AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் ஜெயந்தி விழா.. நேரில் சென்று மரியாதை செலுத்துகிறார் முதல்வர் விஜய்!!

CM Vijay to Participate in Thevar Jayanthi: ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் நடைபெறவுள்ள முத்துராமலிங்கத் தேவரின் 119-வது ஜெயந்தி மற்றும் 64-வது குருபூஜை விழாவில் முதல்-அமைச்சர் விஜய் நேரில் கலந்துகொண்டு மரியாதை செலுத்துகிறார். இதுதொடர்பான விரிவான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் ஜெயந்தி விழா.. நேரில் சென்று மரியாதை செலுத்துகிறார் முதல்வர் விஜய்!!
முதல்வர் விஜய்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 15 Oct 2026 10:17 AM IST

அக்டோபர், 15: தமிழக வரலாற்றில் தியாக சீலரும், ஆன்மிக மற்றும் அரசியல் தலைவருமான பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் குருபூஜை மற்றும் ஜெயந்தி விழா ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் வெகுவிமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. சாதி, மத எல்லைகளைக் கடந்து அனைத்துத் தரப்பு மக்களும் மற்றும் தலைவர்களும் பெருந்திரளாகக் கலந்துகொண்டு மரியாதை செலுத்தும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க விழாவிற்குத் தமிழகம் முழுவதும் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுவது வழக்கம். அந்த வகையில், தற்போதைய தமிழக முதலமைச்சர் விஜய் அவர்கள், வரவிருக்கும் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் 119-வது ஜெயந்தி மற்றும் 64-வது குருபூஜை விழாவில் நேரில் கலந்துகொண்டு மரியாதை செலுத்தவுள்ளார் என்ற அதிகாரப்பூர்வத் தகவல்கள் வெளியாகியுள்ளன. முதல்-அமைச்சர் பொறுப்பேற்ற பிறகு அவர் பங்கேற்கும் இந்தத் தேவர் ஜெயந்தி விழா அரசியல் மற்றும் பொதுத்துறை வட்டாரத்தில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க: முதல்வர் விஜய் பாணியை பின்பற்றும் நடிகர் தனுஷ்.. தொகுதிகள் வாரியாக கட்டமைப்பு.. நற்பணி இயக்கமாக மாறிய ரசிகர் மன்றம்!!

ஆன்மிக – அரசியல் நிகழ்வுகளும்:

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பசும்பொன்னில் அமைந்துள்ள முத்துராமலிங்கத்தேவரின் நினைவாலயத்தில் நடைபெறும் இந்த குருபூஜை விழா வருகிற 28-ந்தேதி கோலாகலமாகத் தொடங்குகிறது. அன்றைய தினம் காலை 6 மணிக்கு யாகசாலை பூஜைகளுடன் தொடங்கும் நிகழ்ச்சிகள், தேவர் நினைவாலய அறங்காவலர்கள் குழுத் தலைவர் காந்திமீனாள் நடராஜன் தலைமையில் நடைபெறுகின்றன. முதல் நாள் நிகழ்ச்சிகள் முற்றிலும் தேவரின் ஆன்மிக விழாவாகக் கடைபிடிக்கப்பட்டு, கணபதி ஹோமம், லட்சார்ச்சனை, திருவிளக்கு பூஜை மற்றும் தேரோட்டம் ஆகியவை நடத்தப்படுகின்றன. அதனைத் தொடர்ந்து, மறுநாளான 29-ந்தேதி தேவரின் அரசியல் பங்களிப்பைச் போற்றும் வகையில் அரசியல் விழாவாகவும், அக்டோபர் 30-ந்தேதி பிரதான குருபூஜை விழாவும் விமரிசையாக நடைபெறுகின்றன.

முதல்வரின் வருகையும் அரசு முறை ஏற்பாடுகளும்:

வருகிற 30-ந்தேதி நடைபெறும் தேவர் குருபூஜையையொட்டி, அன்று காலை 6 மணிக்கு யாகசாலை பூஜைகள் தொடங்கும். தொடர்ந்து, தமிழக அரசு சார்பில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் சிவகுரு பிரபாகரன் தலைமையில் அரசு மரியாதை செலுத்தப்படவுள்ளது. அதனைத் தொடர்ந்து, காலை 9 மணி அளவில் முதல்-அமைச்சர் விஜய் மற்றும் அமைச்சர்கள், தவெகவின் முக்கிய நிர்வாகிகள் பசும்பொன்னிற்கு நேரில் வருகை தந்து முத்துராமலிங்கத்தேவர் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்கள். முதல்வர் வருகையை முன்னிட்டு ராமநாதபுரம் மற்றும் மதுரை மாவட்டங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் பிரம்மாண்டமான வரவேற்புக்கான ஆலோசனைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இதையும் படிக்க: “நான் பேசுவது போர் அடிக்கிறதா?”.. மேடையிலேயே மோதிக்கொண்ட சேகர் பாபு – தவெக எம்எல்ஏ விஜயதாமு.. ஆய்வுக்கூட்டத்தில் பரபரப்பு!!

மதுரை மற்றும் பசும்பொன் பயணத் திட்டம்:

பசும்பொன் செல்லும் வழியில் முதலமைச்சர் விஜய் வருகிற 30-ந்தேதி காலை மதுரைக்கு வருகை தர உள்ளார். அங்கு கோரிப்பாளையத்தில் அமைந்துள்ள தேவர் சிலைக்கும், அதைத் தொடர்ந்து மருது பாண்டியர் சிலைகளுக்கும் அவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவார் எனத் திட்டமிடப்பட்டுள்ளது. அதன்பிறகு, அங்கிருந்து சாலை மார்க்கமாகத் தனி வேனில் புறப்பட்டுச் செல்லும் அவர், வழெநெடுகிலும் திரளும் பொதுமக்களின் வரவேற்பை ஏற்றவாறு பசும்பொன் சென்றடைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் தேவர் ஜெயந்தி விழா ஏற்பாடுகள் அனைத்தும் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் செவ்வனே ஒருங்கிணைக்கப்பட்டு வருவதால், அரசியல் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் பலரும் பசும்பொன்னில் குவிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us