AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

ஒரு யூனிட் மின்சாரம் 35 ரூபாயா? மக்களின் சுமையை அதிகரிக்கும்.. பிரேமலதா எம்எல்ஏ கடும் எதிர்ப்பு!

Premalatha Vijayakanth : தமிழக அரசு ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ. 35- க்கும் கொள்முதல் செய்யும் முடிவுக்கு தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கடும் கண்டனைத்தை பதிவு செய்துள்ளார். அவர் கூறியதை இந்தப் பதிவில் விரிவாக பார்க்கலாம் .

ஒரு யூனிட் மின்சாரம் 35 ரூபாயா? மக்களின் சுமையை அதிகரிக்கும்.. பிரேமலதா எம்எல்ஏ கடும் எதிர்ப்பு!
பிரேமலதா விஜயகாந்த்
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 13 Oct 2026 21:42 PM IST

தமிழக அரசு ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ. 35- க்கு வாங்க உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இதற்கு அரசியல் கட்சியினர் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்து வரும் நிலையில், தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் எம். எல். ஏ. கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், கடந்த காலங்களில் ஒரு யூனிட் மின்சாரம் ரூ. 3- க்கு கொள்முதல் செய்யப்பட்ட நிலையில் மென்மேகை மாநிலமாக இருந்த தமிழ்நாடு தற்போது ஒரு யூனிட் மின்சாரம் ரூ. 35- க்கும் கொள்முதல் செய்யும் நிலை ஏற்பட்டது ஏன். தமிழகம் எந்த திசையை நோக்கி பயணிக்கிறது என்று மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். தமிழகத்தில் ஒருபுறம் மின்வெட்டு, மற்றொருபுறம் மின் கட்டண உயர்வு இருந்து வருகிறது.

ஒரு யூனிட் மின்சாரம் 35 ரூபாயா

இது தமிழக மக்களுக்கு பல்வேறு சிரமங்களை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில், தனியாரிடம் இருந்து ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ. 35 என்ற அதிக விலை கொடுத்து வாங்குவது எந்த வகையில் நியாயமானதாகும். இந்த விவகாரத்தில் தமிழக அரசும், முதல்வர் விஜயும் உரிய விளக்கம் அளிக்க வேண்டும். ஏற்கனவே மின்துறை கடனில் இருக்கும் நிலையில் தமிழகம் சுமார் ரூ. 10 லட்சம் கோடி கடன் இருப்பதாக கூறப்படும் சூழலில் தனியாரிடம் தொடர்ந்து அதிக தொகை கொடுத்து மின்சாரம் வாங்குவது ஏன்.

மேலும் படிக்க: 234 தொகுதிகளிலும் இறங்கும் வீ த லீடர்ஸ்.. அதிரடியாக அறிவித்த அண்ணாமலை.. மாஸ் பிளானின் பின்னணி என்ன!

மின் உற்பத்தி அதிகரிப்பு திட்டங்களை செயல்படுத்த வேண்டும்

இதன் மூலம் தமிழகத்தின் நிதி சுமை மேலும் அதிகரிக்கும். இந்த கொள்முதல் நடவடிக்கையின் அவசியம் என்ன. விலை நிர்ணயம் மற்றும் அதன் பின்னால் உள்ள காரணங்கள் குறித்து அரசு வெளிப்படையாக விளக்கம் அளிக்க வேண்டும். தமிழக மக்களின் நலனை கருத்தில் கொண்டும், மின்சார உற்பத்தியை அதிகரிப்பதற்கான புதிய திட்டங்களை அரசு உடனடியாக செயல்படுத்த வேண்டும். உற்பத்தி திட்டங்களை முன்னெடுப்பதை விடுத்துவிட்டு மின் கட்டணத்தை உயர்த்துவதும், மின் வெட்டுக்கு வழி வகுப்பதுமாக இருந்து வருகிறது.

அதிக விலைக்கு மின்சாரம் வாங்குது மக்களின் சுமையை அதிகரிக்கும்

தனியாரிடம் அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்குவது மக்களின் சுமையை மேலும் அதிகரிக்கும். மக்களின் வரிப்பணத்தையும், மாநிலத்தின் நிதி நிலையையும் கருத்தில் கொண்டு மின்சார உற்பத்தியை பெருக்கி நியாயமான விலையில் தடை இல்லாத மின்சாரம் வழங்குவதே அரசின் கடமை ஆகும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க: பாஜகவிடம் பல கோடி.. மின்சார கொள்முதலுக்கு பல ஆயிரம் கோடி.. முதல்வர் விஜயின் ஆந்திர பயணம் இதுக்குதானா.. சபாநாயகர் அதிரடி அட்டாக்!

Follow Us