ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு- தமிழக முதல்வர் ஜோசப் விஜய் சந்திப்பு! பின்னணி என்ன!
CM Vijay Meets Andhra CM Chandrababu Naidu : ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடுவை தமிழக முதல்வர் ஜோசப் விஜய் சந்தித்து நீர் வளம் தொடர்பாக விரிவான ஆலோசனை மேற்கொண்டனர். இந்த சந்திப்பு தொடர்பான முழு விவரத்தை பார்க்கலாம்.
ஆந்திரப் பிரதேச மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு நேரில் சந்திப்பதற்காக தமிழகம் முதல்வர் ஜோசப் விஜய் இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் தனி விமானம் மூலம் ஆந்திரா புறப்பட்டு சென்றார். அங்கு, விஜயவாடாவில் உள்ள ஸ்ரீ கனகா துர்கா கோவிலில் வழிபாடு கொண்டார். இதைத்தொடர்ந்து, விஜயவாடாவில் உள்ள ஆந்திர முதல்வர் வீட்டுக்கு சென்ற முதல்வர் விஜய்யை சந்திரபாபு நாயுடு மற்றும் அவரது மகனும், அமைச்சருமான நாரா லோகேஷ் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். தொடர்ந்து, ஆந்திர முதல்வர் வீட்டில் சந்திரபாபு நாயுடு, தமிழக முதல்வர் ஜோசப் விஜய், ஆந்திரா அமைச்சர் நாரா லோகேஷ், தமிழக நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த், பொதுப் பணித் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, முதல்வர் விஜயின் ஆலோசகர் விஷ்ணு ரெட்டி ஆகியோர் ஆலோசனை மேற்கொண்டர்.
ஆந்திரா முதல்வர்- தமிழக முதல்வர் ஆலோசனை
தொடர்ந்து, தமிழக முதல்வர் ஜோசப் விஜய் மற்றும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆகியோர் தனியாக ஆலோசனை மேற்கொண்டனர். இதில், தமிழகத்திற்கான நீர் தேவை மற்றும் கோரிக்கைகள், கோதாவரி மற்றும் காவிரி நதிநீர் இணைப்பு மற்றும் கிருஷ்ணா நதிநீர் விடுவிப்பு ஆகியவை தொடர்பாக விரிவான ஆலோசனை மேற்கொண்டனர். தமிழகத்தில் தற்போது, சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் தற்போது தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட தொடங்கியுள்ளது. இதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீர் ஆதாரங்களை பெருக்குவதற்காக இது போன்ற சந்திப்பை முதல்வர் விஜய் முன்னெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் படிக்க: “அதிமுகவிலிருந்து மேலும் 15 MLA-க்கள் தவெகவுக்கு வருவார்கள்”.. இபிஎஸ்-க்கு அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த அதிர்ச்சி!!




ஆந்திராவில் இருந்து 2 டிஎம்சி தண்ணீர்
இந்த சந்திப்பின் மூலமாக ஆந்திர மாநிலத்தில் இருந்து தமிழகத்துக்கு 2 டிஎம்சி தண்ணீர் கிடைத்தால் சென்னை மாவட்ட மக்களுக்கு குடிநீர் பற்றாக்குறை ஏற்படாமல் தடுக்க வாய்ப்புள்ளது. இதனிடையே, தெலுங்கு- கங்கை என்ற திட்டம் முக்கிய திட்டமாக இருந்து வருகிறது. இது தொடர்பாக தமிழக அரசின் நீர்வளத்துறை அதிகாரிகள், ஆந்திர மாநில நீர்வளத்துறை அதிகாரிகளிடம் 2 டிஎம்சி தண்ணீர் தர வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். தற்போது, முதல்வர் விஜய் சந்திப்பின் காரணமாக 2 நாட்கள் கண்டலேறு அணைதிறக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.
கோதாவரி- காவிரி நதி நீர் இணைப்பு
இதே போல, கோதாவரி காவிரி நதி நீர் இணைப்பு சாத்தியமானால் தமிழகத்தின் ஜிடிபி உயர வாய்ப்புள்ளது. இதன் மூலம் திருச்சியில் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களுக்கு கூடுதல் காவிரி நீர் செல்ல வாய்ப்புள்ளது. இந்த திட்டமானது நெடுங்காலமாக பேச்சுவார்த்தையில் இருக்கும் நிலையில், தமிழகம் முதல்வரின் இந்த பயணம் தீர்வாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க: “வரலாற்றில் இல்லாத வகையில் ஒரு யூனிட் மின்சாரம் ரூ.35-க்கு மின் கொள்முதலா?”.. தவெக அரசை விளாசிய இபிஎஸ்!!