AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

“எங்க கொண்டு வந்து நிறுத்திருக்க பாத்தியா” குறுகலான பாதையில் சிக்கிய கார்… காரணம்.. “That கூகுள் மேப்”

Kanyakumari Car Stuck Narrow Path : கன்னியாகுமரியில் கேரள மாநிலத்தை சேர்ந்த 4 இளைஞர்கள் வந்த கார் கூகுள் மேப் காட்டிய பாதையில் சென்ற நிலையில், குறுகலான பாதையில் சிக்கிக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .

“எங்க கொண்டு வந்து நிறுத்திருக்க பாத்தியா” குறுகலான பாதையில் சிக்கிய கார்… காரணம்.. “That கூகுள் மேப்”
கூகுள் மேப்பால் இடுக்கில் சிக்கிய கார்.
Gowtham Kannan s
Gowtham Kannan S | Updated On: 15 Oct 2026 16:23 PM IST

கன்னியாகுமரியில் கூகுள் மேப் காட்டிய வழியில் சென்ற ஒரு சொகுசு கார் குறுகலான வழியில் சிக்கிக் கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கேரள மாநிலத்தில் இருந்து கன்னியாகுமரி மாவட்டம், குலசேகரன் பட்டினத்துக்கு கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த காரில் நான்கு இளைஞர்கள் பயணம் செய்து கொண்டிருந்தனர். அவர்களுக்கு குலசேகரன்பட்டினம் செல்லும் வழி தெரியாத காரணத்தால் கூகுள் மேப் காட்டிய பாதையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, அருமனை அருகே உள்ள செம்மங்களை பகுதியில் இருசக்கர வாகனங்கள் மட்டுமே செல்லக்கூடிய குறுகலான வழியில் கார் செல்லலாம் என்று கூகுள் மேப்பில் காண்பித்துள்ளது. அதனை ஏற்ற காரின் ஓட்டுநர் கண் மூடித்தனமாக அந்த குறுகலான பாதையில் காரை இயக்கினார்.

கூகுள் மேப் காட்டிய பாதையில் சென்ற கார்

கார் சிறிது தூரம் எந்தவித இடையூறும் இன்றி சென்ற நிலையில் ஒரு கட்டத்துக்கு மேல், கார் செல்ல முடியாமல் இரு புறம் உள்ள சுவரில் உரசியவாறு நின்றது. இதன் காரணமாக, கார் முன்னும், பின்னும் செல்ல முடியாமல் திக்கி திணறியது. இதனால், அதிர்ச்சி அடைந்த காரின் உள்ளே இருந்த 4 இளைஞர்கள் காரின் கதவை திறக்க முடியாமலும், மற்றவர்களின் உதவியை கேட்க முடியாமலும் காரின் உள்ளே சிக்கிக் கொண்டனர். இதனால், அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

மேலும் படிக்க: ரயில்களில் ஹெட்போன் இல்லாமல் பாடல் கேட்டால் அவ்வளவுதான்.. 6 மாதம் கம்பி எண்ணனும்.. ரயில்வே அதிரடி அறிவிப்பு!

காரை பின்னோக்கி தள்ளி மீட்ட பொது மக்கள்

தொடர்ந்து, அந்த வழியாக சென்ற பொதுமக்கள் அந்த பகுதியில் இருந்தவர்களின் உதவியுடன் காரை பின்னோக்கி தள்ளும் முயற்சியில் ஈடுபட்டனர். தொடர்ந்து, இது தொடர்பாக அருகில் உள்ள காவல் நிலையம் மற்றும் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன் அடிப்படையில், தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்கள் உதவியுடன் காரை பின்னோக்கி தள்ளி வெளியே கொண்டு வந்தனர். இதில், காரின் இரு புறங்களிலும் கடுமையான சேதம் ஏற்பட்டது. அத்துடன், காரின் இருபுற கண்ணாடிகளும் உடைந்தன.

மதுபோதையில் காரை இயக்கிய இளைஞர்கள்

குறுகலான பாதையில் இருந்து கார் வெளியேறிய நிலையில், போலீசார் தங்களை கைது செய்து விடுவார்கள் என்ற பயத்தில் அந்த இளைஞர்கள் காரை வேகமாக எடுத்துக்கொண்டு சென்று விட்டனர். இது தொடர்பாக, போலீசார் அந்த பகுதியி விசாரணை மேற்கொண்டனர். இதில், அந்த இளைஞர்கள் மது போதையில் காரை இயக்கியதாக தெரியவந்தது. இந்த சம்பவம் அருமனை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

மேலும் படிக்க: காலையில் திருமணம்.. மாலையில் பிரிவு.. மதுபோதை மாப்பிள்ளையால் களேபரமான கல்யாண வீடு.. உறவினர்கள் சோகம்!

Follow Us