AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

இன்று சென்னை வருகிறார் பிரதமர் மோடி.. முதல்வர் விஜய்யுடன் ஒன்றாக மெட்ரோ ரயிலில் பயணம்.. முழு பிளான் இதுதான்!!

PM Modi Chennai Visit Today: பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை சென்னை வருகிறார். பூந்தமல்லி - வடபழனி இடையேயான இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் சேவையை முதலமைச்சர் விஜய்யுடன் இணைந்து தொடங்கி வைக்கும் அவர், ஐஐடி வளாகத்தில் இளையராஜா இசைப் பயிற்சி மையம் உள்ளிட்ட பல்வேறு புதிய திட்டங்களைத் தொடக்கி வைக்கவுள்ளார்.

இன்று சென்னை வருகிறார் பிரதமர் மோடி.. முதல்வர் விஜய்யுடன் ஒன்றாக மெட்ரோ ரயிலில் பயணம்.. முழு பிளான் இதுதான்!!
பிரதமர் மோடி, முதல்வர் விஜய்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 11 Oct 2026 06:39 AM IST

சென்னை, அக்.11: சென்னை பெருநகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கும், பொதுமக்களின் பயண நேரத்தைக் கணிசமாகக் குறைப்பதற்கும் வழிவகை செய்யும் வகையில் கட்டப்பட்டுள்ள இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தின் முதல் பகுதி இன்று அதிகாரப்பூர்வமாக பயன்பாட்டிற்கு வரவுள்ளது. பூந்தமல்லி பைபாஸ் முதல் வடபழனி வரையிலான 14.6 கி.மீ நீளமுள்ள இந்த வழித்தடத்தை மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணிப்பதற்காகப் பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை சென்னை வருகை தருகிறார். தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு முதன்முறையாக சென்னை வரும் பிரதமரைத் தமிழக முதலமைச்சர் விஜய் வரவேற்கவுள்ளார். அதன் பின்னர் இருவரும் இணைந்து புதிய மெட்ரோ ரயில் சேவையைக் கொடியசைத்துத் தொடங்கி வைக்கவுள்ளதுடன், ஒரே மெட்ரோ ரயிலில் பயணம் செய்யவும் திட்டமிட்டுள்ளனர்.

இதையும் படிக்க: பிரதமர் மோடியின் சென்னை விசிட்… எடப்பாடி பழனிசாமி திடீர் மீட்.. பின்னணி என்ன..!

பிரதமரின் இன்றைய சென்னை பயணத் திட்டம்:

பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் டெல்லியிலிருந்து சிறப்பு விமானம் மூலம் இன்று காலை 11 மணியளவில் சென்னை விமான நிலையத்தை வந்தடைகிறார். அங்கிருந்து கார் மூலம் போரூர் மெட்ரோ ரயில் நிலையத்திற்குச் செல்லும் பிரதமரைத் தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் அமைச்சர்கள் நேரில் வரவேற்கவுள்ளனர். அதைத் தொடர்ந்து, பூந்தமல்லி – வடபழனி இடையேயான புதிய மெட்ரோ வழித்தடத்தைப் பிரதமர் மோடி தொடங்கி வைக்கவுள்ளார். தொடக்க நிகழ்வுக்குப் பிறகு, பிரதமர் மோடியும் முதலமைச்சர் விஜய்யும் போரூர் வரையிலான மெட்ரோ ரயிலில் அமர்ந்து பொதுமக்களுடனும் மாணவர்களுடனும் கலந்துரையாடியவாறே பயணம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இத்திட்டத்தின் முதல் கட்டமாக இன்று 11 மெட்ரோ ரயில் நிலையங்கள் மக்கள் பயன்பாட்டிற்கு இயக்கப்படவுள்ளன.

இளையராஜா இசைப் பயிற்சி மையத் திறப்பு:

மெட்ரோ சேவை தொடக்க விழாவை நிறைவு செய்த பிறகு, பிரதமர் மோடி சென்னை ஐ.ஐ.டி. வளாகத்திற்குச் செல்லவுள்ளார். அங்குள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ஜலகண்டேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்யவுள்ள அவர், அதனைத் தொடர்ந்து ஐ.ஐ.டி. வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள புகழ்பெற்ற இசையமைப்பாளர் இளையராஜாவின் இசைப் பயிற்சி மையத்தையும் திறந்து வைக்கவுள்ளார். மேலும், அங்கு அமைந்துள்ள நவீன மூளை ஆராய்ச்சி மையத்தைப் பார்வையிடும் பிரதமர், ஐ.ஐ.டி-யில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பிரம்மாண்ட அரசு விழாவில் பங்கேற்றுத் தமிழகத்திற்கான பல்வேறு புதிய வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிச் சிறப்புரையாற்ற உள்ளார்.

இதையும் படிக்க: முதல்வர் விஜய்யுடன் ராகுல் காந்தி திடீர் சந்திப்பு.. கூட்டணி தலைவர்கள் பங்கேற்கவில்லை.. பின்னணி என்ன!

நந்தம்பாக்கம் நிகழ்ச்சி மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள்:

ஐ.ஐ.டி. நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு பிற்பகலில் நந்தம்பாக்கம் செல்லும் பிரதமர் மோடி, அங்கு நடைபெறும் ஜெய்கோபால் கரோடியா இந்து வித்யாலயா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியின் பொன்விழா நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றுகிறார். இந்நிகழ்ச்சிகள் அனைத்தையும் முடித்துக்கொண்டு மாலையில் கார் மூலம் விமான நிலையம் சென்று மீண்டும் டெல்லிக்குப் புறப்படவுள்ளார். பிரதமரின் இன்றைய வருகையையொட்டி விமான நிலையம், போரூர் மெட்ரோ நிலையம், ஐ.ஐ.டி மற்றும் நந்தம்பாக்கம் செல்லும் வழித்தடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதுடன், சென்னை நகரம் முழுவதும் தீவிரக் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

Follow Us