AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

“வரலாற்றில் இல்லாத வகையில் ஒரு யூனிட் மின்சாரம் ரூ.35-க்கு மின் கொள்முதலா?”.. தவெக அரசை விளாசிய இபிஎஸ்!!

EPS Slams TVK Govt: வரலாற்றில் இல்லாத வகையில் ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.35-க்கு கொள்முதல் செய்வதன் மூலம் மின்வாரியத்தைத் தனியாருக்குத் தாரைவார்க்கத் திட்டமிடுவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். மேலும், இந்த மெகா ஊழல் ஒப்பந்தத்தை உடனடியாகக் கைவிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

“வரலாற்றில் இல்லாத வகையில் ஒரு யூனிட் மின்சாரம் ரூ.35-க்கு மின் கொள்முதலா?”.. தவெக அரசை விளாசிய இபிஎஸ்!!
எடப்பாடி பழனிசாமி
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 13 Oct 2026 14:06 PM IST

சென்னை, அக்.13: தமிழகத்தில் மின்சார வாரியத்தின் செயல்பாடுகள் மற்றும் அரசு மேற்கொண்டு வரும் மின் கொள்முதல் ஒப்பந்தங்கள் குறித்து அரசியல் அரங்கில் தீவிர விவாதங்கள் எழுந்துள்ளன. அந்த வகையில், தமிழக மின்சார வாரியத்தைத் தனியாருக்குத் தாரைவார்க்கும் நோக்கில் அரசு செயற்படுவதாகக் குற்றம்சாட்டி, அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி மிகக் கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்துள்ளார். வரலாற்றிலேயே எக்காலத்திலும் இல்லாத அளவிற்கு ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.35 என்ற அதிசய விலைக்குக் கொள்முதல் செய்வதாகத் தகவல் வெளியாகி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மக்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள இந்த மின் கொள்முதல் விவகாரத்தை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்றும், இல்லையெனில் இதற்கு மக்கள் தகுந்த பதிலடி அளிப்பார்கள் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

இதையும் படிக்க: “இனி எங்கள் வழி தனி வழி”.. கூட்டணியில் இல்லாத திமுகவை நோக்கிக் கூவுவதை நிறுத்துங்கள்.. மாணிக்கம் தாகூருக்கு பதிலடி!!

மின் கொள்முதல் ஒப்பந்தமும் மெகா ஊழல் குற்றச்சாட்டும்:

இது குறித்து எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பதிவில், நிலவும் பிரச்சனைகளையும் நெருக்கடிகளையும் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு கமிஷன் அடிக்கும் நோட்டத்துடன்தான் இந்த ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்படுவதாகக் கடுமையாகச் சாடினார். பொதுமக்களின் வரிப்பணத்தாலும் மின் நுகர்வோர்களின் கட்டணத்தாலும் இயங்கும் தமிழ்நாடு மின்சார வாரியத்தை வேண்டுமென்றே கடுமையான கடனில் மூழ்கடித்துவிட்டு, அதனைத் தனியாருக்குத் தாரைவார்க்கும் மறைமுகத் திட்டம் இதில் உள்ளதாக அவர் குற்றம்சாட்டினார். ஒரு யூனிட் மின்சாரம் இவ்வளவு அதிக விலைக்குக் கொள்முதல் செய்யப்படுவது எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாதது என்றும், இது சாதாரண மக்களையும் தொழில் துறையினரையும் கடுமையாகப் பாதிக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். இந்த ஒப்பந்தம் குறித்துப் பொதுமக்கள் மத்தியில் ‘மெகா ஊழல் மற்றும் மெகா வசூல் திட்டம்’ என்றே பேச்சு அடிபட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

மின்சார வாரியத்தைப் பாதுகாப்பதற்கான கோரிக்கைகள்:

தமிழகத்தின் மின் உற்பத்தியையும் விநியோகத்தையும் திறம்பட நிர்வகிக்க வேண்டிய அரசு, இதுபோன்று வெளிமுகமை நிறுவனங்களிடம் இருந்து அதிக விலைக்கு மின்சாரத்தைக் கொள்முதல் செய்வது வாரியத்தின் வீழ்ச்சிக்கு வழிவகுக்கும் என எடப்பாடி பழனிசாமி எச்சரித்தார். மின்சார வாரியத்தை லாபகரமான பாதையில் அழைத்துச் செல்வதற்குப் பதிலாக, அதனைச் சீரழித்துத் தனியார் மயமாக்கும் எந்தவொரு நடவடிக்கையையும் அதிமுக ஒருபோதும் அமைதியாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்காது என்றார். உடனடியாக இந்த முறையற்ற மின் கொள்முதல் ஒப்பந்தத்தை அரசு கைவிட வேண்டும் என்றும், இல்லையென்றால் அதிமுகவின் சார்பில் தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் திட்டவட்டமாக வலியுறுத்தினார்.

இதையும் படிக்க: “அதிமுகவிலிருந்து மேலும் 15 MLA-க்கள் தவெகவுக்கு வருவார்கள்”.. இபிஎஸ்-க்கு அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த அதிர்ச்சி!!

பரபரப்பை கிளப்பிய குற்றச்சாட்டு:

மின் கொள்முதல் விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி எழுப்பியிருக்கும் இந்த அதிரடியான குற்றச்சாட்டுகள் மற்றும் கேள்விகள் தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. மின்சார வாரியத்தின் தற்போதைய நிதிச் சுமை மற்றும் எதிர்காலச் சவால்கள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் வெளியிட்டுள்ள இந்த எச்சரிக்கைகளுக்கு ஆளுங்க தரப்பு என்ன மாதிரியான விளக்கத்தை அளிக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே எழுந்துள்ளது.

Follow Us