Tamil Nadu Weather report: நாளை இந்த 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் எச்சரிக்கை
Tamil Nadu weather today : தமிழகத்தில் அக்டோபர் 11, 2026 இன்று மேற்கு மற்றும் தென் மாவட்டங்களைச் சேர்ந்த 14 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை, அக்டோபர் 11 : தமிழகத்தில் அக்டோபர் 11, 2026 இன்று மேற்கு மற்றும் தென் மாவட்டங்களைச் சேர்ந்த 14 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் வருகிற அக்டோபர் 16, 17, 2026 ஆகிய தேதிகளில் சில மாவட்டங்களில் மீண்டும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
நாளை இந்த 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
இதுதொடர்பாக சென்னை வானிலை மயம் வெளியிட்ட அறிக்கையில், மன்னார் வளைகுடா மற்றும் அதையொட்டிய தென் தமிழகக் கடலோரப் பகுதிகளின் மேல் சுமார் 0.9 கி.மீ. உயரத்தில் வளிமண்டல சுழற்சி ஒன்று நிலவுகிறது. இதேபோல், லட்சத்தீவு மற்றும் அதையொட்டிய பகுதிகளின் மேலும் அதே உயரத்தில் மற்றொரு சுழற்சி காணப்படுகிறது. இவற்றின் தாக்கத்தால் தமிழகத்தில் வருகிற அக்டோபர் 17, 2026 வரை பரவலாக மழைக்கு வாய்ப்புள்ளது.
இதையும் படிக்க : “திமுக – அதிமுக ரகசிய கூட்டு!”.. விளாசிய அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் திடுக் குற்றச்சாட்டு!!




இதன் ஒரு பகுதியாக அக்டோபர் 11, 2026 இன்று நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தமிழகத்தின் பிற பகுதிகள், புதுச்சேரி, காரைக்காலில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து அக்டோபர் 12, 2026 நாளை நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம், மதுரை, சிவகங்கை, தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 11 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல், பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தமிழகத்தின் பிற பகுதிகளில் லேசான மழை பெய்யலாம என்றஉம் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அக்டோபர் 13, 2026 செவ்வாய்கிழமை தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 3 மாவட்டங்களில் மட்டும் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மாநிலத்தின் பிற பகுதிகள், புதுச்சேரி, காரைக்காலில் லேசான மழை பெய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 14, 2026 புதன்கிழமை, ராமநாதபுரம், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, விருதுநகர் ஆகிய 10 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வட தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் லேசான மழை பெய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : பூந்தமல்லி – வடபழனி மெட்ரோ ரயில் சேவை தொடக்கம்.. பிரதமர் மோடி முதல்வர் விஜய் ஒன்றாக பயணம்!..
அதனைத் தொடர்ந்து அக்டோபர் 15, 2026 நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம், நாமக்கல், கரூர், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 23 மாவட்டங்களில் பரவலாக மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் 16, 2026 அன்று திருச்சி, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும், அக்டோபர் 17, 2026 அன்று கோவை மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. பிற பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் அறிவிக்கப்பட்டுள்ளது.