AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

மனைவியுடன் உல்லாசம்.. கையும் களவுமாக சிக்கிய சென்னை தவெக பிரமுகர்.. ஆத்திரத்தில் கணவன் செய்த காரியம்!

Complaint Filed Against TVK Functionary : சென்னையில் தனது மனைவியுடன் வீட்டில் தனியாக இருந்த தமிழக வெற்றிக் கழகத்தின் பிரமுகரை அந்த பெண்ணின் கணவர் செல்போனில் வீடியோவாக பதிவு செய்து போலீசில் பிடித்து கொடுத்துள்ளார். இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மனைவியுடன் உல்லாசம்.. கையும் களவுமாக சிக்கிய சென்னை தவெக பிரமுகர்.. ஆத்திரத்தில் கணவன் செய்த காரியம்!
கையும், களவுமாக சிக்கிய தவெக பிரமுகர்.
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 15 Oct 2026 17:46 PM IST

சென்னை மாவட்டம், பள்ளிக்கரணை பகுதியில் வசித்து வருபவர் மகேந்திரன். இவர், சிங்கப்பூரில் தங்கி இருக்கு வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சித்திரைச் செல்வி. இவர், தமிழக வெற்றி கழகத்தில் மகளிர் அணியில் நிர்வாகியாக இருந்து வருகிறார். இவருக்கும், தமிழக வெற்றி கழகத்தின் பிரமுகர் முகேஷ் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்ட நிலையில், திருமணத்தை மீறிய உறவு இருந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக இருவரும் செல்போனில் தொடர்ந்து பேசி வருவதுமாகவும், நேரில் சந்திப்பதுமாக இருந்து வந்துள்ளனர். இது தொடர்பான தகவல் சித்திரை செல்வியின் கணவர் மகேந்திரனுக்கு தெரிய வந்துள்ளது. அவர், தனது மனைவியை கண்டித்துள்ளார். ஆனால், அதனை காதில் வாங்கிக் கொள்ளாத சித்திரை செல்வி தொடர்ந்து முகேஷ் உடன் நெருக்கமான பழக்கத்தில் இருந்து வந்ததாக தெரிகிறது.

வீட்டில் மனைவியுடன் தனியாக இருந்த தவெக பிரமுகர்

இந்த நிலையில், சிங்கப்பூரில் பணிபுரிந்து வந்த மகேந்திரன் திடீரென சென்னை திரும்பினார். தான் வருவது குறித்த தகவலை மனைவி சித்திரை செல்விடம் அவர் தெரிவிக்கவில்லை என்று தெரிகிறது. இந்த நிலையில், தனது வீட்டுக்கு வந்த மகேந்திரன் வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருப்பதை பார்த்து சந்தேகம் அடைந்தார். அத்துடன், வீட்டின் ஜன்னல் வழியாக பார்த்த போது, மனைவி சித்திரை செவ்வியுடன், தமிழக வெற்றிக்கழக பிரமுகர் முகேஷ் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

மேலும் படிக்க: ரயில்களில் ஹெட்போன் இல்லாமல் பாடல் கேட்டால் அவ்வளவுதான்.. 6 மாதம் கம்பி எண்ணனும்.. ரயில்வே அதிரடி அறிவிப்பு!

வீடியோ பதிவு செய்து போலீசில் பிடித்து கொடுத்த சம்பவம்

தொடர்ந்து, தனது வீட்டின் கதவை வெளிப்புறமாக பூட்டிய மகேந்திரன் இது தொடர்பாக அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். முன்னதாக தனது செல்போனில் மகேந்திரன் வீடியோ பதிவு செய்ய தொடங்கினார். தொடர்ந்து, போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து மகேந்திரனின் வீட்டின் கதவை தட்டினர். அப்போது, மகேந்திரன் மனைவி சித்திரைச் செல்வி கதவை திறந்து வெளியே வந்தார். அவருக்கு பின்னால் தமிழக வெற்றிக் கழகத்தின் பிரமுகர் முகேஷும் வெளியே வந்தார்.

தவெக பிரமுகரிடம் போலீசார் தீவிர விசாரணை

இதனை, சித்திரை செவ்வியின் கணவர் மகேந்திரன் செல்போனில் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். தொடர்ந்து, தவெக மகளிர் அணி நிர்வாகி சித்திரைச் செல்வி மற்றும் அந்த கட்சியின் பிரமுகர் முகேஷ் ஆகியோரை போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு, அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தனது மனைவியுடன் வீட்டில் தனியாக இருந்த தவெக பிரமுகரை போலீசில் கணவர் மாட்டிவிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க: “ஓம் சக்தி பராசக்தி திமுக ஒரு தீய சக்தி” உங்க அப்பாவ காணோம்.. மு.க.ஸ்டாலின்-உதயநிதி குறித்து அரசு பேருந்தில் சர்ச்சை வாசகம்..!

Follow Us