AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

ஆயுத பூஜை கொண்டாட்டம்.. சென்னையில் 6 இடங்களில் இருந்து பேருந்துகள் இயக்கம்.. முழு விவரம்!

Chennai Special Buses Operated Locations : ஆயுத பூஜையையொட்டி, சென்னையில் 6 இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. அவை எந்தெந்த பகுதிகளில் இருந்து இயக்கப்பட உள்ளன என்ற முழு விவரத்தை இந்தப் பதிவில் விரிவாக பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

ஆயுத பூஜை கொண்டாட்டம்.. சென்னையில் 6 இடங்களில் இருந்து பேருந்துகள் இயக்கம்.. முழு விவரம்!
அரசு சிறப்பு பேருந்துகள் இயக்கம்
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 14 Oct 2026 10:59 AM IST

தமிழகத்தில் ஆயுத பூஜை மற்றும் தீபாவளி பண்டிகை அடுத்தடுத்து வரவுள்ளது. இதன் காரணமாக சென்னையில் இருந்து ஏராளமான பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொள்வார்கள். இதற்காக, தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இந்த பேருந்துகள் எங்கிருந்து இயக்கப்படும் என்ற தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இதில், ஆயுத பூஜையையொட்டி நாளை (வியாழக்கிழமை) முதல் 18- ஆம் தேதி வரையும், தீபாவளி பண்டிகையை ஒட்டி நவம்பர் 5- ஆம் தேதி முதல் 7- ஆம் தேதி வரையும் சென்னையில் 2 தற்காலிக பேருந்து நிலையங்கள் உள்பட 6 பேருந்து நிலையங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இதில், கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்தில் இருந்து, கடலூர், புதுச்சேரி, திருச்சி, சிதம்பரம், செங்கோட்டை, மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, சேலம், கோயம்புத்தூர் ஆகிய பகுதிகளுக்கு பேருந்து இயக்கப்பட உள்ளன.

கிளாம்பாக்கம் பகுதியில் இருந்து . . .

இதே போல, கிளாம்பாக்கம் சி.எம்.டி.ஏ. காலநிலை பூங்கா அருகில் உள்ள திறந்தவெளி பகுதியில் இருந்து திருவண்ணாமலை, போளூர், வந்தவாசி ஆகிய பகுதிகளுக்கும், மறைமலை நகர் தற்காலிக பேருந்து நிலையத்தில் இருந்து, நாகப்பட்டினம், கும்பகோணம், தஞ்சாவூர் ஆகிய ஊர்களுக்கும், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து, வேலூர், பெங்களூர், திருத்தணி, கிழக்கு கடற்கரை சாலை, காஞ்சிபுரம் ஆகிய பகுதிகளுக்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

மேலும் படிக்க: ரயில்களில் ஹெட்போன் இல்லாமல் பாடல் கேட்டால் அவ்வளவுதான்.. 6 மாதம் கம்பி எண்ணனும்.. ரயில்வே அதிரடி அறிவிப்பு!

கும்பகோணம், சேலம், திருவண்ணாமலை வழியாக. . .

மாதவரம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து ஊத்துக்கோட்டை, பொன்னேரி வழியாக ஆந்திர மாநில மார்க்கமாக செல்லும் பேருந்துகள் மற்றும் வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகள் கும்பகோணம், சேலம், திருவண்ணாமலை, திருச்சி ஆகிய ஊர்களுக்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. பொதுமக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்கும், பொது மக்களுக்கு வசதியாக இருப்பதற்கும் சென்னையில் 6 இடங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளன. இதுபோல, முன்பதிவு இல்லா ரயில்கள் அதிக எண்ணிக்கையில் இயக்கப்பட வேண்டும் என்று போக்குவரத்து துறை சார்பில் தெற்கு ரயில்வே அதிகாரிகளிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஆயுத பூஜை- தீபாவளிக்காக சிறப்பு பேருந்துகள்

ஆயுத பூஜைக்காக தினந்தோறும் இயக்கப்படும் 2,191 பேருந்துகளுடன் சேர்த்து சிறப்பு பேருந்துகளாக 6,199 பேருந்துகள் என மொத்தம் 4 நாள்களுக்கு 14,963 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இதே போல, தீபாவளி பண்டிகைக்கு தினந்தோறும் இயக்கப்படும் 2,191 பேருந்துகள், சிறப்பு பேருந்துகள் 9,086 என மொத்தமாக 15,659 பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

மேலும் படிக்க: தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊர் செல்வது ஈசி.. எப்படி தெரியுமா? தெற்கு ரயில்வே சார்பில் 95 சிறப்பு ரயில்கள் இயக்கம்?

Follow Us