AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

குழந்தைகள் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு ‘கேக்’!.. தமிழக அரசின் அட்டகாசமான ஸ்வீட் அறிவிப்பு!!

Cake Distribution for School Students: குழந்தைகள் தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி மாணவர்களுக்கு கேக் வழங்க தமிழ்நாடு அரசு அதிரடி முடிவு செய்துள்ளது. ரூ.9.27 கோடி செலவில் சுமார் 61.84 லட்சம் மாணவர்களுக்கு ஸ்பாஞ்ச் கேக் வழங்கப்பட உள்ள திட்டத்தின் முழு விவரங்கள்.

குழந்தைகள் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு ‘கேக்’!.. தமிழக அரசின் அட்டகாசமான ஸ்வீட் அறிவிப்பு!!
மாதிரிப் படம்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 11 Oct 2026 10:14 AM IST

சென்னை, அக்.11: இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாள் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 14 ஆம் தேதி ‘குழந்தைகள் தினமாக’ நாடு முழுவதும் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. குழந்தைகளிடம் அன்பைப் பொழிவதுடன், அவர்களின் கல்வி, சுகாதாரம் மற்றும் ஒட்டுமொத்த நலனை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு சிறப்பான முன்னெடுப்புகள் அரசுகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் சார்பில் மேற்கொள்ளப்படுவது வழக்கம். அந்த வகையில், நடப்பாண்டு குழந்தைகள் தினத்தைக் கொண்டாடும் விதமாக தமிழகத்தில் உள்ள பள்ளி மாணவ-மாணவிகளுக்குத் தித்திப்பான இன்ப அதிர்ச்சி அளிக்கும் வகையில் தமிழக அரசு ஒரு சிறப்பான திட்டத்தை அறிவித்துள்ளது. பள்ளி மாணவர்களின் முகங்களில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் இந்த அரசின் புதிய முடிவு தற்போது கல்வி வட்டாரத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இதையும் படிக்க: “AI மூலம் பொய் விளம்பரம்.. விஜய்யால் எக்காலத்திலும் எம்ஜிஆர் ஆக முடியாது”.. அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஆவேசம்!!

ரூ.9.27 கோடியில் பிரம்மாண்ட திட்டம்:

குழந்தைகள் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு அரசு முன்னெடுத்துள்ள இந்த சிறப்புத் திட்டத்தின் மூலம், தமிழகம் முழுவதும் உள்ள லட்சக்கணக்கான பள்ளி மாணவர்களுக்குச் சுவையான ஸ்பாஞ்ச் கேக் வழங்கப்படவுள்ளது. இத்திட்டத்திற்காகச் சுமார் ரூ.9.27 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் தோராயமாக 61,84,566 மாணவர்களுக்கு இந்த கேக் துண்டுகள் நேரடியாகச் சென்று சேரும் வகையில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அரசுப் பள்ளி மாணவர்களை ஊக்குவிக்கும் வகையிலும், குழந்தைகள் தின கொண்டாட்டத்தை அவர்களுக்கு மறக்க முடியாததாக மாற்றும் வகையிலும் இந்த நிதிப் பங்கீடு செய்யப்பட்டுள்ளது.

எடை, சுகாதாரப் பாதுகாப்பு விதிமுறைகள்:

வழங்கப்படவுள்ள கேக்குகளின் தரம் மற்றும் எடையில் எந்தவித சமரசமும் செய்யப்படக் கூடாது என்பதில் அரசு மிகத் தெளிவாகவுள்ளது. அதன்படி, ஒவ்வொரு மாணவருக்கும் வழங்கப்படக்கூடிய ஒரு கேக் துண்டின் எடை சரியாக 45 கிராம் என்ற அளவில் இருக்குமாறு நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. மேலும், குழந்தைகள் உட்கொள்ளும் உணவு என்பதால் அது ஆரோக்கியமானதாகவும், பாதுகாப்பானதாகவும் இருக்க வேண்டும் என்ற நோக்கில் கடுமையான காலாவதி தேதி விதிமுறைகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளன. கிடங்குகளில் இருந்து கேக்குகள் பெறப்படும் போது, அறிவிக்கப்பட்ட மொத்த காலாவதி காலத்தில் குறைந்தது 30 நாட்கள் மீதமிருக்கும் வகையிலான தரமான கேக்குகள் மட்டுமே கொள்முதல் செய்யப்பட வேண்டும் என்று திட்டத்தில் திட்டவட்டமாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: பிரதமர் மோடியின் சென்னை விசிட்… எடப்பாடி பழனிசாமி திடீர் மீட்.. பின்னணி என்ன..!

சிறப்பு முன்னெடுப்புக்கு பாராட்டு:

மாணவர்களின் நலனை முதன்மையாகக் கொண்டு தமிழ்நாடு அரசு எடுத்துள்ள இந்த குழந்தைகள் தின சிறப்பு முன்னெடுப்பு, பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்கள் மத்தியில் பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது. அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களும் மற்ற தனியார் பள்ளி மாணவர்களுக்கு நிகராக அனைத்து மகிழ்ச்சிகரமான தருங்களையும் அனுபவிக்க வேண்டும் என்ற அரசின் இந்த சீரிய சிந்தனை, மாணவர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், வரவிருக்கும் குழந்தைகள் தின விழாவை மேலும் சிறப்பானதாய் மாற்றுவதிலும் முக்கிய பங்கு வகிக்கும்.

Follow Us