AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

ரூ.5,000 கோடியில் தரவு மையம்! நிகழ்ச்சியின் போது அண்ணாசிப் பழத்தை உருட்டிய முதல்வர் விஜய்..

CM Vijay News: இந்த நிகழ்ச்சியில் சிங்கப்பூர் பாரம்பரியத்தைப் பிரதிபலிக்கும் வகையில், முதலமைச்சர் விஜய் மற்றும் சிங்கப்பூர் துணைப் பிரதமருக்கு அண்ணாசிப் பழங்கள் வழங்கப்பட்டன. அதனை இருவரும்  வாங்கி தரையில் உருட்டினர். சிங்கப்பூர், மலேசியா நாடுகளில் புதிய நிறுவனம் அல்லது அலுவலகம் தொடங்கும்போது அண்ணாசிப் பழத்தை உருட்டுவது பாரம்பரிய வழக்கமாகக் கருதப்படுகிறது.

ரூ.5,000 கோடியில் தரவு மையம்! நிகழ்ச்சியின் போது அண்ணாசிப் பழத்தை உருட்டிய முதல்வர் விஜய்..
அண்ணாசிப்பழத்தை உருட்டிய முதல்வர் விஜய்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 15 Oct 2026 13:30 PM IST

அக்டோபர் 15, 2026: சென்னை அம்பத்தூர் பட்டரவாக்கம் பகுதியில் சிங்கப்பூரைச் சேர்ந்த கேப்பிட்டா லேண்ட் நிறுவனம் சார்பில் பிரம்மாண்ட தரவு மையம் அமைக்கப்பட்டுள்ளது. 2024ஆம் ஆண்டு நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், சுமார் 4 ஏக்கர் பரப்பளவில் இந்த மையம் உருவாக்கப்பட்டுள்ளது. சுமார் ரூ.5,000 கோடி முதலீட்டில், 56 மெகாவாட் மின்சாரத் திறனுடன் அமைக்கப்பட்டுள்ள இந்தத் தரவு மையத்தில் 4,900 சர்வர் ரேக்குகள் இடம்பெற்றுள்ளன.

சென்னையின் தகவல் தொழில்நுட்பக் கட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ள இந்த மையத்தை, தமிழக முதலமைச்சர் விஜய், சிங்கப்பூர் துணைப் பிரதமர் கான் கிம் யோங் ஆகியோர் நேரில் பார்வையிட்டனர்.

அண்ணாசிப் பழத்தை உருட்டிய முதல்வர் விஜய்!


இந்த நிகழ்ச்சியில் சிங்கப்பூர் பாரம்பரியத்தைப் பிரதிபலிக்கும் வகையில், முதலமைச்சர் விஜய் மற்றும் சிங்கப்பூர் துணைப் பிரதமருக்கு அண்ணாசிப் பழங்கள் வழங்கப்பட்டன. அதனை இருவரும்  வாங்கி தரையில் உருட்டினர். சிங்கப்பூர், மலேசியா நாடுகளில் புதிய நிறுவனம் அல்லது அலுவலகம் தொடங்கும்போது அண்ணாசிப் பழத்தை உருட்டுவது பாரம்பரிய வழக்கமாகக் கருதப்படுகிறது. இது அதிர்ஷ்டம், செல்வம் மற்றும் செழிப்பைக் குறிக்கும் மங்களகரமான நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.

வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கைப் பணிகள் ஆய்வு!


தொடர்ந்து, பெரம்பூர் தொகுதிக்கு உட்பட்ட முல்லை நகர் கால்வாய் பகுதியில் முதலமைச்சர் விஜய் ஆய்வு மேற்கொண்டார். வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் மற்றும் வெள்ளத் தடுப்புப் பணிகளை அவர் பார்வையிட்டார்.

மேலும், பேசின் பிரிட்ஜ் பகுதியில் உள்ள பக்கிங்ஹாம் கால்வாயில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளையும் ஆய்வு செய்தார். தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்குவதைத் தடுக்க வடிகால்களைத் தூர்வாரும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்றும், மழைக்காலத்தில் பொதுமக்களுக்கு எவ்வித சிரமமும் ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

மழைக்காலங்களில் அதிக பாதிப்புக்குள்ளாகும் வட சென்னை:

வடகிழக்குப் பருவமழை அக்டோபர் 15ஆம் தேதி தொடங்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், சென்னையில் மழைப்பொழிவு அதிகரிக்க வாய்ப்புள்ளது. குறிப்பாக, வடசென்னையின் வண்ணாரப்பேட்டை, வியாசர்பாடி, பெரம்பூர், ராயபுரம் உள்ளிட்ட பகுதிகளில் ஆண்டுதோறும் மழைக்காலங்களில் வெள்ளப் பாதிப்புகள் ஏற்படுகின்றன. இப்பகுதிகளில் வெள்ளப் பாதிப்புகளுக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் எனப் பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்தச் சூழலில், வெள்ளப் பாதிப்புகளைத் தவிர்க்கும் வகையில் முன்னெச்சரிக்கைப் பணிகளைத் தீவிரப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

Follow Us