்டிருந்தார். அத்துடன் அவரது மனைவி மஞ்சுளாவிடம் அது போதையில் தகராறும் செய்து வந்துள்ளார். இதன் காரணமாக கணவன், மனைவியிடையே அடிக்கடி வாய் தகராறு ஏற்பட்டு பிரச்சனை இருந்து வந்துள்ளது.

விஷம் குடித்த மனைவி- கணவன்

இந்த நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு வழக்கம் போல தொழிலாளி யுவராஜ் அளவுக்கு அதிகமான மதுபோதையில் வீட்டுக்கு வந்த நிலையில் அவரை அவரது தந்தை பாஸ்கர் மற்றும் மனைவி மஞ்சுளா ஆகியோர் கண்டித்துள்ளனர். இதனை காதில் போட்டுக் கொள்ளாத யுவராஜ் அவர்கள் இருவரையும் ஆபாச வார்த்தைகளால் திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது. இதில், மனம் உடைந்த மஞ்சுளா வீட்டிலிருந்த விஷத்தை எடுத்து குடித்து தற்கொலைக்கு முடிந்துள்ளார். அப்போது, அவரது கணவர் யுவராஜும் அதே விஷத்தை குடித்து தற்கொலைக்கு முடிந்துள்ளார்.

மேலும் படிக்க: ஈரோட்டில் பெரும் சோகம்.. சகோதரிக்கு வாட்ஸ் ஆப்பில் மெசெஜ் அனுப்பிவிட்டு… குழந்தையுடன் தந்தை விபரீத முடிவு!

தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி

தொடர்ந்து, இருவரும் மயங்கி விழுந்த நிலையில், பாஸ்கர் மற்றும் அக்கம், பக்கத்தினர் இருவரையும் மீட்டு அவசர ஆம்புலன்ஸ் மூலமாக திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் இருவருக்கும் முதல் உதவி சிகிச்சை அளித்துவிட்டு மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு அறிவுறுத்தினர். அதன் அடிப்படையில், இருவரும் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

அடுத்தடுத்து உயிரிழந்த கணவன்- மனைவி

ஆனால், சிகிச்சை பலனின்றி கணவன், மனைவி இருவரும் இன்று திங்கள் கிழமைகாலை ( அக்டோபர் 12- ஆம் தேதி) அடுத்தடுத்து பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக, திருவள்ளூர் கிராமிய போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காதல் திருமணம் செய்த தம்பதி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க: வண்டலூர் பூங்காவுக்கு இது தெரியாம போகாதீங்க.. நிர்வாகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.. என்ன அது!

Follow Us