தமிழ்நாட்டின் ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் நியமனம் – 6 மாநிலங்களுக்கு ஆளுநர்கள் அறிவிப்பு
President Murmu Appoints Governors in Six States : கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட 6 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உத்தரவிட்டுள்ளார். தற்போது கேரள ஆளுநராக உள்ள ராஜேந்திர விஷ்வநாத் அர்லேகர், தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட 6 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உத்தரவிட்டுள்ளார். தற்போது கேரள ஆளுநராகவும் தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராகவும் உள்ள ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். சிக்கிம் ஆளுநராக உள்ள ஓம் பிரகாஷ் மாத்தூர், கேரள ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், ஒடிசா ஆளுநராக பிரஜ் மோகன் ராம், கர்நாடக ஆளுநராக டாக்டர் சுதா யாதவ், உத்தரகாண்ட் ஆளுநராக டாக்டர் தால் சிங் பிசென், சிக்கிம் ஆளுநராக துஷ்யந்த் கவுதம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டின் ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் நியமனம்
நாட்டின் 6 மாநிலங்களின் ஆளுநர் பொறுப்புகளில் முக்கிய மாற்றங்களைச் செய்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உத்தரவிட்டுள்ளார். இதில் 4 மாநிலங்களுக்குப் புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இரண்டு ஆளுநர்கள் வேறு மாநிலங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். தமிழ்நாடு, கேரளம், கர்நாடகம், ஒடிசா, உத்தராகண்ட், சிக்கிம் ஆகிய மாநிலங்களின் ஆளுநர்கள் மாற்றப்பட்டுள்ளனர்.
இதையும் படிக்க : தனியாரிடம் ஒரு யூனிட் மின்சாரம் ரூ.35க்கு கொள்முதல் – மின்வெட்டை சமாளிக்க அரசு நடவடிக்கை




கேரள ஆளுநராகப் பணியாற்றி வரும் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர், தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் ஏற்கெனவே தமிழக ஆளுநர் பொறுப்பைக் கூடுதலாகக் கவனித்து வந்தார். கடந்த 2026 மார்ச் 12 அன்று சென்னையில் அவர் ஆளுநராக கூடுதல் பொறுப்பேற்றார். முதல்வர் விஜய் முதல்வராக பதவியேற்ற போது ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பதவி பிரமாணம் செய்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போதைய உத்தரவின் மூலம், கேரளப் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு அவர் தமிழகத்தின் முழுநேர ஆளுநராகச் செயல்படவுள்ளார்.
முன்னாள் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றப்பட்டதைத் தொடர்ந்து, தமிழக ஆளுநரின் பணிகளைக் கூடுதலாகக் கவனிக்கும் பொறுப்பு ஆர்லேகருக்கு அளிக்கப்பட்டது. அப்போது சென்னை லோக் பவனில் நடைபெற்ற எளிய விழாவில், சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி அவருக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
இதையும் படிக்க : டாஸ்மாக் பாரில் ரூ.500 கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட முயன்ற 5 வாலிபர்கள் கைது! – ரூ.1.86 லட்சம் போலி நோட்டுகள் பறிமுதல்!
யார் இந்த ஆர்லேகர்?
கடந்த 1954 ஏப்ரல் 23 அன்று கோவா தலைநகர் பனாஜியில் பிறந்தவர் ஆர்லேகர். கோவா மாநில அரசியலில் சட்டப்பேரவை உறுப்பினர், அமைச்சர், சட்டப்பேரவைத் தலைவர் எனப் பல பொறுப்புகளை வகித்துள்ளார். மேலும் கடந் 2021 ஆம் ஆண்டு ஹிமாசலப் பிரதேச ஆளுநராக நியமிக்கப்பட்டதன் மூலம் அவரது ஆளுநர் பணி தொடங்கியது. அதன் பின் பீகார் ஆளுநராகவும், பின்னர் கேரள ஆளுநராகவும் அவர் பணியாற்றினார். தற்போது அவர் ஆளுநராகப் பணியாற்றும் நான்காவது மாநிலம் தமிழ்நாடு என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகருக்குப் பதிலாக, சிக்கிம் ஆளுநராகப் பணியாற்றி வந்த ஓம் பிரகாஷ் மாத்தூர் கேரள ஆளுநராக மாற்றப்பட்டுள்ளார். இந்த நிலையில் சிக்கிம் ஆளுநர் பொறுப்புக்கு துஷ்யந்த் கௌதம் நியமிக்கப்பட்டுள்ளார்.