“ஓம் சக்தி பராசக்தி திமுக ஒரு தீய சக்தி” உங்க அப்பாவ காணோம்.. மு.க.ஸ்டாலின்-உதயநிதி குறித்து அரசு பேருந்தில் சர்ச்சை வாசகம்..!
Government Bus Controversial Name Board : திருச்சி டூ புதுச்சேரி மார்க்கத்தில் இயங்கும் அரசுப் பேருந்தின் பின் பகுதியில் டிஜிட்டல் போர்டில் ஓம் சக்தி பராசக்தி திமுக ஒரு தீய சக்தி என்ற வாசகமும், மு.க.ஸ்டாலின், உதயநிதியை விமர்சித்து சர்ச்சையான வாசகம் இடம் பெற்றிருந்தது.
தமிழகத்தில் இயக்கப்பட்டு வரும் அரசு பேருந்து டிஜிட்டல் போர்டுகளில் அவ்வப்போது ஊர் பெயர்களுக்கு பதிலாக கட்சிகளின் பெயர்கள் சர்ச்சைக்குரிய வாசகங்கள் ஆகியவை இடம்பெற்று வருவது தொடர் கதையாகி வருகிறது. அந்த வகையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு சென்னையில் சாலையில் சென்று கொண்டிருந்த ஒரு அரசு பேருந்தின் பின்புற டிஜிட்டல் போர்டில் தமிழக வெற்றி கழகம் என்றும், மற்றொரு அரசு பேருந்தின் டிஜிட்டல் போர்டில் தக்காளி வெற்றி கழகம் என்ற வாசகங்கள் பிரசுரம் ஆகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தன. இந்த நிலையில், திருச்சி டூ புதுச்சேரி மார்க்கமாக பயணித்து வரும் அரசு பேருந்து ( டிஎன் எஸ் டி சி) டிஜிட்டல் போர்டில் ” ஓம் சக்தி பராசக்தி திமுக ஒரு தீய சக்தி” என்றும் கக்கூஸ் லீடர் உதயநிதி, குளத்தூர் கொத்து பரோட்டா ஸ்டாலின் அங்கிள், எங்க உங்க அப்பாவை காணோம் என்பன உள்ளிட்ட வாசகங்கள் இடம் பெற்றுள்ளது.
சமூகவலைதளங்களில் வைரலாகும் வீடியோ காட்சிகள்
இது தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. பொதுவாக அரசு பேருந்துகளில் உள்ள டிஜிட்டல் போர்டில் ஊர்களின் பெயர்கள், மகளிர் இலவச பேருந்து, வெற்றி பயணம், மகளிர் விடியல் பேருந்து என்ற வாசகங்கள் இடம்பெறுவது வழக்கமாகும். ஆனால், தற்போது அதற்கு மாறாக சில மர்ம நபர்கள் இதுபோன்ற சர்ச்சைக்குரிய வாசகங்களை வெளியிடுவது சர்ச்சையாகி உள்ளது.




மேலும் படிக்க: எதிரிகள் தொல்லை அகல.. ராகு கால தரிசனம்.. ஆந்திரா ஸ்ரீ கனக துர்கா கோவிலில் முதல்வர் விஜய் சிறப்பு வழிபாடு!
திமுகவை முதல்வர் விஜய் விமர்சித்த வாசகங்கள்
தமிழக சட்டமன்ற தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும், முதல் அமைச்சருமான ஜோசப் விஜய் பிரச்சார கூட்டங்களில் திமுகவை கடுமையாக விமர்சிப்பதற்காக “ஓம் சக்தி பராசக்தி திமுக ஒரு தீய சக்தி” என்ற வார்த்தையை பயன்படுத்தி இருந்தார். இதேபோல, சட்டப்பேரவை கூட்டத் தொடரின் போது, மின்சாரத் துறை அமைச்சர் சி. டி. ஆர். நிர்மல் குமார், உதயநிதி ஸ்டாலினை பார்த்து 3 மணி நேரம் பாத்ரூமில் இருந்த எதிர்க்கட்சித் தலைவர் என்று விமர்சித்து இருந்தார்.
ஓம் சக்தி… பராசக்தி திமுக ஒரு தீய சக்தி…எங்க உங்க அப்பாவ காணோம்?*
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகப் பேருந்து ஒன்றில் திமுகவுக்கு எதிரான வாசகங்கள் https://t.co/Qb2fx05G2N
— 𝙒𝙖𝙡𝙩𝙚𝙧 𝙒𝙝𝙞𝙩𝙚 (@SivaTvk45) October 13, 2026
கொளத்தூர் கொத்து பரோட்டோ.. எங்க உங்க அப்பாவை காணோம்
இதேபோல, சட்டப்பேரவையில் முன்னாள் முதல்வர் மு. க. ஸ்டாலின் தோல்வியை, முதல்வர் ஜோசப் விஜய் கொளத்தூர் கொத்து பரோட்டா எனவும், உதயநிதியை பார்த்து உங்க அப்பாவை எங்க காணோம் என்று மறைமுகமாகவும் விமர்சனம் செய்திருந்தார். இவற்றை பயன்படுத்தி தான் தற்போது சர்ச்சையான வார்த்தைகளை அரசு பேருந்தின் டிஜிட்டல் போர்டில் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு- தமிழக முதல்வர் ஜோசப் விஜய் சந்திப்பு! பின்னணி என்ன!