பூந்தமல்லி – வடபழனி மெட்ரோ ரயில் சேவை தொடக்கம்.. பிரதமர் மோடி முதல்வர் விஜய் ஒன்றாக பயணம்!..
PM Modi - CM Vijay Metro Ride: சென்னையில் பூந்தமல்லி - வடபழனி இடையேயான இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முதலமைச்சர் விஜய் ஆகியோர் இணைந்து தொடங்கி வைத்தனர். விமான நிலையம் முதல் போரூர் வரை பிரதமருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்ட நிலையில், இருவரும் ஒன்றாக மெட்ரோ ரயிலில் பயணித்து மாணவர்களுடனும் பொதுமக்களுடனும் கலந்துரையாடினர்.
சென்னை, அக்.11: சென்னைப் பெருநகர மக்களின் நீண்ட நாள் கனவான இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தின் முதல் பகுதி தற்போது அதிகாரப்பூர்வமாக மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. நகரத்தின் போக்குவரத்து நெரிசலைக் கணிசமாகக் குறைத்து, பொதுமக்களின் பயண நேரத்தை வெகுவாகக் குறைக்கும் நோக்கில் பூந்தமல்லி பைபாஸ் முதல் வடபழனி வரை 14.6 கிலோமீட்டர் தொலைவிற்கு இந்த வழித்தடம் அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு முதன்முறையாக சென்னைக்கு வருகை தந்துள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதலமைச்சர் விஜய் முன்னிலையில் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க மெட்ரோ ரயில் சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தார். தொடக்க விழாவைத் தொடர்ந்து, இரு பெரும் தலைவர்களும் ஒரே மெட்ரோ ரயிலில் அமர்ந்து இணைந்து பயணம் செய்த நிகழ்வு, தமிழக அரசியல் மற்றும் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பையும் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
பிரதமருக்கு அளிக்கப்பட்ட பிரம்மாண்ட வரவேற்பு:
BREAKING:
PM Modi and Tamil Nadu CM Vijay travel together on the newly inaugurated Chennai Metro Phase 2 train. https://t.co/hRie6h54zR
— Actor Vijay Team (@ActorVijayTeam) October 11, 2026
டெல்லியிலிருந்து சிறப்பு விமானம் மூலம் இன்று காலை 11 மணியளவில் சென்னை வந்தடைந்த பிரதமர் நரேந்திர மோடியைத் தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் அமைச்சர்கள் விமான நிலையத்திற்கு நேரில் சென்று பொன்னாடை அணிவித்து முறைப்படி வரவேற்றனர். அதனைத் தொடர்ந்து, விமான நிலையத்திலிருந்து போரூர் நோக்கிச் சாலை மார்க்கமாகப் பிரதமர் கார் மூலம் புறப்பட்டார். பிரதமரின் வாகனத் தொடரணியைப் பின்தொடர்ந்து முதலமைச்சர் விஜய்யின் வாகனமும் சென்றது. விமான நிலையம் முதல் போரூர் வரையிலான வழிநெடுகிலும் திரண்டிருந்த பாஜக தொண்டர்களும் பொதுமக்களும் பிரதமருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். மக்களின் இந்த அன்பான வரவேற்பை ஏற்கும் வகையில், பிரதமர் மோடி தனது காரின் கதவைத் திறந்து வெளியே தொங்கியபடியே கையசைத்துச் சென்று மக்களின் வரவேற்பை ஏற்றுக்கொண்டார்.
ஒன்றாக மெட்ரோ ரயிலில் பயணம்:
🔸 પ્રધાનમંત્રી @narendramodi ચેન્નઈ મેટ્રો ફેઝ IIની સમીક્ષા કરી રહ્યા છે અને પોરુર બાયપાસથી પૂનામલ્લી બાયપાસ સ્ટેશન અને પરત સુધીની મુસાફરી કરશે
@PMOIndia #PMModi #ChennaiMetro #ChennaiMetroPhaseII #TamilNadu #Chennai #PorurBypass #PoonamalleeBypass https://t.co/ZRzaaBRTml
— DD News Gujarati (@DDNewsGujarati) October 11, 2026
போரூர் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு வந்து சேர்ந்த பிரதமர் நரேந்திர மோடி, பூந்தமல்லி – வடபழனி இடையேயான புதிய மெட்ரோ ரயில் சேவையை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்தார். அதன் பின்னர், பிரதமர் மோடியும் முதலமைச்சர் விஜய்யும் இணைந்து போரூர் வரையிலான ரயிலில் பயணம் மேற்கொண்டனர். இந்தச் சிறப்புப் பயணத்தின் போது ரயிலில் பயணித்த பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்களுடன் இரு தலைவர்களும் மிகவும் உற்சாகமாகக் கலந்துரையாடினர். இரண்டாம் கட்ட மெட்ரோ திட்டத்தின் முதற்கட்டமாக தற்போது 11 ரயில் நிலையங்கள் மக்கள் பயன்பாட்டிற்கு இயக்கத் தொடங்கப்பட்டுள்ளன. பயணிகளின் தடையற்ற சேவைக்காகவும் வசதிக்காகவும் அனைத்து நவீன பாதுகாப்பு மற்றும் அடிப்படை ஏற்பாடுகளும் மெட்ரோ நிர்வாகத்தால் சிறப்பாகச் செய்யப்பட்டுள்ளன.