AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Tamil Nadu Weather forecast: நாளை 9 மாவட்டங்களில் மழை பெய்யும்  – வானிலை மையம் எச்சரிக்கை

Tamil Nadu weather today : வருகிற 2026 அக்டோபர் 15 முதல் 18 வரை தொடர்ந்து 4 நாட்கள் பல மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவி்துள்ளது. மேலும் அக்டோபர் 13, 2026 நாளை 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamil Nadu Weather forecast: நாளை 9 மாவட்டங்களில் மழை பெய்யும்  – வானிலை மையம் எச்சரிக்கை
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 12 Oct 2026 15:10 PM IST

சென்னை, அக்டோபர் 12 : தமிழகத்தில் வரும் நாட்களில் மழையின் தீவிரம் படிப்படியாக அதிகரிக்கும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்த வகையில் வருகிற 2026 அக்டோபர் 15 முதல் 18 வரை தொடர்ந்து 4 நாட்கள் பல மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவி்துள்ளது. மேலும் அக்டோபர் 13, 2026 நாளை 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை 9 மாவட்டங்களில் மழை பெய்யும்

இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பில் அக்டோபர் 12, 2026 இன்று நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 14 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல், பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தமிழகத்தின் பிற பகுதிகள், புதுச்சேரி, காரைக்காலில் இடி மின்னலுடன் லேசான மழை பெய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : சென்னையில் “சோழ தேசம் 2026” கண்காட்சி.. ஆயிரம் ஆண்டு கால சோழர் வரலாறு.. பிரம்மிக்க வைக்கும் பல்வேறு அம்சங்கள்.. முழு விவரம்!

அதனைத் தொடர்ந்து அக்டோபர் 13, 2026 தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 9 மாவட்டங்களிலும் காரைக்காலிலும் ஓரிரு இடங்களில் இடி, மின்னல், பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் பிற பகுதிகளிலும் புதுச்சேரியிலும் லேசான மழை பெய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து அக்டோபர் 14, 2026 புதன்கிழமை சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு, சேலம், கரூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, திண்டுக்கல், மதுரை, தேனி, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம்.

அக்டோபர் 15, 2026 வியாழக்கிழமை கோவை மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகள், நீலகிரி, ஈரோடு, சேலம், தேனி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் தமிழகத்தின் பிற பகுதிகளில் அநேக இடங்களிலும், புதுச்சேரி, காரைக்காலிலும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மேலும் அக்டோபர் 16, 2026 அன்று நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம், தருமபுரி, நாமக்கல், கரூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை ஆகிய 21 மாவட்டங்களிலும் காரைக்காலிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். பிற பகுதிகளில் அநேக இடங்களிலும் புதுச்சேரியிலும் மிதமான மழை பெய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : சேலத்தில் துணிகரம்.. காவலாளியை கட்டிப்போட்டு ரூ. 14 கோடி வெள்ளி பொருள்கள் கொள்ளை.. வடமாநில கும்பல் கைவரிசையா?

அதனைத் தொடர்ந்து அக்டோபர் 17, 2026 நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களிலும், புதுச்சேரி, காரைக்காலிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். பிற பகுதிகளில் அநேக இடங்களில் மிதமான மழை பெய்யலாம்.

அக்டோபர் 18, 2026 அன்று நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம், கரூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களிலும் காரைக்காலிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். பிற பகுதிகளில் அநேக இடங்களிலும் புதுச்சேரியிலும் மிதமான மழை பெய்யலாம்.

Follow Us