AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

காலையில் திருமணம்.. மாலையில் பிரிவு.. மதுபோதை மாப்பிள்ளையால் களேபரமான கல்யாண வீடு.. உறவினர்கள் சோகம்!

Kanyakumari Crime : கன்னியாகுமரி மாவட்டத்தில் ராணுவ வீரரருக்கும், பெண் மருந்தாளுனருக்கும் திருமணம் நடைபெற்ற நிலையில், மதுபோதையில் புதுமாப்பிள்ளை மணப்பெண்ணையும், மாமனாரையும் தாக்கியதால் புதுமண தம்பதிகள் காலை சேர்ந்த நிலையில் மாலையில் பிரிந்தனர். இதுகுறித்த காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.

காலையில் திருமணம்.. மாலையில் பிரிவு.. மதுபோதை மாப்பிள்ளையால் களேபரமான கல்யாண வீடு.. உறவினர்கள் சோகம்!
மாதிரி புகைப்படம்
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 14 Oct 2026 08:05 AM IST

கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் அருகே உள்ள ரீத்தாபுரம் பகுதியை சேர்ந்தவர் 31 வயதான ராணுவ வீரர். இவரும், கன்னியாகுமரி- கேரளம் எல்லைப் பகுதியான பாறைசாலை அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 26 வயது இளம் பெண்ணும் கடந்த நான்கு ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இந்த பெண் திருவனந்தபுரத்தில் செயல்பட்டு வரும் பிரபல தனியார் மருத்துவமனையில் மருந்தாளுனராக பணிபுரிந்து வருகிறார். இவர்களின் காதல் விவகாரம் இரு வீட்டிற்கு தெரிய வந்த நிலையில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. பின்னர், இருவரும் தங்களது பெற்றோர்களிடம் சமாதானம் பேசி திருமணத்துக்கு சம்மதித்தனர். அதன்படி, அந்த ராணுவ வீரருக்கும், பெண் மருந்தாளுனருக்கும் பாறை சாலையில் திருமணம் நடைபெற்றது. அன்றைய தினம் மாலை ராணுவ வீரரின் சொந்த ஊரான ரீத்தாபுரம் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் திருமண வரவேற்பு விழா நடைபெற்றது.

மணப்பெண், மாமனாரை தாக்கிய மணமகன்

இதில், மணமகன் மற்றும் மணமகள் வீட்டார், உறவினர்கள், நண்பர்கள் என ஏராளமானோர் பங்கேற்று இருந்தனர். அப்போது, மேடையில் மணப்பெண்ணுடன் நின்று கொண்டிருந்த ராணுவ வீரர் மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது, திடீரென மணப்பெண்ணின் தந்தையிடம் மது போதையில் இருந்த ராணுவ வீரர் தகராறு செய்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதை பார்த்து மணப்பெண்ணின் தந்தை கடும் அதிர்ச்சியில் உறைந்தார். உடனே, அருகில் இருந்தவர்கள் ராணுவ வீரரை சமாதானம் செய்ய முயன்றனர்.

மேலும் படிக்க: தீபாவளிக்கு ரூ.700 மதிப்பிலான சிறப்பு மளிகை தொகுப்பு.. அரசின் ஷ்பெஷல் அறிவிப்பு.. இல்லத்தரசிகள் மகிழ்ச்சி!

மணமகன் மீது குளச்சல் காவல் நிலையத்தில் புகார்

ஆனால், அவர் சமாதானம் ஆகாமல் மது போதையில் மணப்பெண்ணின் தந்தையை ஆபாசமாக திட்டி தாக்கினார். இதனை தடுக்க முயன்ற மணப்பெண்ணையும் ராணுவ வீரர் தாக்கி விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இந்த தாக்குதலில் காயமடைந்த மணப்பெண் மற்றும் அவரது தந்தை அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். பின்னர், இது தொடர்பாக குளச்சல் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

காலையில் நடந்த திருமணம், மாலையில் ஏற்பட்ட பிரிவு

ராணுவ வீரருக்கும், பெண் மருந்தாளுனருக்கும் காலையில் திருமணம் நடைபெற்ற நிலையில், மாலையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியின் போது, மது போதையில் புது மாப்பிள்ளை செய்த விபரீதத்தால் மணப் பெண்ணை அவரது தந்தை தனது வீட்டுக்கு அழைத்துச் சென்றார். இதனால், காலையில் திருமணத்தில் ஒன்றிணைந்த தம்பதி, மாலையில் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்வில் பிரிந்தனர்.

மேலும் படிக்க: இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.60 லட்சம் பீடி இலைகள்… தூத்துக்குடியில் கியூ பிரிவு போலீசார் தடுத்து நிறுத்தம்.. பரபரப்பு பின்னணி

Follow Us