ஆளுநரை சந்தித்து வாழ்த்து தெரிவித்த முதல்வர் விஜய் – அமைச்சரவையில் மாற்றமா?
Vijay Meets Tamil Nadu Governor : தமிழ்நாட்டின் முழுநேர ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகரை, முதல்வர் விஜய் அக்டோபர் 15, 2026 இன்று மாலை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின்போது, தமிழக அமைச்சரவையில் மாற்றங்கள் செய்வது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.
சென்னை, அக்டோபர் 14: தமிழ்நாட்டின் ஆளுநராக பதவி வகித்து வந்த ஆர்.என். ரவி, கடந்த 2026 மார்ச் மாதம் மேற்கு வங்க ஆளுநராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து, கேரள ஆளுநராக இருந்த ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், தமிழ்நாட்டின் பொறுப்பு ஆளுநராக நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் கடந்த சட்டமன்ற தேர்தலில் தவெக வெற்றி பெற்ற நிலையில் முதல்வராக விஜய்க்கு (CM Joseph Vijay) ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
ஆளுநருடன் முதல்வர் விஜய் சந்திப்பு
இந்த நிலையில் தமிழ்நாடு, கேரளம் உள்ளிட்ட 6 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உத்தரவிட்டுள்ளார். தற்போது கேரள ஆளுநராகவும் தமிழ்நாட்டின் பொறுப்பு ஆளுநராகவும் செயல்பட்ட ராஜேந்திர விஷ்வநாத் அர்லேகர் முழு நேர ஆளுநராக நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் தமிழ்நாட்டின் முழுநேர ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகரை, முதல்வர் விஜய் அக்டோபர் 15, 2026 இன்று மாலை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின்போது, தமிழக அமைச்சரவையில் மாற்றங்கள் செய்வது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.




இதையும் படிக்க : Tamil Nadu Weather Alert: கனமழை முதல் மிக கனமழை வரை… அடுத்த 5 நாட்களுக்கு கனமழை வெளுத்து வாங்கப்போது – எங்கெல்லாம் தெரியுமா?
இந்த சந்திப்பின் போது, தமிழ்நாட்டின் முழுநேர ஆளுநராகப் பொறுப்பேற்றுள்ள அவருக்கு முதலமைச்சர் விஜய் வாழ்த்து தெரிவிக்கவுள்ளார். மேலும், தமிழக அமைச்சரவையில் மாற்றங்கள் செய்யப்படலாம் என்றும், சில அமைச்சர்களின் துறைகள் மாற்றியமைக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
ஆளுநருடன் முதல்வர் விஜய்
VIDEO | Chennai: Tamil Nadu CM Joseph Vijay (@actorvijay) meets Governor Rajendra Vishwanath Arlekar.
(Source: Lok Bhavan)
#TamilNadu https://t.co/suRKTkWi9J
— Press Trust of India (@PTI_News) October 15, 2026
அமைச்சரவையில் மாற்றமா?
குறிப்பாக மனித வளத்துறை அமைச்சர் சரத், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி, போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் உள்ளிட்ட சில அமைச்சர்கள் மாற்றம் செய்யப்படலாம் என கடந்த சில நாட்களாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. மேலும் சமீபத்தில் தாராபுரம் மற்றும் மதுராந்தகம் இடைத்தேர்தலில் தவெக சார்பில் போட்டியிட்டு வென்ற மரகதம் குமரவேல் மற்றும் சத்தியபாமா ஆகியோருக்கு அமைச்சரவையில் இடம் வழங்கப்படலாம் கூறப்படுகிறது.
இதையும் படிக்க : மன்றம் டூ இயக்கம்.. புது கொடி.. தனி ட்ராக்கை கையில் எடுக்கும் தனுஷ்!
அந்த வகையில் வனத்துறை அமைச்சர் ரஞ்சித் குமார், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ராஜீவ் உள்ளிட்டோரின் அமைச்சர் பதவிகளும் மாற்றம் செய்யப்படலாம் என்றும், புதியவர்களுக்கு அமைச்சரவையில் வாய்ப்பு வழங்குவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது முதல்வர் விஜய்யின் நேரடிப் பொறுப்பில் உள்ள நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை தற்போது மரகதம் குமரவேல் மற்றும் சத்தியபாமா ஆகியோருக்கு வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.
தாராபுரம் மற்றும் மதுராந்தகம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்கள் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், அமைச்சரவை மாற்றம் தொடர்பான முடிவுகள் வெளியாகலாம் என்றும் தகவல் வெளியாகி இருந்தது. இந்த சூழலில், ஆளுநர்அர்லேகருடன் முதலமைச்சர் விஜய் மேற்கொள்ளும் சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.