நந்தம்பாக்கம் – ஆலந்தூர், வடபழனி – பனகல்பார்க் மெட்ரோ – எப்போது தொடக்கம்?
Chennai Metro Expansion Plan : சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டத் திட்டத்தில், நந்தம்பாக்கம் முதல் ஆலந்தூர் வரையிலும், வடபழனி முதல் பனகல் பூங்கா வரையிலும் உள்ள பகுதிகளை அடுத்த 6 மாதங்களில், அதாவது 2027 மார்ச் மாதத்துக்குள் முடிக்க மெட்ரோ ரயில் நிர்வாகம் இலக்கு நிர்ணயித்துள்ளது.
சென்னை, அக்டோபர் 14 : சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டத் திட்டத்தில், நந்தம்பாக்கம் முதல் ஆலந்தூர் வரையிலும், வடபழனி முதல் பனகல் பூங்கா வரையிலும் உள்ள பகுதிகளை அடுத்த 6 மாதங்களில், அதாவது 2027 மார்ச் மாதத்துக்குள் முடிக்க மெட்ரோ ரயில் நிர்வாகம் இலக்கு நிர்ணயித்துள்ளது.
நந்தம்பாக்கம் – ஆலந்தூர், வடபழனி – பனகல்பார்க் மெட்ரோ ரயில் சேவை
இரண்டாம் கட்டத்தின் கீழ் பூந்தமல்லி புறவழிச்சாலை முதல் வடபழனி வரையிலான மெட்ரோ வழித்தடத்தின் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்தன. இந்த வழித்தடத்தை பிரதமர் நரேந்திர மோடி கடந்த அக்டோபர் 11, 2026 அன்று மக்கள் பயன்பாட்டுக்காக அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்தார்.
இதையும் படிக்க : Tamil Nadu Weather forecast: இன்று இந்த 4 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும் – வானிலை மையம் விடுத்த எச்சரிக்கை




மஞ்சள் வழித்தடம்’ என அழைக்கப்படும் இந்த மெட்ரோ ரயில் பாதையில் மொத்தம் 11 ரயில் நிலையங்கள் உள்ளன. இந்த நிலையில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கிய முதல் நாளில் மட்டும் 25,474 பேர் இதில் பயணித்ததாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.குறிப்பாக முதல் நாள் அன்று மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை, வெறும் 5 மணி நேரங்களில் மட்டும் 25, 474 பேர் பயணித்திருப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
மாதவரம்–சோழிங்கநல்லூர் பணிகள் தீவிரம்
இதற்கிடையே, மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான மெட்ரோ வழித்தடத்தின் கட்டுமானப் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்த வழித்தடமானது 47 கி.மீ. நீளமும் 46 ரயில் நிலையங்களும் கொண்டு உருவாகி வருகிறது. மேலும் இந்த வழித்தடத்தின் பெரும்பகுதி உயர்மட்டப் பாதையாக அமைக்கப்படுகிறது.
மாதவரம், ரெட்டேரி, கொளத்தூர், அண்ணா நகர், கோயம்பேடு, விருகம்பாக்கம், போரூர் வழியாக நந்தம்பாக்கம் வரை உயர்மட்டப் பாதை அமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளன. தற்போது தண்டவாளம் அமைக்கும் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. குறிப்பாக, கோயம்பேடு முதல் நந்தம்பாக்கம் வர்த்தக மையம் வரையிலான பகுதியில் 70 சதவீதப் பணிகள் முடிவடைந்துவிட்டதாகவும், மீதமுள்ள பணிகள் விரைவாக நடைபெற்று வருவதாகவும் மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க : ஒரு யூனிட் மின்சாரம் 35 ரூபாயா? மக்களின் சுமையை அதிகரிக்கும்.. பிரேமலதா எம்எல்ஏ கடும் எதிர்ப்பு!
நந்தம்பாக்கம் – ஆலந்தூர், வடபழனி – பனகல் பூங்கா ஆகிய பகுதிகள் முடிவடையும்போது, அவை மற்ற வழித்தடங்களுடன் இணைக்கப்படும். இதன் மூலம் மெட்ரோ சேவை மேலும் விரிவடையும். குறிப்பாக, தியாகராயநகருக்குச் செல்லும் பயணிகள் எளிதாக வந்து செல்ல முடியும். அதேபோல் சென்னை விமான நிலையம், ரயில் நிலையங்கள் உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளுக்கும் மாற்றுப் பாதையின்றி நேரடியாகப் பயணிக்க முடியும் என மெட்ரோ ரயில் அதிகாரிகள் தெரிவித்தனர்.
முன்னதாக கடந்த அக்டோபர் 11, 2026 அன்று பூந்தமல்லி மற்றும் வடபழனி மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி துவங்கி வைத்தார். அப்போது பேசிய முதல்வர் விஜய், மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று பிரதமருக்கு முதல்வர் விஜய் கோரிக்கை விடுத்தார்.