மாணவர்களே தேர்வுக்கு தயாரா.. 10, 11, 12- ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு.. முடிவுகள் எப்போது.. அமைச்சர் ராஜ்மோகன் தகவல்!
Public Examination Schedule : தமிழகத்தில் 10, 11, 12- ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணையை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் வெளியிட்டார். இதில், எப்போது தேர்வுகள் தொடங்கி முடிவடைகிறது என்ற முழு விவரத்தை இந்தப் பதிவில் விரிவாக பார்க்கலாம்.
தமிழகத்தில் 10, 11, 12- ஆம் வகுப்புகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு 2027- ஆம் ஆண்டு மார்ச் மாதம் பொது தேர்வு நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கான முழு அட்டவணையை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் இன்று புதன்கிழமை ( அக்டோபர் 14- ஆம் தேதி) வெளியிட்டார். இது தொடர்பாக அவர் கூறியதாவது: 12- ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தமிழ் மற்றும் மொழிப்பாட தேர்வு மார்ச் 3- ஆம் தேதி தொடங்கி மார்ச் 29- ஆம் தேதி நிறைவடைகிறது. இந்த வகுப்புக்கான செய்முறை தேர்வுகள் பிப்ரவரி 8- ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 18- ஆம் தேதி நிறைவடைய உள்ளது. இதேபோல, 11- ஆம் வகுப்பு அரியர் மாணவர்களுக்கான பொது தேர்வுகள் மார்ச் 5- ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 1- ஆம் தேதி நிறைவடைகின்றன.
10- ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை
இந்த தேர்வுகளுக்கான முடிவுகள் மே மாதம் 7- ஆம் தேதி வெளியாக வாய்ப்பு உள்ளது. இதேபோல, 10- ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்கான பொது தேர்வுகள் மார்ச் 17- ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 12- ஆம் தேதி நிறைவடைகின்றன. இந்த மாணவர்களுக்கான செய்முறை தேர்வுகள் பிப்ரவரி 19- ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 26- ஆம் தேதி வரை நடைபெறுகின்றன. 10- ஆம் வகுப்பு பொது தேர்வுக்கான முடிவுகள் மே 20- ஆம் தேதி வெளியாக வாய்ப்பு உள்ளது. நிகழ் கல்வியாண்டில் சுமார் 15 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் 10- ஆம் வகுப்பு மற்றும் 12- ஆம் வகுப்பு பொது தேர்வுகளை எழுத உள்ளனர்.
மேலும் படிக்க: விண்ணை முட்டும் அரசி விலை.. அரசு எடுத்த அதிரடி முடிவு.. கூட்டுறவு அங்காடிகளில் ஒரு கிலோ ரூ. 50-க்கு விற்க திட்டம்!




கற்றல் என்பது சுமையாக மாறிவிடக்கூடாது
மாணவ, மாணவிகளுக்கும், ஆசிரியர்கள், பெற்றோர்கள் அனைவருக்கும் சிறந்த கல்வியாண்டாக இது அமையும். பாடத்திட்டத்திற்கு ஒரு பயிற்சி தேவைப்படுகிறது. அத்துடன் அதனை தேர்வில் எழுதுவது தனி திறனாகும். மாணவர்கள் புரிந்து படிக்கும் வகையில் அதற்கான பயிற்சிகளை வழங்க உள்ளோம். குழந்தை மைய கல்வியாக அதனை மாற்றியுள்ளோம். மாணவர்கள் நன்றாக படிப்பதற்கும், படித்ததை தேர்வில் சிறப்பாக எழுதுவதற்கும் சிறப்பு பயிற்சிகள் வழங்கப்படும். கற்றல் என்பது மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமே தவிர சுமையாக மாறிவிடக்கூடாது.
ஆரோக்கியமான கல்விக்கு முக்கியத்துவம் அளிப்பு
தேர்வு முறையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. அதற்கு மாறாக அணுகு முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஒரு குழந்தைக்கு கற்றுக் கொடுக்கக்கூடிய சூழல் ஆசிரியர்களுக்கு உள்ளது. இதில், யாருக்கும் எந்தவித சுமையாகவும் மாறாமல் அனைவருக்குமான கல்வி, ஆரோக்கியமான கல்வியாக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டார்.
மேலும் படிக்க: ஆயுத பூஜை கொண்டாட்டம்.. சென்னையில் 6 இடங்களில் இருந்து பேருந்துகள் இயக்கம்.. முழு விவரம்!