AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

பாஜகவிடம் பல கோடி.. மின்சார கொள்முதலுக்கு பல ஆயிரம் கோடி.. முதல்வர் விஜயின் ஆந்திர பயணம் இதுக்குதானா.. சபாநாயகர் அதிரடி அட்டாக்!

Appavu criticizes CM Vijay : தமிழக முதல்வர் ஜோசப் விஜய் பாஜகவிடம் கோடிக்கணக்கில் பணம் பெற்றுள்ளதாகவும், ஆந்திராவில் இருந்து பல ஆயிரம் கோடி பணம் பெற்றுள்ளதாகவும் சட்டப்பேரவை முன்னாள் தலைவர் அப்பாவு கடுமையான குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார். அதுகுறித்து பார்க்கலாம்.

பாஜகவிடம் பல கோடி.. மின்சார கொள்முதலுக்கு பல ஆயிரம் கோடி.. முதல்வர் விஜயின் ஆந்திர பயணம் இதுக்குதானா.. சபாநாயகர் அதிரடி அட்டாக்!
மு. அப்பாவு, சிஎம் விஜய்
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 13 Oct 2026 20:09 PM IST

தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தமிழக வெற்றிக் கழகம் தொடங்குவதற்கு பாரதீய ஜனதா கட்சியிடமும், செயற்கையான மின் தட்டுப்பாட்டை ஏற்படுத்தி மின் கொள்முதலுக்கு ஆந்திராவிடமும் பல ஆயிரம் கோடி பணம் பெற்றுள்ளதாக முன்னாள் சபாநாயகர் அப்பாவு பெரும் குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் குறியிருப்பதாவது: தமிழக முதல்வர் ஜோசப் விஜய் இன்று ஆந்திர மாநிலத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ளார். தமிழக வெற்றி கழகம் தொடங்குவதற்கு 3 மாதங்கள் முன்பு மத்திய பெண் அமைச்சர், நடிகர் விஜய், ஆந்திர முதல்வர், தமிழ் நடிகை உள்பட பலர் துபாயில் ஒன்று கூடினர்.

கரூர் சம்பவ விசாரணை முடக்கம்

அங்கு திமுகவுக்கு எதிராக புதிய கட்சி தொடங்குவதற்கு பாஜகவிடம் பல கோடி ரூபாயை விஜய் வாங்கி தவெக ஆரம்பிக்கப்பட்டதாக துபாய் வாழ் தமிழர்கள் கூறுவதை புறந்தள்ள முடியாது. நடிகர் விஜய் பரப்புரையால் கரூரில் 41 பேர் உயிரிழந்த அடுத்த நாளை பாஜக எம். பி. ஹேமமாலினி தலைமையில் பாஜக எம்பிக்கள் குழு ஆய்வு செய்து விஜய்க்கு ஆதரவாக கருத்து கூறியது. அத்துடன், அந்த வழக்கு உடனடியாக சிபிஐக்கு மாற்றப்பட்டதையும், தற்போது விசாரணை இன்றி முடக்கப்பட்டு இருப்பதுமே துபாய் சம்பவத்துக்கு சாட்சி என்பதை மறுக்க முடியுமா ஜோசப் விஜய் சிஎம் சார்.

மேலும் படிக்க: எதிரிகள் தொல்லை அகல.. ராகு கால தரிசனம்.. ஆந்திரா ஸ்ரீ கனக துர்கா கோவிலில் முதல்வர் விஜய் சிறப்பு வழிபாடு!

ஆந்திர முதல்வருக்கு செய்யும் நன்றி கடனா

தமிழக வெற்றிக் கழக ஆட்சி அமைந்த 10 நாட்களுக்குள் ஆந்திராவை தலைமையிடமாக கொண்ட ஹட்சன் பால் நிறுவன தலைவர் தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜயை சந்தித்ததன் மர்மம் என்ன. அதற்கு அடுத்த நாள் முதல் தமிழக அரசு பால் கொள்முதலை குறைத்தது ஏன். ஆவின் பாலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது ஏன். இந்த விவகாரங்கள் எல்லாம் ஆந்திர முதல்வரின் வாழ் நிறுவனத்திற்கு விஜய் செய்யும் நன்றி கடன் என்றால் தமிழக விவசாயிகளுக்கு நீங்கள் செய்யும் துரோகம் இல்லையா சிஎம் சார்.

ஆந்திர ரெட்டி கேங் அழைத்து சென்றதா

தமிழகத்தில் மின் உற்பத்தியை பாதியாக குறைத்து செயற்கையான மின் தட்டுப்பாட்டை ஏற்படுத்தி ரூ.5- க்கு உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை ஒரு யூனிட் ரூ. 35 வீதம் ஆந்திர நிறுவனத்திடம் 4500 மெகாவாட் மின்சாரத்தை மக்கள் வரிப்பணத்தில் கொள்முதல் செய்வதற்காக பல ஆயிரம் கோடி ரூபாய் கமிஷன் வாங்குவதற்கு ஆந்திர ரெட்டி கேங் உங்களை ஆந்திர மாநிலத்திற்கு அழைத்து செல்கிறதா சிஎம் சார் என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

மேலும் படிக்க: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு- தமிழக முதல்வர் ஜோசப் விஜய் சந்திப்பு! பின்னணி என்ன!

Follow Us