AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

கோவையில் ரூ. 300 கோடியில் பெரியார் அறிவுலகம் நூலகம்.. இன்று முதல்வர் விஜய் திறந்து வைக்கிறார்!

CM Vijay Coimbatore Visit: பெரியார் அறிவுலகத்தைத் திறந்து வைப்பதற்காக முதலமைச்சர் விஜய் இன்று காலை சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் கோவை செல்கிறார். அங்கிருந்து கார் மூலம் நிகழ்ச்சி நடைபெறும் இடத்துக்குச் செல்லும் அவர், சுமார் 10 கிலோமீட்டர் தொலைவுக்கு ரோடு ஷோ மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவையில் ரூ. 300 கோடியில் பெரியார் அறிவுலகம் நூலகம்.. இன்று முதல்வர் விஜய் திறந்து வைக்கிறார்!
பெரியார் அறிவுலகம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 16 Oct 2026 08:43 AM IST

அக்டோபர் 16, 2026: கோவை காந்திபுரம் பகுதியில் சுமார் 300 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பிரம்மாண்டமான பெரியார் அறிவுலகம் நூலகத்தைத் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் இன்று திறந்து வைக்கிறார். மாணவர்கள், இளைஞர்கள், போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் நபர்கள் மற்றும் பொதுமக்களுக்குப் பயனளிக்கும் வகையில் நவீன வசதிகளுடன் இந்த அறிவுலகம் அமைக்கப்பட்டுள்ளது.

ரூ. 300 கோடி மதிப்பில் பிரம்மாண்ட நூலகம்!

கோவை காந்திபுரம் பேருந்து நிலையம் அருகே, சிறைத்துறைக்குச் சொந்தமான சுமார் 6.98 ஏக்கர் நிலப்பரப்பில் பெரியார் அறிவுலகம் கட்டமைக்கப்பட்டுள்ளது. சுமார் 1,98,000 சதுர அடி பரப்பளவில் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ள இந்தக் கட்டிடத்தில் நூலகம், அறிவியல் மையம், டிஜிட்டல் நூலகம், குழந்தைகளுக்கான வாசிப்புப் பிரிவு, போட்டித் தேர்வு நூலகம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இடம்பெற்றுள்ளன.

கடந்த 2024-ஆம் ஆண்டு நவம்பர் 6-ஆம் தேதி இந்தத் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டு, கட்டுமானப் பணிகள் விரைவாக மேற்கொள்ளப்பட்டன. தற்போது பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், பெரியார் அறிவுலகம் பொதுமக்களின் பயன்பாட்டுக்காகத் திறக்கப்படுகிறது.

இன்று கோவை வரும் முதல்வர் விஜய்!

பெரியார் அறிவுலகத்தைத் திறந்து வைப்பதற்காக முதலமைச்சர் விஜய் இன்று காலை சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் கோவை செல்கிறார். அங்கிருந்து கார் மூலம் நிகழ்ச்சி நடைபெறும் இடத்துக்குச் செல்லும் அவர், சுமார் 10 கிலோமீட்டர் தொலைவுக்கு ரோடு ஷோ மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சரின் வருகையை முன்னிட்டு கோவையில் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பெரியார் அறிவுலகம் திறக்கப்படுவது கோவை மக்களிடையேயும், குறிப்பாக மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடையேயும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க: பொதுமக்களுக்கு குட் நியூஸ்!.. மலிவு விலையில் மளிகைப் பொருட்கள் விற்பனை.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!!

ஒவ்வொரு தளத்திலும் என்னென்ன வசதிகள்?

பெரியார் அறிவுலகம் பல்வேறு பிரிவுகளைக் கொண்ட நவீனக் கட்டமைப்பாக உருவாக்கப்பட்டுள்ளது. இங்கு குழந்தைகள் முதல் போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் இளைஞர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற வாசிப்பு மற்றும் கற்றல் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

தரைத் தளம்: மாற்றுத்திறனாளிகளுக்கான நூலகம், பிரெய்லி புத்தகங்கள், ஒரே நேரத்தில் சுமார் 300 முதல் 400 பேர் அமர்ந்து படிக்கும் வசதி, அரங்கம், அறிவியல் மையம் மற்றும் ஸ்பேஸ் லிப்ட் எனப்படும் சிறப்பு வசதி உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.

முதல் தளம்: வரவேற்புப் பகுதி மற்றும் அறிவியல் மையம் அமைக்கப்பட்டுள்ளன.

இரண்டாவது தளம்: குழந்தைகளுக்கான பிரத்யேக நூலகம் மற்றும் சுயவாசிப்புப் பிரிவு இடம்பெற்றுள்ளன. இதன் மூலம் சிறு வயதிலிருந்தே குழந்தைகளிடையே வாசிப்புப் பழக்கத்தை வளர்க்கும் வாய்ப்பு உருவாகும்.

மூன்றாவது தளம்: போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் இளைஞர்களுக்கான நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. அரசுப் பணிகள் உள்ளிட்ட பல்வேறு போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் இந்த வசதியைப் பயன்படுத்திக்கொள்ள முடியும்.

நான்காவது தளம்: வரலாற்றுப் புத்தகங்கள், தமிழ் நூல்கள் மற்றும் இதழ்களுக்கான பிரிவுகள் இடம்பெற்றுள்ளன.

மேலும் படிக்க: செஞ்சி சிறுமி மாயமான வழக்கில் அதிரடி திருப்பம்.. கரும்பு தோட்டத்திற்குள் நுழைந்த மோப்ப நாய்.. 5வது நாளாக தீவிர தேடுதல் வேட்டை!!

ஐந்தாவது மற்றும் ஆறாவது தளங்கள்: ஆங்கில நூல்களுக்கான நூலகப் பிரிவுகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், புத்தாக்க நிறுவனங்களுக்கான புத்தாக்க மையம் மற்றும் ஆங்கிலம் கற்கும் பிரிவும் இடம்பெற்றுள்ளன.

ஏழாவது தளம்: அறிவியல் மையம், டிஜிட்டல் நூலகம் மற்றும் விண்வெளிக் கோளரங்கம் உள்ளிட்ட வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன. கோளரங்கத்தின் மூலம் விண்வெளி தொடர்பான காட்சிகளைக் கண்டு ரசிப்பதுடன், அறிவியல் சார்ந்த தகவல்களையும் மாணவர்கள் அறிந்துகொள்ள முடியும்.

மாணவர்கள், இளைஞர்களுக்கு உதவும் அறிவுக் களஞ்சியம்!

பெரியார் அறிவுலகத்தில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் இடம்பெற உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு துறைகளைச் சேர்ந்த நூல்கள், ஆராய்ச்சிப் படிப்பகங்கள், டிஜிட்டல் நூலகம் மற்றும் அறிவியல் சார்ந்த வசதிகள் ஒரே இடத்தில் அமைந்திருப்பது இதன் முக்கியச் சிறப்பாகும்.

குறிப்பாக, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் இளைஞர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் வாசிப்பில் ஆர்வமுள்ள பொதுமக்கள் ஆகியோருக்குப் பெரியார் அறிவுலகம் பயனுள்ளதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நவீன நூலக வசதிகளுடன் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தை அறிந்துகொள்வதற்கான வாய்ப்புகளையும் ஒருங்கிணைத்துள்ள இந்த அறிவுலகம், கோவையின் முக்கியக் கல்வி மற்றும் அறிவு மையங்களில் ஒன்றாக உருவெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us