AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

செஞ்சி சிறுமி மாயமான வழக்கில் அதிரடி திருப்பம்.. கரும்பு தோட்டத்திற்குள் நுழைந்த மோப்ப நாய்.. 5வது நாளாக தீவிர தேடுதல் வேட்டை!!

Gingee Child Missing Case: விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே 7 வயது சிறுமி ஹேமாவதி மாயமான வழக்கில் ஐந்தாவது நாளாக தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. மோப்ப நாய் கரும்புத் தோட்டத்திற்குச் சென்று நின்றதையடுத்து, அப்பகுதியில் போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

செஞ்சி சிறுமி மாயமான வழக்கில் அதிரடி திருப்பம்.. கரும்பு தோட்டத்திற்குள் நுழைந்த மோப்ப நாய்.. 5வது நாளாக தீவிர தேடுதல் வேட்டை!!
மாயமான சிறுமி
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 16 Oct 2026 08:23 AM IST

விழுப்புரம், அக்.16: விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த ஆலமுண்டி கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி வடிவேலு – பவானி தம்பதியினரின் 7 வயது மகள் ஹேமாவதி கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென மாயமான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. கடந்த 11ஆம் தேதி தனது பிறந்தநாளைக் குடும்பத்தினருடன் கோலாகலமாகக் கொண்டாடிய சிறுமி, அன்று இரவு வழக்கம்போல் தூங்கச் சென்ற நிலையில், மறுநாள் அதிகாலை திடீரெனக் காணாமல் போயுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் அளித்த புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த நான்கு நாட்களாக நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார், பல்வேறு தனிப்படைகள் மற்றும் தடயவியல் நிபுணர்களின் உதவியுடன் தேடியும் எந்தவித துப்பும் துலங்காத நிலையில், தற்போது ஐந்தாவது நாளாக விசாரணையில் மிக முக்கியமான திருப்பங்கள் ஏற்பட்டுள்ளன.

இதையும் படிக்க: ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதி மறுப்பது ஏன்?.. தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி!

காவல்துறையின் தீவிரத் தேடுதல்:

காணாமல் போன சிறுமியை மீட்கும் முயற்சியாக காவல்துறையினர் பல்வேறு கோணங்களில் களமிறங்கியுள்ளனர். ஆலமுண்டி கிராமத்தில் உள்ள ஒவ்வொரு வீடாக நேரடியாகச் சென்று தகவல்கள் சேகரிக்கப்பட்டதோடு, அப்பகுதியைச் சேர்ந்த மற்றும் வெளி மாவட்டங்களைச் சேர்ந்த சந்தேகத்திற்கிடமான பத்துக்கும் மேற்பட்டோரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. மேலும், சென்னை தடயவியல் துறை நிபுணர் சண்முகம் தலைமையிலான குழுவினர் சிறுமியின் வீடு மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் சோதனை மேற்கொண்டனர். அதுமட்டுமின்றி, கிராமத்தைச் சுற்றியுள்ள விவசாய நிலங்கள், முட்புதர்கள், ஏரிகள், கிணறுகள் மற்றும் மலைக்குன்றுகளில் உள்ள குகைகளில் டிரோன்கள் மூலமாகவும், தீயணைப்புத் துறையினர் மற்றும் மரக்காணம் மீனவர்களின் சுறுக்குமடி வலைகள் கொண்டும் தீவிர தேடுதல் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. செல்போன் টাவர் சிக்னல்களை வைத்தும் புலனாய்வு முடுக்கிவிடப்பட்டபோதிலும், ஆரம்பத்தில் எந்தவிதத் தடயமும் கிடைக்காமல் போலீசார் திணறினர்.

கரும்புத் தோட்டத்தில் சோதனை:

இந்த வழக்கில் விசாரணை ஐந்தாவது நாளை எட்டியுள்ள நிலையில், காவல்துறை தனது வியூகத்தை முற்றிலும் மாற்றி புதிய கோணத்தில் களமிறங்கியுள்ளது. குறிப்பாக, அப்பகுதியில் முன்பு குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களின் பட்டியலைத் தயாரித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையில், இந்த வழக்கின் மிக முக்கியத் திருப்பமாக, சிறுமியின் வீட்டிலிருந்து மோப்பம் பிடித்து ஓடிய மோப்ப நாய், அருகில் உள்ள ஒரு பரந்த கரும்புத் தோட்டத்திற்குச் சென்று நின்றது. இதன் அடிப்படையில், ஐந்தாவது நாளான இன்று காலை முதல் அந்தக் கரும்புத் தோட்டத்திற்குள் ஏராளமான போலீசார் மற்றும் மீட்புப் படையினர் இறக்கப்பட்டுச் சல்லடை போட்டுத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் தீவிர சோதனையின் மூலம் சிறுமி குறித்த முக்கியமான தடயங்கள் அல்லது துப்புகள் கிடைக்கும் எனப் போலீசார் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.

இதையும் படிக்க: பொதுமக்களுக்கு குட் நியூஸ்!.. மலிவு விலையில் மளிகைப் பொருட்கள் விற்பனை.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!!

பொதுமக்களின் ஒத்துழைப்பு:

சிறமி மாயமான விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், சிறுமியின் புகைப்படம் மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கும் அனுப்பப்பட்டு தீவிரக் கண்காணிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும், சிறுமி கடத்தப்பட்டிருக்கலாமோ என்ற கோணத்திலும் தீவிர விசாரணை நடந்து வருகிறது. இதற்கிடையே, சிறுமி குறித்த உண்மையான தகவல்களை அல்லது தடயங்களை வழங்கி உதவுவோருக்குத் தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் 2 லட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஐந்தாவது நாளாகத் தொடரும் இந்த அதிரடித் தேடுதல் வேட்டையின் மூலம் சிறுமி பத்திரமாக மீட்கப்படுவார் என்ற நம்பிக்கையுடன் பொதுமக்களும் காவல்துறையினரும் காத்துள்ளனர்.

Follow Us