AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Tamil Nadu Weather Alert: கனமழை முதல் மிக கனமழை வரை… அடுத்த 5 நாட்களுக்கு கனமழை வெளுத்து வாங்கப்போது – எங்கெல்லாம் தெரியுமா?

Tamil Nadu weather today : வடகிழக்குப் பருவமழை (Northeast Monsoon) தென்னிந்தியாவில் அக்டோபர் 15, 2026 இன்று தொடங்குவதற்கான சாதகமான நிலை காணப்படுவதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் அக்டோபர் 15, 16 ஆகிய 2 நாட்கள் கன முதல் மிக கனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Tamil Nadu Weather Alert: கனமழை முதல் மிக கனமழை வரை… அடுத்த 5 நாட்களுக்கு கனமழை வெளுத்து வாங்கப்போது – எங்கெல்லாம் தெரியுமா?
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 15 Oct 2026 14:55 PM IST

சென்னை, அக்டோபர் 15 : வடகிழக்குப் பருவமழை (Northeast Monsoon) தென்னிந்தியாவில் அக்டோபர் 15, 2026 இன்று தொடங்குவதற்கான சாதகமான நிலை காணப்படுவதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் குமரிக்கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல சுழற்சி நிலுவலதாகவும் மேலும் வங்கக் கடல் பகுதிகள் வரை மன்னார் வளைகுடா மற்றும் தென் மேற்கு வங்கக் கடல் வழியாக காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுதாக செனனை வானிலை மையம் எச்சரித்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் அக்டோபர் 15, 2026 முதல் அக்டோபர் 20, 2026 வரை 6 நாட்களுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.

கனமழை முதல் மிக கனமழைக்கான வாய்ப்பு

இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பில், அக்டோபர் 15, 2026 இன்று விருதுநகர் மாவட்டத்தின் மலை பகுதிகள் மற்றும் நீலகிரி, கோயம்புத்தூர், தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கன முதல் மிக கன மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தஞ்சாவூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், கடலூர், தென்காசி, கன்னியாகுமரி, கள்ளக்குறிச்சி, சேலம், திருச்சிராப்பள்ளி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருப்பூர், திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும் என எச்சரித்துள்ளது.

இதையும் படிக்க : 3.5% உள் இடஒதுக்கீடு வழக்கு.. உயர் நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்தது உச்ச நீதிமன்றம்!

அதனைத் தொடர்ந்து அக்டோபர் 16, 2026 நாளை நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, கன்னியாகுமரி, ராமநாதபுரம், சிவகங்கை, திருச்சிராப்பள்ளி, நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், மதுரை, திருப்பூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், கடலூர், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களிலும் அக்டோபர் 18, 2026 அன்று நீலகிரி, கோயம்புத்தூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : ஆயுத பூஜை தொடர் விடுமுறை.. சென்னையில் 14 இடங்களில் நேரடி அரசுப் பேருந்து டிக்கெட் முன்பதிவு மையம் தொடக்கம்!!

மேலும் அக்டோபர் 19, 2026 அன்று 19-10-2026: நீலகிரி, கோயம்புத்தூர், மதுரை மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கன மழையும், அக்டோபர் 20, 2026 செவ்வாய் கிழமை நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த 6 நாட்களும் மேற்சொன்ன மாவட்டங்களைத் தவிர தமிழகத்தின் இதர பகுதிகளிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Follow Us