AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

மதுரை, கோவை மெட்ரோ ரயில் சேவை, கோதாவரி – காவரி இணைப்பு – பிரதமரிடம் முதல்வர் விஜய் கோரிக்கை

Madurai Coimbatore Metro Projects : சென்னை ஐஐடியில் ரூ.13,000 கோடி மதிப்புள்ள திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டங்களை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி மற்றும் முதல்வர் விஜய் இருவரும் பங்கேற்றனர். அப்போது மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று பிரதமருக்கு முதல்வர் விஜய் கோரிக்கை விடுத்தார்.

மதுரை, கோவை மெட்ரோ ரயில் சேவை, கோதாவரி – காவரி இணைப்பு  – பிரதமரிடம் முதல்வர் விஜய் கோரிக்கை
முதல்வர் விஜய்
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 11 Oct 2026 15:18 PM IST

சென்னை, அக்டோபர் 11 : தமிழ்நாடு வந்துள்ள பிரதமர் மோடி பூந்தமல்லி – வடபழனி இடையிலான மெட்ரோ ரயில் சேவையை தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து முதல்வர் விஜய்யுடன் மெட்ரோ ரயிலில் பிரதமர் மோடி பயணித்தார். இதனையடுத்து சென்னை ஐஐடி வந்த அவர், ஐஐடி வளாகத்தில் உள்ள ஜலகண்டேஸ்வரர் கோயிலில் பிரதமர் மோடி, முதல்வர் விஜய் வழிபாடு செய்தனர். அதனைத் தொடர்ந்து சென்னை ஐஐடியில் ரூ.13,000 கோடி மதிப்புள்ள திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டங்களை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சியில் இருவரும் பங்கேற்றனர்.

மதுரை, கோவை மெட்ரோ ரயில் சேவை

சென்னை ஐஐடியில் பிரதமர் மோடி, முதல்வர் விஜய் பங்கேற்ற நிகழ்ச்சி தேசிய கீதத்துடன் தொடங்கியது. இரண்டாவதாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. அதனைத் தொடர்ந்து, ரூ.13,000 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சி திட்டங்ளை பிரதமர் மோடிதொடங்கி வைத்தார். ரூ.3,700 கோடி மதிப்பிலான தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கு பிரதமர் மோடி, முதல்வர் விஜய் சேர்ந்து அடிக்கல் நாட்டினர்.

இதையும் படிக்க : பூந்தமல்லி – வடபழனி மெட்ரோ ரயில் சேவை தொடக்கம்.. பிரதமர் மோடி முதல்வர் விஜய் ஒன்றாக பயணம்!..

அதனைத் தொடர்ந்து பேசிய முதல்வர் விஜய், பூந்தமல்லி – வடபழனி மெட்ரோ ரயில் திட்டத்தை தொடங்கி வைத்த பிரதமர் மோடிக்கு நன்றி. ஒன்றிய அரசும் மாநில அரசும் இணைந்து செயல்படும்போது அதன் பலன் மக்களின் வாழ்வில் பிரதிபலிக்கும் சென்னை – தமிழ்நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் வளர்ச்சி சென்றடையும் நோக்கில் செயல்பட்டு வருகிறோம். மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

மேலும் பேசிய முதல்வர் விஜய், 2026 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் பெங்களூரு, ஹைதராபாத் மற்றும் சென்னை ஆகிய நகரங்களுக்கு இடையே 2 அதிவேக ரயில் வழித்தடங்களை அறிவித்ததற்காகப் பிரதமருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இத்திட்டங்கள் இப்பகுதிக்கு நிச்சயமாகப் பயனளிக்கும். மேலும் கோதாவரி – காவிரி நதிகள் இணைப்புத் திட்டமானது, தென்னிந்திய மாநிலங்களில் நீர் வளங்களை மேம்படுத்துவதற்கான ஒரு முக்கிய வாய்ப்பாக அமைகிறது. இத்திட்டத்திற்கு முன்னுரிமை அளித்து, இதனை ஒரு தேசியத் திட்டமாக மேற்கொள்ளுமாறு இந்திய அரசை நான் கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்தார்.

இதையும் படிக்க : மகளின் திருமணத்திற்காக சேர்த்து வைத்த 60 சவரன் நகைகள் கொள்ளை.. திருடன் கிடைத்தும் கிடைக்காத நகைகள்!!..

தொடர்ந்து பேசிய முதல்வர் விஜய், தமிழ்நாட்டின் மேற்கு மற்றும் தெற்குப் பகுதிகளின் எதிர்கால வளர்ச்சி மற்றும் பொருளாதார முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு, கோயம்புத்தூர் மற்றும் மதுரை நகரங்களில் மெட்ரோ ரயில் அமைப்பதற்கான திட்டத்தை மறுபரிசீலனை செய்யுமாறு பிரதமரை நான் கேட்டுக்கொள்கிறேன். மேலும், இரு மாநிலங்களின் நலன் கருதி, தமிழ்நாட்டின் ஓசூரிலிருந்து கர்நாடகாவின் பொம்மசந்திரா வரை மாநிலங்களுக்கு இடையிலான மெட்ரோ ரயில் வழித்தடத்தை அமைப்பதற்கான ஒப்புதலையும் கோருகிறேன் என்று தெரிவித்தார்.

 

Follow Us