AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

காஞ்சிபுரத்தில் இந்தியாவின் சிறந்த புற்றுநோய் சிகிச்சை மையம் – திறந்து வைக்கும் முதல்வர் விஜய்

Cancer Treatment Centre : காஞ்சிபுரம் அருகே காரப்பேட்டையில் ரூ.324 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள புற்றுநோய் சிகிச்சை மையத்தை, வரும் 2027, ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகைக்குள் முதல்வர் விஜய் திறந்து வைப்பார் என மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரத்தில் இந்தியாவின் சிறந்த புற்றுநோய் சிகிச்சை மையம் – திறந்து வைக்கும் முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்
Karthikeyan S
Karthikeyan S | Published: 14 Oct 2026 08:52 AM IST

சென்னை, அக்டோபர் 14 : காஞ்சிபுரம் அருகே காரப்பேட்டையில் ரூ.324 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள புற்றுநோய் சிகிச்சை மையத்தை, வரும் 2027, ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகைக்குள் முதல்வர் விஜய் திறந்து வைப்பார் என மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார். இது இந்தியாவிலேயே மிகத் தரமான புற்றுநோய் சிகிச்சை மையமாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

‘காஞ்சிபுரத்தில் இந்தியாவின் சிறந்த புற்றுநோய் சிகிச்சை மையம்’

காஞ்சிபுரம் அருகே காரப்பேட்டையில் கட்டப்பட்டுள்ள இந்த மருத்துவமனைக் கட்டடத்தை அமைச்சர் அருண்ராஜ் அக்டோபர் 13, 2026 நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் பேசியதாவது, ஐந்து மாடிகள் கொண்ட இந்தக் கட்டடத்தில், ஒரே நேரத்தில் 750 நோயாளிகள் தங்கி சிகிச்சை பெறும் வகையில் படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்றார்.

இதையும் படிக்க : நந்தம்பாக்கம் – ஆலந்தூர், வடபழனி – பனகல்பார்க் மெட்ரோ – எப்போது தொடக்கம்?

மேலும் ரோபோக்கள் மூலம் அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் அரங்கம், புற்றுநோய் சிகிச்சைக்குத் தேவையான அதிநவீன மருத்துவக் கருவிகள், எம்ஆர்ஐ ஸ்கேன் வசதி ஆகியவை இங்கு அமைக்கப்படுகின்றன. ரத்தம் மற்றும் கட்டிகளைப் பரிசோதிப்பதற்கான தனி ஆய்வகங்களும் உள்ளன. மருத்துவமனைக்குத் தேவையான மின்சாரத்துக்காக சூரியசக்தி மின் வசதியும் விரைவில் ஏற்படுத்தப்பட உள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில், மாநில அளவில் ஒரு உயர்தரப் புற்றுநோய் சிகிச்சை மையமும், ஐந்து மண்டல அளவிலான புற்றுநோய் சிகிச்சை மையங்களும் அமைக்கப்படும் என முதல்வர் விஜய் அறிவித்திருந்தார். அந்த அறிவிப்பின் அடிப்படையிலேயே காஞ்சிபுரத்தில் இந்த மையம் அமைக்கப்பட்டு வருவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

ஆய்வின்போது ஒரு சில குறைபாடுகள் கண்டறியப்பட்டதாகவும், அவற்றை உடனடியாகச் சரிசெய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார். பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டு, பொங்கலுக்குள் மருத்துவமனை திறக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், கடந்த ஆட்சிக் காலத்தில் தீர்க்கப்படாத செவிலியர் பற்றாக்குறை பிரச்னை, முழுமையாக முறைப்படுத்தப்பட்டு, தற்போது மாநிலம் முழுவதும் 4,724 செவிலியர் பணியிடங்கள் வெளிப்படையான முறையில் நிரப்பப்பட்டுள்ளன.காஞ்சிபுரம் மாவட்டம் காரப்பேட்டையில் உள்ள அரசு அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துவமனை, புற்றுநோய் சிகிச்சைக்கான மாநில சிறப்பு மருத்துவ நிறுவனமாக ரூ.16.06 கோடி மதிப்பீட்டில்தரம் உயர்த்தப்படவுள்ளது என்றார்.

இதையும் படிக்க : நண்பர்கள் பெயரில் போலி ஆவணம்.. வங்கியில் போலி நகை.. வேலூரில் ரூ.1.7 கோடி அடித்த நகை மதிப்பீட்டாளர்கள்!

ஆய்வின்போது வனத் துறை அமைச்சர் ஆர்.வி. ரஞ்சித்குமார், உத்தரமேரூர் சட்டப்பேரவை உறுப்பினர் ஜெ. முனிரத்தினம், மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலர் தாரேஸ் அகமது, அரசு புற்றுநோய் மருத்துவமனை இயக்குநர் எஸ். சரவணன், நிலைய மருத்துவ அலுவலர் சிவகாமி, பொதுப்பணித் துறை செயற்பொறியாளர் திரிபுரசுந்தரி, அரசு புற்றுநோய் மருத்துவமனை மருத்துவர்கள் பிரசன்னா, சீனிவாசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Follow Us