Tamil Nadu Weather forecast: இன்று இந்த 4 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும் – வானிலை மையம் விடுத்த எச்சரிக்கை
Tamil Nadu weather today : தமிழகத்தில் அக்டோபர் 14, 2026 இன்று ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
சென்னை, அக்டோபர் 14 : தமிழகத்தில் அக்டோபர் 14, 2026 இன்று ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. மேலும் 21 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. அதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.
இன்று இந்த 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில், மத்திய வங்கக்கடல் பகுதிகள் வரை ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுவதாகவும், இதன் காரணமாக அக்டோபர் 14, 2026 இன்று ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாக்குமரி மாவட்டங்களில் கனமழை பெய்யக்ககூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : 234 தொகுதிகளிலும் இறங்கும் வீ த லீடர்ஸ்.. அதிரடியாக அறிவித்த அண்ணாமலை.. மாஸ் பிளானின் பின்னணி என்ன!




மேலும், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, விருதுநகர், திருவண்ணாமலை, கல்லக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர் ஆகிய 21 மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து அக்டோபர் 15, 2026 நாளை 17 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. அதன்படி தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் மலை பகுதிகள், கன்னியாகுமரி, மதுரை, திண்டுக்கல், திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கன மழை பெய்யக்கூடும் என எச்சரித்துள்ளது.
தமிழகத்தின் பிற பகுதிகளில் அநேக இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்ப்டுள்ளது.
இதையும் படிக்க : ஒரு ஸ்வீட் பாக்ஸ் கேட்டது குத்தமாடா.. வீட்டிற்கு வந்திறங்கிய பிரிட்ஜ், வாஷிங் மெஷின்.. சிக்கித்தவிக்கும் இன்ஸ்டா பிரபலம் வீரமணி..
அதனைத் தொடர்ந்து அக்டோபர் 16, 2026 நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், திருச்சிராப்பள்ளி, நாமக்கல், கரூர், அரியலூர், பெரம்பலூர், சேலம், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையை பொறுத்தவரை அக்டோபர் 14, 2026 நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும்
நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் எச்சரித்துள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33 முதல் 34 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 முதல் 27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்றும் வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கபபட்டுள்ளது.