AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

சென்னை-தூத்துக்குடியில் பரபரப்பு.. ஒரே நாளில் 7.5 கிலோ போதை இலை பறிமுதல்.. போலீசார் விசாரணை!

Tamil Nadu 7.5 kg Ganja Seized : சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் ஹவுரா- திருச்சி ரயில் மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் இருவேறு இடத்தில் மொத்தம் 7.5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றர்.

சென்னை-தூத்துக்குடியில் பரபரப்பு.. ஒரே நாளில் 7.5 கிலோ போதை இலை பறிமுதல்.. போலீசார் விசாரணை!
மாதிரிப் படம்
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 13 Oct 2026 21:15 PM IST

மேற்குவங்க மாநிலம், ஹவுரா மாவட்டத்தில் இருந்து திருச்சிக்கு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயிலானது, சென்னை வழியாக திருச்சிக்கு சென்று வருகிறது. இந்த நிலையில், ரயிலானது ஹவுரா ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு வந்து கொண்டிருந்தது. இன்று செவ்வாய்க்கிழமை காலை சென்னை எழும்பூர் ரயில் நிலையத்துக்கு வந்த நிலையில், ரயில் பெட்டிகளில் ரயில்வே பாதுகாப்பு படையினர் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது, ரயிலில் உள்ள பொது பெட்டியில் பை ஒன்று கேட்பாரற்ற நிலையில் கிடந்தது. இதை பார்த்த ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் அதனை மீட்டு சோதனை செய்ததில், ரூ. 1.75 லட்சம் மதிப்பிலான 3.5 கிலோ கஞ்சா இருந்தது தெரிய வந்தது. இதனை பறிமுதல் செய்த போலீசார் அதனை நுண்ணறிவு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் விசாரணை

மேலும், கஞ்சா கடத்தல் சம்பவம் தொடர்பாக ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அத்துடன், ரயில் நிலையங்களில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர். மேலும், ரயிலில் பயணம் செய்த பயணிகள் குறித்த விவரங்களையும் போலீசார் தீவிரமாக திரட்டி வருகின்றனர். அதன் அடிப்படையில், கஞ்சா எங்கிருந்து கடத்தி வரப்பட்டது. அதனை கடத்தி வந்தது யார்.

மேலும் படிக்க: இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.60 லட்சம் பீடி இலைகள்… தூத்துக்குடியில் கியூ பிரிவு போலீசார் தடுத்து நிறுத்தம்.. பரபரப்பு பின்னணி

போதைப் பொருள் தடுப்பு குழு நடவடிக்கை

என்பன உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். இதில், துப்பு துலங்கும் நிலையில், கஞ்சா கடத்தி ஈடுபட்டவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று ரயில்வே போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் போதைப் பொருட்கள் தடுப்பு நடவடிக்கையில் அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதற்காக, போதைப் பொருள் தடுப்பு குழு அமைக்கப்பட்டு கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் தலைநகர் சென்னையில் வெளி மாநிலத்தில் இருந்து கஞ்சா கடத்தி வரப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் 4 கிலோ கஞ்சா பறிமுதல்

இதனிடையே, தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூர் பிரதான சாலையில் போலீசார் இரவு ரோந்தில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்து கொண்டிருந்த நபரை நிறுத்தி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில், அவரிடம் 4 கிலோ கஞ்சா இருந்தது தெரிய வந்தது. உடனே, அவரை தென் பாகம் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். இதில், அவர் தூத்துக்குடி எம்ஜிஆர் நகரை சேர்ந்த கவில்தேவ் என்பதும், இவர், சிறையில் இருந்து விடுதலையான ரவுடி என்பதும் தெரிய வந்தது. அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து மீண்டும் சிறையில் அடைத்தனர்.

மேலும் படிக்க: தென்காசி- திருநெல்வேலி மாவட்டங்களில் மின் தடை.. எந்தெந்த பகுதிகள் தெரியுமா? இதோ முழு விவரம்!

Follow Us