ஊருக்கு போற பிளான் இருக்கா? ஆயுத பூஜைக்கு சேலம் வழியாக சிறப்பு ரயில்கள் அறிவிப்பு.. முழு விவரம் உள்ளே..
Ayudha Pooja Special Train: போத்தனூரில் இருந்து அக்டோபர் 16ஆம் தேதி காலை 6.15 மணிக்குப் புறப்படும் சிறப்பு ரயில், திருப்பூர், ஈரோடு வழியாக காலை 9 மணிக்கு சேலம் வந்தடைகிறது. பின்னர் ஜோலார்பேட்டை, காட்பாடி, பெரம்பூர், கூடூர் வழியாகச் சென்று, அக்டோபர் 18ஆம் தேதி பிற்பகல் 1.30 மணிக்கு பீகார் மாநிலம் பரவுனியைச் சென்றடைகிறது.
அக்டோபர் 15, 2026: ஆயுத பூஜை மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு, பயணிகளின் கூட்ட நெரிசலைக் குறைக்கும் வகையில் தெற்கு ரயில்வே (Southern Railways) சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது. குறிப்பாக, சேலம் வழியாக போத்தனூர் – பரவுனி மற்றும் திருவனந்தபுரம் வடக்கு – சந்திரகாசி இடையே சிறப்பு ரயில்கள் (Special Train) இயக்கப்பட உள்ளன. வார இறுதி நாட்கள் மற்றும் பண்டிகைக் காலங்களில் ஏராளமானோர் சொந்த ஊர்களுக்குச் செல்வது வழக்கம். அந்த வகையில், ஆயுத பூஜையை முன்னிட்டு ஐந்து நாட்கள் தொடர் விடுமுறை வருவதால், ரயில்களில் பயணிகள் கூட்டம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
போத்தனூர் – பரவுனி சிறப்பு ரயில்
போத்தனூரில் இருந்து அக்டோபர் 16ஆம் தேதி காலை 6.15 மணிக்குப் புறப்படும் சிறப்பு ரயில், திருப்பூர், ஈரோடு வழியாக காலை 9 மணிக்கு சேலம் வந்தடைகிறது. பின்னர் ஜோலார்பேட்டை, காட்பாடி, பெரம்பூர், கூடூர் வழியாகச் சென்று, அக்டோபர் 18ஆம் தேதி பிற்பகல் 1.30 மணிக்கு பீகார் மாநிலம் பரவுனியைச் சென்றடைகிறது.
மேலும் படிக்க: பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் ஜெயந்தி விழா.. நேரில் சென்று மரியாதை செலுத்துகிறார் முதல்வர் விஜய்!!
மறுமார்க்கத்தில், அக்டோபர் 19ஆம் தேதி காலை 9.30 மணிக்கு பரவுனியில் இருந்து புறப்படும் ரயில், அக்டோபர் 21ஆம் தேதி பிற்பகல் 2 மணிக்கு சேலம் வந்தடைகிறது. அங்கிருந்து பிற்பகல் 2.05 மணிக்குப் புறப்பட்டு, ஈரோடு, திருப்பூர் வழியாக மாலை 6.30 மணிக்கு போத்தனூரைச் சென்றடைகிறது.
திருவனந்தபுரம் – சந்திரகாசி சிறப்பு ரயில்
திருவனந்தபுரம் வடக்கு ரயில் நிலையத்தில் இருந்து அக்டோபர் 15ஆம் தேதி பிற்பகல் 2.15 மணிக்குப் புறப்படும் சிறப்பு ரயில், பாலக்காடு, போத்தனூர், திருப்பூர், ஈரோடு வழியாக அக்டோபர் 16ஆம் தேதி அதிகாலை 2 மணிக்கு சேலம் வந்தடைகிறது. பின்னர் ஜோலார்பேட்டை, காட்பாடி வழியாகச் சென்று, அக்டோபர் 17ஆம் தேதி பிற்பகல் 1.45 மணிக்கு சந்திரகாசியைச் சென்றடைகிறது.
மேலும் படிக்க: ஆயுத பூஜை தொடர் விடுமுறை எதிரொலி.. தொடங்கிய சில நிமிடங்களில் விற்று தீர்ந்த சிறப்பு ரயில் டிக்கெட்டுகள்..
மறுமார்க்கத்தில், அக்டோபர் 18ஆம் தேதி பிற்பகல் 2.15 மணிக்கு சந்திரகாசியில் இருந்து புறப்படும் ரயில், அக்டோபர் 19ஆம் தேதி இரவு 9.25 மணிக்கு சேலம் வந்தடைகிறது. அங்கிருந்து இரவு 9.30 மணிக்குப் புறப்பட்டு, ஈரோடு, திருப்பூர், போத்தனூர் வழியாக அக்டோபர் 20ஆம் தேதி காலை 9.55 மணிக்கு திருவனந்தபுரம் வடக்கைச் சென்றடைகிறது.
முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களில் டிக்கெட்டுகள் காலி
ஏற்கெனவே ஆயுத பூஜை விடுமுறையை முன்னிட்டு சென்னை சென்ட்ரல் – போத்தனூர், தாம்பரம் – செங்கோட்டை, ஈரோடு – திருநெல்வேலி, சென்னை சென்ட்ரல் – கொல்லம் உள்ளிட்ட வழித்தடங்களில் 10 சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்திருந்தது.
இந்த ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு அக்டோபர் 15ஆம் தேதி தொடங்கிய நிலையில், சில நிமிடங்களிலேயே டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டதால் பயணிகள் ஏமாற்றமடைந்துள்ளனர். பயணிகளின் கோரிக்கையைத் தொடர்ந்து, கூடுதல் சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.