AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

மத்திய இணை அமைச்சர் எல். முருகன் திடீர் ராஜினாமா! எம்.பி.பதவியிருந்து விலக முடிவு.. என்ன காரணம்!

Union Minister L Murugan Resigns : மத்திய தகவல் மற்றும் ஒளி பரப்புத் துறை இணை அமைச்சர் எல். முருகன் தனது பதவியை ராஜினாமா செய்ததாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதை விரிவாக பார்க்கலாம் .

மத்திய இணை அமைச்சர் எல். முருகன் திடீர் ராஜினாமா! எம்.பி.பதவியிருந்து விலக முடிவு.. என்ன காரணம்!
எல். முருகன்.
Gowtham Kannan s
Gowtham Kannan S | Updated On: 13 Oct 2026 18:46 PM IST

மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சராக இருந்து வந்தவர் எல். முருகன். இவர் தற்போது அந்த பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடிக்கு 5 பக்க ராஜினாமா கடிதத்தை அவர் அனுப்பி உள்ளார். அத்துடன், தனது பதவி ராஜினாமா தொடர்பாக எக்ஸ் தள பக்கத்தில் எல். முருகன் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: பிரதமர் நரேந்திர மோடி தலைமையின் கீழ் பாரதத்துக்கும், தமிழகத்துக்கும் சேவை புரிவது எனது வாழ்நாளில் மிகப்பெரிய பெருமையாக கருதுகிறேன். கூலி வேலை செய்யும் தொழிலாளிக்கு மகனாக இருந்து மத்திய அமைச்சரவையில் இடம்பெற்று நாட்டின் பிரதமர் நரேந்திர மோடியின் வழிகாட்டுதலின்படி செயல்பட்டதை சிறந்த பாக்கியமாக நினைக்கிறேன்.

முதலில் நாடு தான் முக்கியம்

தற்போது, நான் மீண்டும் களப்பணிக்கு திரும்பி 2029 மக்களவைத் தேர்தலுக்காக பாரதிய ஜனதா கட்சியை வலுப்படுத்தும் பணிகளில் ஈடுபட விரும்புகிறேன். எனக்கு முதலில் நாடு.. பிறகு கட்சி.. கடைசியில் தான் எனது நலன் என அந்த பதிவில் முன்னாள் மத்திய இணை அமைச்சர் எல். முருகன் குறிப்பிட்டுள்ளார். தனது ராஜினாமா தொடர்பாக எல். முருகன் செய்தியாளர்களிடம் மேலும் கூறியதாவது: 2029 மக்களவை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியை மேலும் வலுப்படுத்த வேண்டும். அந்த தேர்தலில் வெற்றி பெற்று வர வேண்டும் என விரும்புகிறேன்.

மேலும் படிக்க: எதிரிகள் தொல்லை அகல.. ராகு கால தரிசனம்.. ஆந்திரா ஸ்ரீ கனக துர்கா கோவிலில் முதல்வர் விஜய் சிறப்பு வழிபாடு!

எம்.பி. பதவியையும் ராஜினாமா செய்ய திட்டம்

பிரதமர் மோடி தமிழகத்திற்கும், தமிழக மக்களுக்கும் எவ்வளவோ திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். எம்பி பதவியையும் ராஜினாமா செய்ய உள்ளேன். பாஜகவுக்கு மேலும் பல உதவிகளை செய்ய வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி இடம் கோரிக்கை வைத்துள்ளேன். 2029 மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் உள்ள மக்களவைத் தொகுதியில் நான் போட்டியிட விரும்புகிறேன். அதன் மூலம் வெற்றி பெற்று எம்பி யாக வர விருப்பம் உள்ளது. திருக்குறளை உலகம் முழுவதும் பிரதமர் மோடி கொண்டு சென்றுள்ளார்.

தமிழக பாஜக மாநில தலைவர் விரைவில் மாற்றம்?

இரண்டு முறை எம்பி யாகவும், இரண்டு முறை அமைச்சராகவும் இருந்துள்ளேன். பாஜக எனக்கு நிறைவு செய்துள்ளது. அதனை நான் திரும்பவும் கட்சிக்கு செய்ய விரும்புகிறேன் என்று தெரிவித்தார். மத்தி இணை அமைச்சர் எல். முருகன் தனது பதவியை ராஜினாமா செய்தது அரசியல் வட்டாரத்திலும், பாரதீய ஜனதா கட்சியினர் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதைத் தொடர்ந்து, தமிழக பாஜக மாநில தலைவரும் மாற்றம் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு- தமிழக முதல்வர் ஜோசப் விஜய் சந்திப்பு! பின்னணி என்ன!

Follow Us