ஆயுதபூஜை, தீபாவளி பண்டிகை: சிறப்பு ரயில்கள் அறிவிப்பு – எங்க தெரியுமா?
Chennai to Charlapalli Special Train : ஆயுத பூஜை, தீபாவளி (Diwali) என அடுத்தடுத்து வரும் பண்டிகைகளை முன்னிட்டு, ரயில்களில் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையில், சென்னை சென்ட்ரல் – தெலங்கானா மாநிலம் சார்லப்பள்ளி இடையே சிறப்பு ரயில்களைத் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
சென்னை அக்டோபர் 15: ஆயுத பூஜை, தீபாவளி (Diwali) என அடுத்தடுத்து வரும் பண்டிகைகளை முன்னிட்டு, ரயில்களில் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையில், சென்னை சென்ட்ரல் – தெலங்கானா மாநிலம் சார்லப்பள்ளி இடையே சிறப்பு ரயில்களைத் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மேலும், ஏற்கெனவே இயக்கப்பட்டு வரும் சார்லப்பள்ளி – நாகர்கோவில் சிறப்பு ரயில் சேவையும் 2026 நவம்பர் மாதம் வரை நீடிக்கப்பட்டுள்ளது. அதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.
சென்னை – சார்லப்பள்ளி இடையே சிறப்பு ரயில்
ஆயுத பூஜை மற்றும் தீபாவளி என தொடர் விடுமுறையை முன்னிட்டு () அக்டோபர் 16, 2026 நாளை இரவு 9.30 மணிக்கு தெலங்கானா மாநிலம் சார்லப்பள்ளியிலிருந்து புறப்படும் 07059 என்ற எண் கொண்ட சிறப்பு ரயில், மறுநாள் காலை 11.15 மணிக்குச் சென்னை சென்ட்ரல் வந்தடையும்.




இதையும் படிக்க : அதிமுக வளர்ச்சியில் என் பங்கு உண்டு.. ஜெயலலிதா நம்பிக்கையை காக்க ஒன்றிணையும் நேரம்.. சின்னம்மா அழைப்பு!
மறுமார்க்கத்தில், சனிக்கிழமை (அக். 17) பிற்பகல் 1 மணிக்குச் சென்னை சென்ட்ரலிலிருந்து புறப்படும் 07060 என்ற எண் கொண்ட சிறப்பு ரயில், மறுநாள் அதிகாலை 4.30 மணிக்குச் சார்லப்பள்ளி சென்றடையும்.
முன்பதிவு எப்போது?
இந்தச் சிறப்பு ரயில்கள் நல்கொண்டா, மிர்யாலகுடா, குண்டூர், தெனாலி, பாபட்லா, சீராலா, நெல்லூர் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இவ்விரு ரயில்களுக்குமான பயணச்சீட்டு முன்பதிவு அக்டோபர் 16, 2026 நாளை காலை 8 மணிக்குத் தொடங்குகிறது.
நாகர்கோவில் ரயில் சேவை நவம்பர் வரை நீட்டிப்பு
Pooja Special Trains between Charlapalli and Dr MGR Chennai Central: 07059 on 16.10.2026 (Fri) and 07060 on 17.10.2026 (Sat).
Advance booking opens at 08.00 hrs on 16.10.2026.
#SouthernRailway #PoojaSpecial #SpecialTrains #IndianRailways https://t.co/32igHko5sp
— Southern Railway (@GMSRailway) October 15, 2026
தென் மாவட்டப் பயணிகளுக்குப் பயனளிக்கும் வகையில், சார்லப்பள்ளி – நாகர்கோவில் – சார்லப்பள்ளி சிறப்பு ரயில் சேவை 07535 மற்றும் 07536 ஆகிய எண்கள் கொண்ட சிறப்பு ரயில் நவம்பர் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் அக்டோபர் 30, 2026 முதல் நவம்பர் 13, 2026 வரை, ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் சார்லப்பள்ளியிலிருந்து இயக்கப்படும். அதே போல நவம்பர் 1, 2026 முதல் நவம்பர் 15, 2026 வரை, ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் நாகர்கோவிலிலிருந்து இயக்கப்படும். இதன்படி, இரு மார்க்கங்களிலும் தலா மூன்று கூடுதல் சேவைகள் கிடைக்கும். இந்த நீட்டிக்கப்பட்ட சேவைக்கான முன்பதிவு ஏற்கெனவே தொடங்கிவிட்டது.
இதையும் படிக்க : நெல்லையில் கஞ்சா வழக்கில் கைதான நபர்.. கால் முறிவால் மருத்துவமனையில் சிகிச்சை.. திடீரென எடுத்து விபரீத முடிவு!
கோவை அருகே உள்ள போத்தனூரிலிருந்து அசாம் மாநிலம் நியூ டின்சுகியா வரை இயக்கப்படும் சிறப்பு ரயில்கள் (06101/06102), இனி ஒடிசாவின் பாலசோர் ரயில் நிலையத்தில் 2 நிமிடங்களும், மேற்கு வங்கத்தின் அண்டுல் ரயில் நிலையத்தில் 5 நிமிடங்களும் நின்று செல்லும். இந்தப் புதிய நடைமுறை அக்டோபர் 16, 2026 நாளை முதல் அமலுக்கு வருகிறது. தொடர் பண்டிகைகளை முன்னிட்டு, பல்வேறு நகரங்களுக்குத் தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை அறிவித்து வருகிறது.