பிரதமர் மோடியின் சென்னை விசிட்… எடப்பாடி பழனிசாமி திடீர் மீட்.. பின்னணி என்ன..!
PM Modi Edappadi Palaniswami Meet : சென்னைக்கு நாளை வருகை தரும் பிரதமர் நரேந்திர மோடியை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி நேரில் சந்தித்து ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். இந்த சந்திப்பானது முக்கியத்துவம் பெற்று உள்ளது .
சென்னையில் நாளை ஞாயிற்றுக்கிழமை ( அக்டோபர் 11- ஆம் தேதி) நடைபெறும் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காகவும், நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காகவும் பிரதமர் நரேந்திர மோடி வருகை தர உள்ளார். இந்த வருகையின் போது, தமிழக முதல் அமைச்சர் ஜோசப் விஜய்யுடன் மெட்ரோவில் பயணம் செய்ய உள்ளார். இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடியை, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்திக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த சந்திப்பானது அரசியல் ரீதியாக முக்கியத்துவம் பெற்றுள்ளது. தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற பொது தேர்தலை தொடர்ந்து அதிமுகவில் பல்வேறு கட்ட பிளவுகள் ஏற்பட்டது. 25 எம்எல்ஏக்கள் தமிழக வெற்றிக் கழக அரசுக்கு ஆதரவாக நம்பிக்கை வாக்கெடுப்பில் வாக்களித்து இருந்தனர். இதைத் தொடர்ந்து, 6 அதிமுக எம்எல்ஏக்கள் அந்த கட்சியில் இருந்து விலகி தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தனர்.
பிரதமர் மோடி- எடப்பாடி பழனிசாமி சந்திப்பு
இதனால், தற்போது வரை அதிமுகவில் குழப்பமான சூழல் நிலவி வருகிறது. தற்போது நடந்து முடிந்த மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தலிலும் அதிமுக பெரும் பின்னடைவை சந்தித்து 3- ஆம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. அதிமுகவின் கோட்டையாக விளங்கி வந்த இந்த இரு தொகுதிகளில் இவ்வளவு பெரிய பின்னடைவு ஏற்பட்டிருப்பது அதிமுகவினர் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதனிடையே, கூட்டணியில் இருந்து வரும் பாட்டாளி மக்கள் கட்சி இடைத்தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு தெரிவிக்காமல் நடுநிலை வகித்தது.
மேலும் படிக்க: முதல்வர் விஜய்யுடன் ராகுல் காந்தி திடீர் சந்திப்பு.. கூட்டணி தலைவர்கள் பங்கேற்கவில்லை.. பின்னணி என்ன!




அரசியல் பரபரப்புக்கு மத்தியில் நடக்கும் சந்திப்பு
அத்துடன், சட்டமன்ற பொதுத் தேர்தலில் எதிர்க் கட்சி அந்தஸ்தை இழந்து 3- ஆம் இடத்துக்கு தள்ளப்பட்டிருந்தது. இந்த சூழ்நிலையில், தமிழகம் வரும் பிரதமர் நரேந்திர மோடியே அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே . பழனிசாமி சந்திக்க இருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. அத்துடன், பல்வேறு எதிர்பார்ப்புகளையும் கிளப்பி உள்ளது. இந்த சந்திப்புக்கு பின்னால் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் நிகழ இருப்பதாக தெரிகிறது.
அதிமுக- பாஜக கூட்டணியின் அடுத்தக்கட்ட நகர்வு
கூட்டணியின் அடுத்த கட்ட நகர்வும் முன்னெடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில், குறிப்பாக அதிமுக- பாஜக கூட்டணி உறவு மற்றும் எதிர்கால தேர்தல் வியூகங்கள், கூட்டணி கட்சிகளின் நிலைப்பாடு உள்ளிட்டவை தொடர்பான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக பிரதமர் மோடி, எடப்பாடி சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.
மேலும் படிக்க: இடைத்தேர்தல் முடிவுகள்.. மு.க.ஸ்டாலின் இப்படியே இருங்க விளங்கிடும்.. மாணிக்கம் தாகூர் அதிரடி அட்டாக்..