AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

விண்ணை முட்டும் அரசி விலை.. அரசு எடுத்த அதிரடி முடிவு.. கூட்டுறவு அங்காடிகளில் ஒரு கிலோ ரூ. 50-க்கு விற்க திட்டம்!

Fine Variety Rice Sell Cooperative Stores : தமிழகத்தில் அதிகரித்து வரும் அரசி விலையை சமாளிப்பதற்காக கூட்டுறவு அங்காடிகளில் ஒரு கிலோ சன்ன ரக அரசியை ரூ. 50- க்கு விற்பனை செய்ய மாநில அரசு திட்டமிட்டு உள்ளது .

விண்ணை முட்டும் அரசி விலை.. அரசு எடுத்த அதிரடி முடிவு.. கூட்டுறவு அங்காடிகளில் ஒரு கிலோ ரூ. 50-க்கு விற்க திட்டம்!
கோப்புப்படம்.
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 14 Oct 2026 09:27 AM IST

தமிழகத்தில் அரிசி விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனை சமாளிப்பதற்காக கூட்டுறவு அங்காடிகளில் ஒரு கிலோ சன்ன ரக அரிசி ரூ. 50- க்கு விற்பனை செய்ய தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில் பல்வேறு இடங்களில் அரிசி தட்டுப்பாடு காரணமாக அதன் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் ஒரு கிலோ ரூ. 50 முதல் ரூ. 60 வரை விற்பனை செய்யப்பட்ட சன்ன ரக அரிசி தற்போது ரூ. 70 முதல் ரூ. 80 வரை விற்பனை செய்யப்படுகிறது. அதாவது ஒரு கிலோவுக்கு ரூ. 20 கூடியுள்ளது. இதே போல, பருப்பு வகைகள், சமையல் எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலைகளும் கடுமையாக உயர்ந்துள்ளது.

உணவுத்துறை அமைச்சர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

அதிகரித்து வரும் இந்த விலை உயர்வை கட்டுப்படுத்துவது தொடர்பாக உணவுத்துறை அமைச்சர் வெங்கட்ரமணன் தலைமையில் விலை கண்காணிப்பு குழு ஆய்வு கூட்டம் நடைபெற்றது. சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தமிழக அரசின் தலைமை செயலாளர் சாய் குமார், உணவுத்துறை செயலாளர் அமுதா, நிதித்துறை செயலாளர் சித்திக் உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர். இதில், அத்தியாவசிய பொருள்களின் விலையை கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

மேலும் படிக்க: தீபாவளிக்கு ரூ.700 மதிப்பிலான சிறப்பு மளிகை தொகுப்பு.. அரசின் ஷ்பெஷல் அறிவிப்பு.. இல்லத்தரசிகள் மகிழ்ச்சி!

ரூ. 40 முதல் ரூ. 50 வரை சன்ன ரக அரசி விற்க திட்டம்

இந்த நிலையில், தமிழகத்தில் அதிகரித்து வரும் அரிசி விலை தொடர்பாக கூட்டுறவு மற்றும் உணவுத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், இந்திய உணவுக் கழகம் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து சன்ன ரக அரிசியே கொள்முதல் செய்து கூட்டுறவு அங்காடிகள் மூலமாக ஒரு கிலோ ரூ. 40 முதல் ரூ. 50 வரை விற்பனை செய்வது தொடர்பாக தமிழக அரசு பரிசீலனை செய்து வருகிறது. இதற்காக எந்தெந்த மாநிலங்களில் அரிசி கிடைக்கும், அதனை எவ்வளவு அளவு கொள்முதல் செய்ய முடியும் என்பன உள்ளிட்ட விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.

கூட்டுறவு அங்காடிகள் மூலம் குறைந்த விலையில் அரிசி

இதில், சுமார் ஒரு லட்சம் டன் அரிசி கிடைப்பது உறுதி செய்யப்பட்டால், கூட்டுறவு அங்காடிகள் மூலம் குறைந்த விலையில் சன்ன ரக அரிசியை விற்பனை செய்வதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என்று தெரிவித்தார். முன்னதாக அதிகரித்து வரும் அரசி விலையால் வரும் தீபாவளிக்குள் ஒரு கிலோ அரிசி ரூ. 100- ஐ தொடும் என்று அரிசி விற்பனையாளர்கள் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: பாஜகவிடம் பல கோடி.. மின்சார கொள்முதலுக்கு பல ஆயிரம் கோடி.. முதல்வர் விஜயின் ஆந்திர பயணம் இதுக்குதானா.. சபாநாயகர் அதிரடி அட்டாக்!

Follow Us