AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

3 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை.. 9 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ரிப்போர்ட்..

Rainfall Alert: அக்டோபர் 10ஆம் தேதி கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப் பகுதிகள் மற்றும் நீலகிரி, தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். இந்த மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

3 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை.. 9 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ரிப்போர்ட்..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 10 Oct 2026 06:25 AM IST

அக்டோபர் 10, 2026: தமிழகத்தில் அக்டோபர் 15ஆம் தேதி வரை பல்வேறு மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை முன்னறிவிப்பு தெரிவிக்கிறது. குறிப்பாக, கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப் பகுதிகள், நீலகிரி மற்றும் தேனி மாவட்டங்களில் அக்டோபர் 10ஆம் தேதி ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் 0.9 கிலோமீட்டர் உயரத்தில் குமரிக்கடல் பகுதிகளிலிருந்து வடக்கு உள் கர்நாடகா வரை, தமிழகம் மற்றும் தெற்கு உள் கர்நாடகா வழியாகக் காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுகிறது. இதன் காரணமாகத் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு:

அக்டோபர் 10ஆம் தேதி கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப் பகுதிகள் மற்றும் நீலகிரி, தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். இந்த மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

திண்டுக்கல், விருதுநகர், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யக்கூடும்.

மேலும் படிக்க: பெண்கள் மீதான அவதூறு பேச்சுக்கு எதிரான வெற்றி – முதல்வர் விஜய் கருத்து

அக்டோபர் 11, 12: மிதமான மழைக்கு வாய்ப்பு:

அக்டோபர் 11 மற்றும் 12ஆம் தேதிகளில் நீலகிரி, கோயம்புத்தூர், திண்டுக்கல், விருதுநகர், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, தேனி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அக்டோபர் 13 முதல் 15ஆம் தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

வெப்பநிலையில் பெரிய மாற்றம் இருக்காது

அக்டோபர்  10ஆம் தேதி தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றம் இருக்காது எனக் கணிக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் 11 முதல் 13ஆம் தேதி வரை வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றம் இருக்க வாய்ப்பில்லை. இருப்பினும், வெப்பநிலை சற்று உயரக்கூடும். அக்டோபர் 9 முதல் 13ஆம் தேதி வரை வடக்கு உள் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கலாம். ஏனைய தமிழகப் பகுதிகள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் வெப்பநிலை இயல்பை ஒட்டி இருக்கக்கூடும்.

மேலும் படிக்க: “தைரியமா இரு மா..” – தாராபுரம் திமுக வேட்பாளருக்கு ஆறுதல் சொன்ன மு.க.ஸ்டாலின்

சென்னை வானிலை எப்படி இருக்கும்?

இன்று (அக்டோபர் 10) சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35 முதல் 36 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 முதல் 28 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என முன்னறிவிக்கப்பட்டுள்ளது.

Follow Us