AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Tamil Nadu Weather Forecast: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை இருக்கு.. வெயிலும் இருக்கா?.. வானிலை மையம் சொல்வது என்ன?

Tamil Nadu weather today: தமிழகத்தில் இன்ற 11 மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதோடு, அடுத்த 6 நாட்களுக்கு தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யக்கூடும் என்றும், ஒரு சில மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

Tamil Nadu Weather Forecast: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை இருக்கு.. வெயிலும் இருக்கா?.. வானிலை மையம் சொல்வது என்ன?
கோப்புப் படம்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 12 Oct 2026 06:20 AM IST

சென்னை, அக்.12: தமிழகத்தில் இன்று நீலகிரி, கோவை, மதுரை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திகுறிப்பில், மன்னார் வளைகுடா மற்றும் அதையொட்டிய தென் தமிழகக் கடலோரப் பகுதிகளின் மேல் சுமார் 0.9 கி.மீ. உயரத்தில் வளிமண்டல சுழற்சி ஒன்று நிலவுகிறது. இதேபோல், லட்சத்தீவு மற்றும் அதையொட்டிய பகுதிகளின் மேலும் அதே உயரத்தில் மற்றொரு சுழற்சி காணப்படுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் 6 நாட்களுக்கு பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது.

இதையும் படிக்க : தமிழக இளைஞர்களுக்கு அதிக வேலைவாய்ப்பு – திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர் மோடி பேச்சு

இன்று மழைக்கு வாய்ப்பு:

அந்தவகையில், இன்று (அக்.12) நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, மதுரை, சிவகங்கை, சேலம், திருப்பூர் ஆகிய 11 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும்.

வரும் நாட்களில் மழை வாய்ப்பு:

தொடர்ந்து, நாளை (அக்.13) தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை மறுநாள் (அக்.14) திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, தேனி, கன்னியாகுமரி, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், திண்டுக்கல், மதுரை ஆகிய 10 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை மழை பெய்யக்கூடும். வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும்.

அதனைத்தொடர்ந்து, அக்.15-ம் தேதி கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி, தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கரூர், சேலம், நாமக்கல், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 23 மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அக்16-ம் தேதி அரியலூர், பெரம்பலூர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யக்கூடும். அக்.17-ம் தேதி கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகள் மற்றும் நீலகிரி, தேனி, மதுரை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

அதிகபட்ச வெப்பநிலை மாற்றம்:

வரும் அக்.15ம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றதிற்கான வாய்ப்பு குறைவு, எனினும் சற்று உயரக்கூடும். வடக்கு உள் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2-3 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாகவும், ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இயல்பை ஒட்டியும் இருக்கக்கூடும்.

இதையும் படிக்க : வடபழனி – பூந்தமல்லி மெட்ரோ பயணம் – யுபிஐ மூலம் டிக்கெட் எடுத்த பிரதமர் மோடி

சென்னை வானிலை நிலவரம்:

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை, இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow Us