AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊர் செல்வது ஈசி.. எப்படி தெரியுமா? தெற்கு ரயில்வே சார்பில் 95 சிறப்பு ரயில்கள் இயக்கம்?

Special Trains For Diwali Festival : தீபாவளி பண்டிகையையொட்டி, தெற்கு ரயில்வே சார்பில் நாடு முழுவதும் 95 சிறப்பு ரயில்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று ரயில்வே அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊர் செல்வது ஈசி.. எப்படி தெரியுமா? தெற்கு ரயில்வே சார்பில் 95 சிறப்பு ரயில்கள் இயக்கம்?
மாதிரி புகைப்படம்
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 14 Oct 2026 06:57 AM IST

தமிழகத்தில் ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகைக்காக அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் மற்றும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவது வழக்கமாகும். அந்த வகையில், நிகழாண்டு வருகிற நவம்பர் 8- ஆம் தேதி ( ஞாயிற்றுக்கிழமை) தீபாவளி பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. இதற்காக தமிழகத்தில் 95 சிறப்பு ரயில்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியிருப்பதாவது: கடந்த 2025- ஆம் ஆண்டு நடைபெற்ற தீபாவளி பண்டிகைக்கு தெற்கு ரயில்வே சார்பில் நாடு முழுவதும் பல்வேறு ஊர்களுக்கு சுமார் 85 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. அந்த வகையில், இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு அதைவிட சற்று கூடுதலாக 95 சிறப்பு ரயில்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

தென் மாவட்டங்களுக்கு 20 சிறப்பு ரயில்கள் இயக்க திட்டம்

ஆனால், தீபாவளி பண்டிகை நேரத்தில் பயணிகளின் தேவையை பொறுத்து இந்த ரயில்களின் எண்ணிக்கை மாறுபட வாய்ப்புள்ளது. இதே போல, சென்னையில் இருந்து திருநெல்வேலி, தூத்துக்குடி, மதுரை, தென்காசி உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு சுமார் 20 சிறப்பு ரயில்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது, தீபாவளி பண்டிகைக்காக அறிவிக்கப்பட்ட சிறப்பு ரயில்களில் தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்களுக்கான டிக்கெட்டுகள் அனைத்தும் உடனடியாக வெற்றி தீர்ந்து விட்டது.

மேலும் படிக்க: பாஜகவிடம் பல கோடி.. மின்சார கொள்முதலுக்கு பல ஆயிரம் கோடி.. முதல்வர் விஜயின் ஆந்திர பயணம் இதுக்குதானா.. சபாநாயகர் அதிரடி அட்டாக்!

சிறப்பு ரயில்கள் இயக்குவது தொடர்பாக வாரியத்துக்கு பரிந்துரை

எனவே, 20 ரயில்கள் தவிர சென்னையில் இருந்து திருநெல்வேலி. தூத்துக்குடி. கன்னியாகுமரி. நாகர்கோவில். மதுரை ஆகிய ஊர்களுக்கு கூடுதல் சிறப்பு ரயில்கள் இயக்குவது குறித்து பரிசீலனை செய்யப்படும். அந்த வகையில் தீபாவளி பண்டிகைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவது தொடர்பாக விரைவில் ரயில்வே வாரியத்திற்கு பரிந்துரை அனுப்ப திட்டமிட்டுள்ளோம் என்று தெரிவித்துள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையின் போது சென்னை மாவட்டத்தில் இருந்து சுமார் 9 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சொந்த ஊர்களுக்கு செல்கின்றனர்.

ரயில் பயணத்தை விரும்பும் பொது மக்கள்

இவர்கள் பெரும்பாலும் ரயில் பயணத்தையே விரும்புகின்றனர். பொதுவாக தீபாவளி பண்டிகைக்கு 2 மாதங்களுக்கு முன்னதாக முன்பதிவு தொடங்கி விடுகிறது. அந்த வகையில், எதிர்வரும் தீபாவளி பண்டிகைக்காக கடந்த செப்டம்பர் 6- ஆம் தேதி தொடங்கிய முன்பதிவு 9- ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில், ஏராளமானோர் போட்டி போட்டு முன்பதிவு செய்ததால் சில நிமிடங்களிலேயே அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்தன. டிக்கெட் கிடைக்காத பொதுமக்கள் தீபாவளி சிறப்பு ரயில் அறிவிப்புக்காக காத்திருக்கின்றனர். இவர்களுக்காகவே ரயில்வே நிர்வாகம் சார்பில் 95 சிறப்பு ரயில்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: 234 தொகுதிகளிலும் இறங்கும் வீ த லீடர்ஸ்.. அதிரடியாக அறிவித்த அண்ணாமலை.. மாஸ் பிளானின் பின்னணி என்ன!

Follow Us