AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

தொடங்கும் வடகிழக்கு பருவமழை.. அக். 14ஆம் தேதி முதல் கொட்டப்போகும் மழை – வானிலை ரிப்போர்ட்..

Rainfall Alert: சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இன்று (அக். 13) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35 முதல் 36 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 முதல் 28 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும்.

தொடங்கும் வடகிழக்கு பருவமழை.. அக். 14ஆம் தேதி முதல் கொட்டப்போகும் மழை – வானிலை ரிப்போர்ட்..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 13 Oct 2026 14:58 PM IST

அக்டோபர் 13, 2026:  தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்குவதற்கான சாதகமான சூழல் நிலவி வரும் நிலையில், வரும் அக்டோபர் 15 முதல் 19ஆம் தேதி வரை மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மழையுடன் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்றும் வீசக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அடுத்த இரண்டு நாட்களில் நாட்டின் எஞ்சிய பகுதிகளில் இருந்து தென்மேற்குப் பருவமழை முழுமையாக விலகுவதற்கான சூழல் உருவாகி வருகிறது. அதே நேரத்தில், தென்னிந்தியாவின் தென்பகுதிகளில் வடகிழக்குப் பருவமழை தொடங்குவதற்கான சாதகமான நிலை காணப்படுகிறது. தெற்கு இலங்கைக் கடலோரப் பகுதிகளுக்கு அப்பால், தென்மேற்கு வங்கக்கடலில் சுமார் 3.1 கி.மீ. உயரம் வரை வளிமண்டலச் சுழற்சி நிலவுகிறது. இந்தச் சுழற்சியிலிருந்து மத்திய வங்கக்கடல் பகுதிகள் வரை காற்றழுத்தத் தாழ்வுப் பாதையும் நிலவுகிறது.

 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

இன்று (அக். 13) சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழைக்கு வாய்ப்புள்ளது. ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.

அக்டோபர் 14 கொட்டப்போகும் கனமழை

நாளை (அக். 14) ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, விருதுநகர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஏனைய தமிழகத்தில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அக்டோபர் 15 முதல் 19 வரை கனமழை எச்சரிக்கை

அக்டோபர் 15ஆம் தேதி தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப் பகுதிகள், கன்னியாகுமரி, மதுரை, திண்டுக்கல், திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

அக்டோபர் 16ஆம் தேதி நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், திருச்சிராப்பள்ளி, நாமக்கல், கரூர், அரியலூர், பெரம்பலூர், சேலம், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

மேலும் படிக்க: பாய்ந்து வந்த சொகுசு கார்.. ஆட்டோ, சரக்கு வாகனம் மீது மோதி விபத்து.. கட்டுக்கட்டாக சிக்கிய பணம்.. போலீஸ் விசாரணை!

அக்டோபர் 17ஆம் தேதி திண்டுக்கல், திருச்சிராப்பள்ளி, நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

அக்டோபர் 18ஆம் தேதி திருவண்ணாமலை, புதுக்கோட்டை, கள்ளக்குறிச்சி, திண்டுக்கல், மதுரை, நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, நாமக்கல், திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர், கடலூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. காரைக்கால் பகுதிகளிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளது.

அக்டோபர் 19ஆம் தேதி திண்டுக்கல், திருச்சிராப்பள்ளி, கரூர், அரியலூர், பெரம்பலூர், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு, திருப்பத்தூர், நாமக்கல், சேலம், கோயம்புத்தூர், நீலகிரி மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

மேலும் படிக்க: “வரலாற்றில் இல்லாத வகையில் ஒரு யூனிட் மின்சாரம் ரூ.35-க்கு மின் கொள்முதலா?”.. தவெக அரசை விளாசிய இபிஎஸ்!!

வெப்பநிலை எப்படி இருக்கும்?

அக்டோபர் 13 முதல் 15ஆம் தேதி வரை உள் தமிழகத்தின் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். ஏனைய தமிழகப் பகுதிகள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் வெப்பநிலை இயல்பை ஒட்டி இருக்கும். அக்டோபர் 16 மற்றும் 17ஆம் தேதிகளில் வெப்பநிலை இயல்பை ஒட்டி இருக்கக்கூடும்.

சென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இன்று (அக். 13) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35 முதல் 36 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 முதல் 28 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும்.

நாளை (அக். 14) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33 முதல் 34 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 முதல் 27 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Follow Us