AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

தமிழக இளைஞர்களுக்கு அதிக வேலைவாய்ப்பு – திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர் மோடி பேச்சு

PM Modi Launches Mega Projects : சென்னை ஐஐடி வளகாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் விஜய்யுடன் இணைந்து மொத்தம் ரூ.13,000 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அதிகம் கிடைக்க உள்ளது என்றார்.

தமிழக இளைஞர்களுக்கு அதிக வேலைவாய்ப்பு –  திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர் மோடி பேச்சு
பிரதமர் மோடி
Karthikeyan S
Karthikeyan S | Published: 11 Oct 2026 15:45 PM IST

சென்னை, அக்டோபர் 11 : சென்னை ஐஐடி வளகாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் விஜய்யுடன் இணைந்து மொத்தம் ரூ.13,000 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்தார். மேலும், நெடுஞ்சாலைகள், ரயில்வே, துறைமுகங்கள் உள்ளிட்ட துறைகளின் திட்டங்களையும் பிரதமர் தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் சுமார் ரூ.3,700 கோடி மதிப்பிலான தேசிய நெடுஞ்சாலை திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்

தமிழக இளைஞர்களுக்கு அதிக வேலைவாய்ப்பு

அதனைத் தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, தமிழ்நாட்டுக்கு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நாள் இன்று. தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அதிகம் கிடைக்க உள்ளது. சிவபெருமானின் புனித பூமியான தமிழ்நாட்டில் நான் ஜலகண்டேஸ்வரரின் நல்லாசிகளை பெற்றேன். புண்ணிய பூமியான தமிழ்நாட்டில் அனைவருக்கும் நவராத்திரி வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்று பேசினார்.

இதையும் படிக்க : பூந்தமல்லி – வடபழனி மெட்ரோ ரயில் சேவை தொடக்கம்.. பிரதமர் மோடி முதல்வர் விஜய் ஒன்றாக பயணம்!..

தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, நான் முதல்வராக இருந்தபோது, தமிழக முன்னாள் முதல்வர்கள் ​​கருணாநிதி மற்றும் ஜெயலலிதா ஆகியோருடன் உரையாட எனக்குப் பல வாய்ப்புகள் கிடைத்தன. பிரதமரான பிறகு, ஜெயலலிதா, ஓ. பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி மற்றும் மு.க. ஸ்டாலின் ஆகியோருடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அரசுகள் மாறினாலும், தமிழ்நாட்டை மேம்படுத்தவும் இங்குள்ள மக்களுக்குச் சேவை செய்யவும் கொண்ட எனது உறுதி மாறவில்லை. அந்தப் பயணத்தை நாங்கள் இப்போது முதல்வர் ஜோசப் விஜயுடன் இணைந்து முன்னெடுத்துச் செல்கிறோம் என்றார்.

தொடர்ந்து பேசிய பிரதமர், “இன்றைய நிகழ்ச்சியில் ரூ. 13,000 கோடி மதிப்பிலான திட்டங்கள் இடம்பெற்றுள்ளன. நிறைவடைந்த பல திட்டங்களை நாங்கள் தொடங்கி வைத்துள்ளேன் அதேவேளையில் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியுள்ளேன் இந்த திட்டங்கள் மக்களின் அன்றாடப் பயணத்தை எளிதாக்கும் வகையிலும், தொழில் மற்றும் வர்த்தகத்தை வலுப்படுத்தும்.மேலும் இவை அனைத்தும் ஒன்றிணைந்து, தமிழ்நாடு முழுவதும் உள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்றார்.

பிரதமர் மோடியின் அறிவிப்பு

 

உற்பத்தித் துறையின் வளர்ச்சியால், நாட்டில் இளைஞர்களுக்கு லட்சக்கணக்கான நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன; இந்த வளர்ச்சியில் தமிழ்நாடு குறிப்பிடத்தக்க பங்காற்றியுள்ளது என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

இதையும் படிக்க : மகளின் திருமணத்திற்காக சேர்த்து வைத்த 60 சவரன் நகைகள் கொள்ளை.. திருடன் கிடைத்தும் கிடைக்காத நகைகள்!!..

மேலும் ” தமிழ்நாட்டில் நகர்ப்புற மேம்பாடு எங்களுக்கு ஒரு முக்கிய முன்னுரிமையாகும். மக்களின் வாழ்க்கைச் சூழலை மேம்படுத்துவதில் பொதுப் போக்குவரத்து முக்கியப் பங்காற்றுகிறது. நாட்டை வலுப்படுத்த மாநிலங்களை வலுப்படுத்த வேண்டியது அவசியம். எனவே, தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் உற்பத்தித் துறையை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது.’மேக் இன் இந்தியா’ அல்லது ‘வோக்கல் ஃபார் லோக்கல்’ என மத்திய அரசின் முன்னெடுப்புகள் தமிழ்நாட்டிற்கும் பயனளிக்கின்றன என்றார்.

Follow Us