AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

இன்று தொடங்கும் வடகிழக்கு பருவமழை.. 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை..

Rainfall Alert: அக்டோபர் 15ஆம் தேதி சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 33–34 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 25–26 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று தொடங்கும் வடகிழக்கு பருவமழை.. 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 15 Oct 2026 06:25 AM IST

அக்டோபர் 15, 2026: தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தென்னிந்தியப் பகுதிகளில் தொடங்குவதற்குச் சாதகமான சூழல் நிலவுவதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு மழை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்:

அக்டோபர் 15ஆம் தேதி நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்பதால் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், கடலூர், தென்காசி, கன்னியாகுமரி, கள்ளக்குறிச்சி, சேலம், திருச்சி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருப்பூர், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளது.

மேலும் படிக்க: அதிமுகவை எந்தக் கொம்பனாலும் ஆட்டவோ, அசைக்கவோ முடியாது – அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்கு எடப்பாடி பழனிசாமி பதிலடி..

அக்டோபர் 20ஆம் தேதி வரை தொடரும் கனமழை:

அக்டோபர் 16ஆம் தேதி நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, கன்னியாகுமரி, ராமநாதபுரம், சிவகங்கை, திருச்சி, நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.

மேலும், நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், மதுரை, திருப்பூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், கடலூர், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

மேலும் படிக்க: சென்னையின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய பிரதான சுற்றுக் குழாய் திட்டம்! முதலமைச்சர் விஜய் அடிக்கல் நாட்டினார்

அக்டோபர் 18ஆம் தேதி நீலகிரி, கோவை, மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களிலும், 19ஆம் தேதி நீலகிரி, கோவை, மதுரை, சிவகங்கை மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளது. அக்டோபர் 20ஆம் தேதி நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். மற்ற பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையில் மிதமான மழைக்கு வாய்ப்பு

அக்டோபர் 15ஆம் தேதி சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 33–34 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 25–26 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow Us