AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதி மறுப்பது ஏன்?.. தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி!

RSS March Permission Tamil Nadu: தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதி மறுத்தது ஏன் என சென்னை உயர் நீதிமன்றம் தமிழக அரசுக்குக் கேள்வி எழுப்பியுள்ளது. அமைதியான முறையில் பேரணி நடத்த அனுமதி கோரப்பட்ட நிலையில், அரசின் தடை உத்தரவு குறித்து விரிவான விளக்கம் அளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால் இந்த விவகாரம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதி மறுப்பது ஏன்?.. தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி!
கோப்புப் படம்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 16 Oct 2026 07:57 AM IST

சென்னை, அக்.16: தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ் (RSS) அமைப்பு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும் ஊர்வலம் மற்றும் பேரணிகளுக்கு அனுமதி வழங்குவது தொடர்பாகக் கடந்த சில ஆண்டுகளாகவே பல்வேறு சட்டப் போராட்டங்களும், வாதப்பிரதிவாதங்களும் அரங்கேறி வருகின்றன. சட்டம்-ஒழுங்குப் பிரச்சனை மற்றும் பாதுகாப்பு காரணங்களைக் சுட்டிக்காட்டி காவல் துறை தரப்பில் சில நேரங்களில் பேரணிக்கு அனுமதி மறுக்கப்படுவதும், அதனைத் தொடர்ந்து நீதிமன்றங்களை நாடி அனுமதி பெறுவதும் வழக்கமான நிகழ்வாக மாறிவிட்டது. அந்த வகையில், தற்போது மீண்டும் ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்ட விவகாரம் நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது. இந்த வழக்கில் தமிழக அரசு தரப்பு மற்றும் காவல்துறையின் நிலைப்பாடு குறித்து உயர் நீதிமன்றம் எழுப்பிய கேள்விகள் அரசியல் மற்றும் சட்ட வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

இதையும் படிக்க: பொதுமக்களுக்கு குட் நியூஸ்!.. மலிவு விலையில் மளிகைப் பொருட்கள் விற்பனை.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!!

வாதங்களும் நீதிமன்றத்தின் கேள்வியும்:

ஆர்.எஸ்.எஸ் அமைப்பு சார்பில் தொடரப்பட்ட வழக்கில், தாங்கள் ஜனநாயக முறைப்படி அமைதியான முறையில் மட்டுமே பேரணி நடத்த அனுமதி கோரியதாகவும், ஆனால் ‘தகுந்த காரணமும் இன்றி காவல்துறை தங்களது கோரிக்கையை நிராகரித்துள்ளதாகவும் வாதிடப்பட்டது. மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள், மற்ற அமைப்புகளுக்கும் அரசியல் கட்சிகளுக்கும் பேரணி நடத்த அனுமதி வழங்கப்படும் போது, ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு மட்டும் ஏன் அனுமதி மறுக்கப்படுகிறது என்று கடுமையான கேள்வியை எழுப்பினர். சட்டம்-ஒழுங்குப் பிரச்சனையைத் தீவிரமாகத் தடுப்பது காவல்துறையின் கடமை என்றாலும், முழுமையாகத் தடை விதிப்பது எந்த வகையில் நியாயமாகும் என்பது குறித்துக் காவல்துறை மற்றும் அரசுத் தரப்பு உரிய விளக்கமளிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உச்சநீதிமன்ற தீர்ப்பும் முந்தைய உத்தரவும்:

ஆர்.எஸ்.எஸ் பேரணி மற்றும் ஊர்வலங்கள் தொடர்பாகவும், அது சார்ந்த அனுமதி விவகாரங்கள் குறித்தும் ஏற்கனவே உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றம் வழங்கிய தெளிவான தீர்ப்புகளை மனுதாரர் தரப்பு நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டியது. ஜனநாயக நாட்டில் கருத்துரிமை மற்றும் அமைதியான முறையில் ஊர்வலம் செல்வதற்கான உரிமையை எக்காரணம் கொண்டும் முழுமையாக முடக்க முடியாது என்றும், கடந்த காலங்களில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளைச் சுட்டிக்காட்டியும் வாதிடப்பட்டது. சட்டம்-ஒழுங்குச் சூழலைக் காரணம் காட்டி அனைத்து இடங்களிலும் பேரணிகளுக்குத் தடை விதிக்க முடியாது எனவும், அதற்கு மாற்றாகப் பொருத்தமான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்வதே அரசின் கடமையாகும் எனவும் சட்ட வல்லுநர்கள் மற்றும் நீதிபதிகள் தரப்பில் கருத்துகள் விவாதிக்கப்பட்டன.

மேலும் படிக்க: அதிமுக வளர்ச்சியில் என் பங்கு உண்டு.. ஜெயலலிதா நம்பிக்கையை காக்க ஒன்றிணையும் நேரம்.. சின்னம்மா அழைப்பு!

அடுத்த கட்ட நடவடிக்கைகள்:

மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கைப் பாதுகாப்பதும், அசம்பாவிதங்களைத் தவிர்ப்பதும் அரசின் பிரதான கடமை என்பதால் பாதுகாப்பு அம்சங்களைக் கருத்தில் கொண்டே முந்தைய காலங்களில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், நீதிமன்றத்தின் தற்போதைய நேரடிக் கேள்விக்குப் பிறகு, தமிழக அரசு இந்த விவகாரத்தில் தனது இறுதி நிலைப்பாட்டை எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்ய வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. இந்த வழகின் அடுத்தடுத்த கட்ட விசாரணைகள் மற்றும் நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பு தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதி கிடைக்குமா இல்லையா என்பதைத் தீர்மானிக்கும் என்பதால், இவ்விவகாரம் மீதான எதிர்பார்ப்பு அனைவரிடத்திலும் அதிகரித்துள்ளது.

Follow Us