AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

PM Modi Visit To Chennai: நாளை சென்னை வரும் பிரதமர் மோடி.. 22,000 போலீசாருடன் 5 அடுக்கு பாதுகாப்பு.. பயணத்திட்டம் என்ன?

PM Modi Visit: சென்னையில் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட போரூர் - பூந்தமல்லி மெட்ரோ ரயில் வழித்தடத்தில் சேவையைப் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்க உள்ளார். இந்த நிகழ்ச்சியில் தமிழக முதலமைச்சர் விஜய்யும் பங்கேற்க உள்ளார். இருவரும் இணைந்து மெட்ரோ ரயில் சேவையைத் தொடங்கி வைப்பதுடன், மெட்ரோ ரயிலில் பயணம் மேற்கொள்ளவும் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

PM Modi Visit To Chennai: நாளை சென்னை வரும் பிரதமர் மோடி.. 22,000 போலீசாருடன் 5 அடுக்கு பாதுகாப்பு.. பயணத்திட்டம் என்ன?
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 10 Oct 2026 07:11 AM IST

அக்டோபர் 10, 2026: பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காகப் பிரதமர் நரேந்திர மோடி நாளை (அக்டோபர் 11) சென்னை வருகை தர உள்ள நிலையில், மாநகர் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பிரதமரின் வருகையை முன்னிட்டு சுமார் 22,000 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை வருகை:

பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து நாளை காலை 8.15 மணியளவில் தனி விமானம் மூலம் புறப்பட்டு சென்னை வருகிறார். காலை 11.15 மணியளவில் சென்னை விமான நிலையத்தை வந்தடையும் அவர், அங்கிருந்து கார் மூலம் போரூர் புறவழிச்சாலை மெட்ரோ ரயில் நிலையத்திற்குச் செல்லத் திட்டமிடப்பட்டுள்ளது. முன்னதாக, ஹெலிகாப்டர் மூலம் செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது கார் மூலம் பயணிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரதமர் மோடி – முதலமைச்சர் விஜய் மெட்ரோ ரயிலில் பயணம்:

சென்னையில் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட போரூர் – பூந்தமல்லி மெட்ரோ ரயில் வழித்தடத்தில் சேவையைப் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்க உள்ளார். இந்த நிகழ்ச்சியில் தமிழக முதலமைச்சர் விஜய்யும் பங்கேற்க உள்ளார். இருவரும் இணைந்து மெட்ரோ ரயில் சேவையைத் தொடங்கி வைப்பதுடன், மெட்ரோ ரயிலில் பயணம் மேற்கொள்ளவும் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் படிக்க: இன்று சென்னை வரும் ராகுல் காந்தி.. முதல்வர் விஜய்யின் இல்லத்தில் சந்திப்பு, மதிய விருந்து.. தீவுத்திடலில் பிரமாண்ட மாணவர் கூட்டம்!!

சென்னையில் ரோடு ஷோ மேற்கொள்ளும் பிரதமர் மோடி:

மெட்ரோ ரயில் நிகழ்ச்சியைத் தொடர்ந்து, நண்பகல் 12.15 மணியளவில் சென்னை போரூரில் அமைந்துள்ள ஸ்ரீ ஆதி குபேர ஜலகண்டேஸ்வரர் கோயிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம் செய்ய உள்ளார்.

இதையடுத்து, அங்கிருந்து புறப்பட்டு நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். பிற்பகல் 2.40 மணியளவில் நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் உரையாற்ற உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நந்தம்பாக்கம் பகுதியில் சாலையில் நடந்து சென்று பொதுமக்களைச் சந்திக்கும் வகையிலும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும் படிக்க: 3 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை.. 9 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ரிப்போர்ட்..

நிகழ்ச்சிகள் நிறைவடைந்த பின்னர், மாலை 3.45 மணியளவில் சென்னை விமான நிலையத்திற்குப் புறப்படும் பிரதமர், மாலை 4 மணியளவில் தனி விமானம் மூலம் மீண்டும் டெல்லிக்குச் செல்ல உள்ளார்.

சென்னையில் 22,000 போலீசார் பாதுகாப்பு

பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு, சென்னை மாநகரம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தேசிய பாதுகாப்புப் படையின் சிறப்பு அதிகாரி அமித் குமார் தலைமையிலான குழுவினர் கடந்த இரண்டு நாட்களாகச் சென்னையில் தங்கி பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

சென்னை விமான நிலையம், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம், எழும்பூர் ரயில் நிலையம், கோயம்பேடு சந்தை மற்றும் பேருந்து நிலையம் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

விமான நிலையத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் ட்ரோன்கள் மற்றும் காற்றில் பறக்கவிடப்படும் பலூன்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கொரியர் மற்றும் சரக்குப் போக்குவரத்து நிறுவனங்களில் பணிபுரியும் நிரந்தர ஊழியர்கள் புகைப்பட அடையாள அட்டைகளை அணிந்து பணிக்கு வர அறிவுறுத்தப்பட்டுள்ளனர். விமான நிலையத்தைச் சுற்றியுள்ள ஹோட்டல்கள் மற்றும் தங்கும் விடுதிகளிலும் தீவிர சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

முக்கிய இடங்களில் ஐந்து அடுக்கு பாதுகாப்பு

வழக்கமான மூன்று அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளுடன், முக்கிய நிகழ்ச்சி நடைபெறும் பகுதிகளில் கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக, சென்னை விமான நிலையம், நந்தம்பாக்கம் மற்றும் சென்னை வர்த்தக மையம் அமைந்துள்ள பகுதிகளில் ஐந்து அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமரின் வருகையை முன்னிட்டு நாளை சென்னையில் சுமார் 22,000 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இதனால், மாநகரின் முக்கிய பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Follow Us