தென்காசி- திருநெல்வேலி மாவட்டங்களில் மின் தடை.. எந்தெந்த பகுதிகள் தெரியுமா? இதோ முழு விவரம்!
Tenkasi And Tirunelveli Power Cut : தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் குறிப்பிட்ட பகுதிகளில் நாளை மறுநாள் வியாழக்கிழமை மின் தடை செய்யப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எந்தெந்த பகுதிகளில் மின் தடை என்ற முழு விவரத்தை விரிவாக பார்க்கலாம்.
தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் நாளை மறுநாள் வியாழக்கிழமை ( அக்டோபர் 15- ஆம் தேதி) மின்தடை செய்யப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில், தென்காசி மாவட்டம், கடையநல்லூர் கோட்ட செயற்பொறியாளர் கற்பக விநாயக சுந்தரம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: வரும் வியாழக்கிழமை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் அன்றைய தினம் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை கீழ்கண்ட ஊர்களில் மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளது. அதன்படி,
- கடையநல்லூர்.
- முத்துகிருஷ்ணாபுரம்.
- மாவடிக்கால்.
- பேட்டை.
- வலசை.
- குமந்தாபுரம்.
- கருப்பாநதி.
- முத்துச்சாமிபுரம்.
- கண்மணியாபுரம்.
- தார்க்காடு.
- பால அருணாச்சலபுரம்.
மேலும் படிக்க: ஆயுத பூஜை ஸ்பெஷல்.. பொரி, பூ, பழம் எல்லாம் ஒரே இடத்தில்.. கோயம்பேட்டில் சிறப்புச் சந்தை!
போக நல்லூர் முதல் கொடிக்குறிச்சி வரை
- போக நல்லூர்.
- மங்களபுரம்.
- பொய்கை.
- கம்பனேரி.
- அச்சம்பட்டி.
- நயினாரகரம்.
- ஊர் மேல் அழகியான்.
- இடைகால்.
- சிவராம் பேட்டை.
- வேலாயுதபுரம்.
- கொடிக் குறிச்சி ஆகிய பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தியாகராஜ நகர் பகுதிகளில் மின் தடை
இதே போல, திருநெல்வேலி நகர்ப்புற கோட்டம் மற்றும் தியாகராஜ நகர் துணை மின் நிலையங்களில் மின் தடை செய்யப்பட உள்ளது. இது தொடர்பாக, நெல்லை நகர்ப்புற கோட்ட செயற்பொறியாளர் ரவி ராமதாஸ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது: தியாகராஜ நகர் துணை மின் நிலையத்தில் வரும் வியாழக்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதன் காரணமாக, அன்றைய தினம் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்பட உள்ளது. அதன்படி,




- தியாகராஜ நகர்.
- ராஜகோபாலபுரம்.
- மகாராஜா நகர்.
- குத்துக்கல்.
- சிவந்திப்பட்டி.
- முத்தூர்.
- ஐ.ஓ.பி. காலனி.
- கொடிக்குளம்.
- மல்லிகா காலனி.
- ஏ.ஆர். லைன்.
தாமிரபதி காலனி முதல் சித்தார்த் நகர் வரை
- தாமிரபதி காலனி.
- ஸ்ரீராமன் குளம்.
- ரயில்வே பீடர் ரோடு.
- ராஜேந்திரன் நகர்.
- கோரிப்பள்ளம்.
- அன்பு நகர்.
- இ. பி. காலனி.
- ராம் நகர்.
- என். ஹச். காலனி.
- லக்கி காலனி.
- சித்தார்த் நகர் ஆகிய பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
மின் நிறுத்தத்துக்கு ஒத்துழைப்பு வழங்குக
எனவே, இந்த பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள், வியாபாரிகள், வணிகர்கள், தொழிற்சாலைகள் உள்ளிட்டார் மின் நிறுத்தத்துக்கு ஏற்றவாறு தங்களது பணிகளை மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டும். அத்துடன், மின்துறை ஊழியர்களுக்கு உரிய ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: தீபாவளிக்கு ரூ.700 மதிப்பிலான சிறப்பு மளிகை தொகுப்பு.. அரசின் ஷ்பெஷல் அறிவிப்பு.. இல்லத்தரசிகள் மகிழ்ச்சி!